Author: Thana

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

பலாங்கொடை தும்பகொடை பிரதேசத்தில் நேற்று இரவு (29.04)ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி. ஜிப் வண்டி ஒன்று பாதையில் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை லங்காபரன தோட்டத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த ஜிப் வண்டியின் சாரதியை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு சிவன் திருக்கோயில் ஆதிசிவன் கோயில் கொண்ட அருள் பொங்கும் கோயில் அனைத்துயிர்கள் உள்ளாடும் வள்ளல் உறை கோயில் கேட்கின்ற வரங்க ளெல்லாம் தந்தருளும் கோயில் பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில் தென்கிழக்கு திசையிலுள்ள திருக்கோயில் கருணை வெள்ளம் பொங்குகின்ற அன்பர் உறை கோயில் கவலைகளை வேரறுக்கும் அண்ணல் உறை கோயில் பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில் கடலலையின் ஓசையினை உள்வாங்கும் கோயில் காலத்தை வென்ற எங்கள் இறையுறையும் கோயில் கோல் கோணா அருளளிக்கும் ஐயன் உறை கோயில் பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில் அண்டங்களை ஆடச் செய்யும் அப்பன் உறை கோயில் ஆறுதலைத் தருகின்ற நாதன் உறை கோயில் அந்தரத்தில் நின்றாடும் அண்ணல் உறை கோயில் பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில் தமிழ் தந்த பெருமானார் உறையும் திருக்கோயில் தாராள மனம் தந்து வாழவைக்கும் கோயில்…

Read More

பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேபகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

கண்டியை தலைமையாக கொண்டு செயற்படும் அப்துல் கலாம் நம்பிக்கை நிதியத்தின் சிறந்த சேவை ஆற்றிய மாகாண பணிப்பாளர்கள் மாவட்ட பணிப்பாளர்கள் பிரதேச இணைப்பாளர்கள் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டு பதக்கம் அணிவித்து நினைவு சின்னம் வழங்கிய நிகழ்வு கண்டி ரோயல் விருந்தகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் அறகட்டளையின் தலைவர் அகில இலங்கை சமாதான நீதிவான் கருநாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். படங்கள் : கந்தையா உதயகுமார் மடுல்கலை நிருபர்

Read More

இலங்கை கலைத்துறையில் முக்கிய இடம்பிடித்த கலாபூஷணம் K.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை இடம்பெறவுள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.அவரது இறுதிக் கிரியைகள் தமிழ்நாடு – காரைக்குடியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பல தசாப்தங்களாக இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் சாதனை படைத்துச் சகல சமூகத்தினர் மத்தியிலும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று (29) காலை காலமானார்.அவர் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவில் தனது புதல்வரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த சில தினங்களாக தீவிர சுகவீனம் காரணமாக பாதிப்பட்டிருந்த கலைஞர் K.சந்திரசேகரன் இன்று காலமானதாக உறவினர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.அனுபவமிக்க பல்துறைக் கலைஞர் என்றாலும் புதியவர்களையும் கலையுலகில் சோபிக்க மனம் திறந்து வழிகாட்டியவராக திகழ்ந்தார்.அமரர் மரிக்கார் ராம்தாஸ் எழுதிவந்த “கோமாளிகள்” வானொலி நாடகத் தொடர் முதல் அண்மைக்காலமாக வெளியான பல படைப்புகளிலும் அவர் தனது பங்களிப்பை…

Read More

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் இந்த செயலை டிக் டொக் வீடியோவாக உருவாக்கி, புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் வீடொன்றில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் நாளை (30) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ரத்மலானே குடு அஞ்சு, வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரம் வரையிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எவரேனும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Read More