Author: Thana
மகத்தான உழைப்பில் இருந்து பெறும் ஊதியத்தை வீணாக செலவழிக்காது முறையாக திட்டமிட்டு செலவிட முயற்சி செய்வோம்.
உழைப்பின் பெருமிதம்! மக்களின் அடையாளமாக விளங்கும் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கு மட்டுமே சிலையும் அவர்களுக்கு என சிறப்பான தினமும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மனிதர்களுக்கும் இந்த நாட்டையே தனது தோளில் சுமந்து நிற்கும் உழைப்பாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கொண்டாடப்படும் ஒரு தினம் தான் உழைப்பாளர் தினம். ஆண்டு தோறும் மே 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான ஓர் தினம் எவ்வாறு உருவானது? முன்பு எல்லா மக்களும் இடைவெளி இல்லாமல் உழைத்து கொண்டே தான் இருந்தார்கள், அதனை எதிர்க்கும் விதமாக அமெரிக்காவில் எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள். இந்த போராட்டம் 1886ஆம் ஆண்டு நடந்தது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராடினர். இதில் பல உழைப்பாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தொழிலாளர்கள்…
சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று உலகளாவிய ரீதியில் மே தினம் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் தினமாகவும் கொண்டாடப்படும் உலக தொழிலாளர் தினமானது, 18ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் 12 முதல் 18 மணி நேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கும், தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியே மே தினம் உருவாக காரணமாக அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம்வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின. 1886 ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் ‘எட்டு மணித்தியாலம்’ போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில்…
மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம்- மஸ்கேலியா மொக்கா தோட்டம்- அருள்மிகு அம்மன் திருக்கோயில் வளம் நிறைந்த மலையகத்தின் மத்தியிலே கோயில் கொண்ட எங்கள் அம்மா வளம் கொண்ட நல்வாழ்வை தந்தருள கருணை செய்வாய் வாட்டமில்லா வாழ்வுதர விரைந்திடுவாய் மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா மொக்கா பெருந்தோட்டம் மத்தியிலே கோயில் கொண்ட எங்கள் அம்மா பெருமைமிகு பெருவாழ்வை தந்தருள கருணை செய்வாய் துன்பமில்லா வாழ்வு தர விரைந்திடுவாய் மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா மலைசூழ்ந்த பெருந்தோட்டம் வந்துறையும் எங்கள் அம்மா மதிதவறா நெறி நின்று வாழ்வதற்குக் கருணை செய்வாய் வெற்றி கொண்ட வாழ்வுக்கு வழி திறக்க விரைந்திடுவாய் மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா வாழ்விற்கு ஒளியேற்றி வழி காட்டும் எங்கள் அம்மா வழிதவறா நெறிநின்று வாழவைக்கக் கருணை செய்வாய் தோல்விகளைத் தடுத்து நல்வாழ்வுக்கு உதவிடவே விரைந்திடுவாய் மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா…
இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய விலை Rs.333, 95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365, டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310 சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330: எரிசக்தி இராஜாங்க டீ வி ஷானக இந்த விபரங்களை வழங்கியுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டா ஆகியன சட்ட விரோதமாக முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி பதுக்கி வைத்துள்ளதாக ஆக்கரத்தனை பகுதியில் முகாம் இட்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய உடன் அப்பகுதிக்கு விரைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மிகவும் சுட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த (shot gun) ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் (9) ஆகியன விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் ஒன்பது தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் விஷேட அதிரடி படையினர் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிசார் மேற்கொண்டு வருதுடன் மேலதிக விசாரணைகளையும்…
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில் நீரில் மிதந்தவாறு ஆணின் சடலமொன்று 30 இன்று காலை 11 மணி அளவில் தலவாக்கலை பொலிசார் மீட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்படியதற்கு பொலீசார் விரைந்து சென்றுள்ளனர். சடலம் இதுவரை இனம் காணப்படவில்லை. இறந்தவரை சடலத்தை நீதிமன்ற அனுமதியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோர்டன் – உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கோரிக்கை
டி சந்ரு நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து பிலக்வூல் சந்தி ஊடாக உலக முடிவு பகுதிக்கு உல்லாச பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் ஒன்று (29) மாலை வீதியில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த பஸ்ஸைசெலுத்திய சாரதி காயங்களுக்கு உள்ளாகியதுடன் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வீதியில் ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியாது குறித்த பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆகையால் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனவே ,விபத்துக்கு உள்ளான பஸ்ஸை அப்புறப்படுத்தும் வரை இவ் வீதி ஊடாக உலக முடிவு பார்க்க பயணிக்கும் பயணிகள் மாற்று வழியாக ஒஹிய பகுதியில் இருந்து உலக முடிவுக்கு வரும் பிரதான வழியை பயன் படுத்துமாறு …
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடாங்வத்தை வீதி பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை சுத்தா என்று அழைக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் மஹியங்கனை பொலிஸார் கைக்குண்டுடன் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சிறுவர் துஸ்பிரயோகம் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக மஹியங்கனை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இதன்போது குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் தொடாங்வத்தை பூஜாநகர் வீதியில் குறுக்கே அமைந்துள்ள வீதியில் நீர் வினியோகிக்கும் இடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த வேளை மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்திய போது பாழடைந்த வீட்டில் மறைத்து இருந்த சந்தேக நபரை கைது செய்து சோதனைக்கு உட்படுத்தி போது சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் வைத்திருந்த கைக்குண்டினை மஹியங்கனை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் 29 வயதுடைய பூஜாநகர் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.…
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (29) பிற்பகல் 2.30 வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.