Author: Thana

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. குசல் மெண்டிஸ் (245), நிஷான் மதுஷ்க (205) ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர். இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 211 ஓட்டங்களை துரத்திய அயர்லாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதன்படி, இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Read More

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பத்தரமுல்ல, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி வரை நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமறிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் நேற்றைய தினம் சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் திரு.சிங்கராஜ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ், அவ்வமைப்பில் பயணிக்கும் பதுளை மாவட்ட இணைப்பாளரும் ஆரம்பகால உறுப்பினருமான திருமதி.ஜெயந்தி அவர்களின் கணவர் திரு.ஜெயகுமார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு, சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். அத்தோடு அமைப்பில் கௌரவ செயலாளராக செல்வி.லதா அவர்களும், உபதலைவராக திரு சிவகுமார் அவர்களும் பதவியேற்று ஒராண்டு பூர்த்தி ஏய்தியுள்ளார்கள். அவர்களது சிறப்பான சேவையை பாராட்டி உபதலைவர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 பாடசாலை மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாணவர்களிற்கு வழங்கப்பட்ட பகல் உணவு ஒவ்வாமைக்கு காரணமாக உணவருந்திய வேளை மாணவர்கள் மயக்கமுற்று , வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போடும் செயற்பாடு காரணமாக உணவருந்தியவர்களில் சுமார் 31 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று வலி உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .

Read More

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம் (வயது 100) எனும் மூதாட்டியே நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 06 முதியவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து முதியவர்கள் உயிரிழந்த நிலையில், 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதேவேளை குறித்த சம்பவத்தில் வீட்டின் வளர்ப்பு நாய் மீதும் கொலையாளி தாக்குதல் நடாத்தி இருந்ததில், காயங்களுக்கு உள்ளான நாயும் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 51 வயதான புங்குடுதீவு வாசி ஒருவர் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை இரவு…

Read More

விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்தார். பெருந்தோட்ட…

Read More

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க ஆகியோரின் தலைமையில்  (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கைத்தொழிலை சீரான முறையில் முன்னெடுத்து, நாட்டின் கோழி மற்றும் முட்டைத் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்வது மற்றும் நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்குவது என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. கால்நடைத் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் சோளத்தில் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அளவு, எதிர்காலத்தில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, இறக்குமதி செய்ய வேண்டிய சோளத்தின் அளவு தொடர்பான அறிக்கையொன்றை தயாரிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த…

Read More

உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இன்று முதல் மே 02 வரை ஒன்லைன் முறையில் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம்- ஆணைக்கோட்டை சாவற்காடு – அந்திக்குழி அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில் வளம் கொண்ட எம் மண்ணைக் காவல் செய்யும் பெருமானே வரும் துன்பம் துடைத்தெறிந்து வாழவைக்க வரவேண்டும் வீரமிகு மனநிலையை நாமடைய அருள்வாய் சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை நித்தமும் விழித்திருந்து காவல் செய்யும் பெருமானே அதர்மங்கள் அண்டாமல் வாழ வைக்க வர வேண்டும் அச்சமில்லா மனநிலையை நாமடைய அருள்வாய் சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை வட இலங்கைக் காவலனாய் இருக்கின்ற பெருமானே வளம் பெற்று நாம்வாழ வழி அமைக்க வர வேண்டும் ஆற்றல் கொண்ட மனநிலையை நாமடைய அருள்வாய் சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை அருஞ்சுனங்கள் அருகு கொண்டு காவல் செய்யும் பெருமானே ஆதரித்து என்றுமெம்மை வாழவைக்க வர வேண்டும் அமைதி கொண்ட மனநிலையை நாமடைய அருள்வாய் சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை, அமைச்சர் மனுஷ நாணயக்கார சபையில் ‘புலி’ (கொட்டியா) என விளித்ததையும் அமைச்சர் கண்டித்துள்ளார். கொழும்பில் அமைச்சில் (27.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜீவன் மேலும் கூறியவை வருமாறு, ” பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. அந்தவகையில் ஐ.எம்.எவ். அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை (28) வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அரச பங்காளிக்கட்சி என்ற வகையில் அதற்கு ஆதரவு வழங்கப்படும். ஐ.எம்.எவ். கடன்…

Read More