Author: Thana

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், நுவரெலியாவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டிடங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலணியொன்றை நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவையின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் 01.05.2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை விதிக்கவும் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் முறைசாரா அபிவிருத்தியினால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக கடந்த பத்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும் போது ​​நாட்டில் மருந்துகளின் தேவை 100ம% பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், குறிப்பிட்ட அளவு மருந்துப் பற்றாக்குறை எப்போதும் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. நாட்டில் உயிர்காக்கும் மருந்துகளின் அளவு குறைவில்லாமல் தொடர்ச்சியாக இருந்ததை சுட்டிக்காட்டிய…

Read More

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் கடந்த 22.04.2023 திகதியன்று COPRICORN COLLEGE இனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஹோல்புரூக் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. . குறித்த நிகழ்வில் பல்வேறு கலாம்சங்கள் இடம்பெற்றமையோடு விழா சிறக்கும் வகையிலாக கல்வியியலாளர்கள் ,பொலீஸ் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் என் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

வடமாகாணம்- வவுனியா மாவட்டம், வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் பழமை மிகு தமிழ் மண்ணில் கோயில் கொண்ட சிவனே பழம் பெருமை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய் எம்பழமை உன்னுடனே இணைந் துள்ளதைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே மலையுச்சியில் இருந்தருளும் வல்ல எங்கள் சிவனே மாண்புமிகு உன்னிருப்பை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய் மாதவனே உன் பழமை பார் அறிந்ததைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே சிவபூமி என்ற பெயர் கொண்ட நம் நாட்டில் காட்சிதரும் சிவனே சீர்மைமிகு உன் கருணை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய் இலங்கையின் வரலாறு உன்னுடனே இணைந் துள்ளதைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே காலத்தால் உலகறிந்த காவலனே சிவனே கனிந்து வந்த காலத்தாலுன்னை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய் காலமெல்லாம் உன்பெருமை நிலைத்து நிற்குமைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே தக்கனின் கொட்டத்தை…

Read More

மாத்தளை – உக்குவெல பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெஹிதெனிய மற்றும் பல கிராமங்களுக்கு (08 கிராமங்களுக்கு) நேற்று கடும் காற்று மற்றும் கனமழை காரணமாக 33 வீடுகளுக்கு பாரிய மரங்கள் வீழ்ந்தமையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இச்சீரற்ற காலநிலை 33குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன் இதில் ஆறு (06) குடும்பங்களைச் சேர்ந்த இருபதுபேர் (20) அயலவர் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதம அதிகாரி திரு. அமரவீர அவர்கள் தெரிவித்தார். மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதம அதிகாரி Mr. Amaraveera TP No. 773957890

Read More

கிழக்குப் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தால் மலையக தியாகிகள் தினம் மற்றும் மலையக 200 வருட பூர்த்தியின் நினைவூட்டலும் நேற்றையதினம் (24) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மலையக தியாகிகளுக்கான பொதுச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியதோடு மலையகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மாற்றத்தை ஏற்க மனம் மறுக்கிறது. மலையகம் என்ற அடையாளத்தை இழந்து விடுவோமோ என்று தேயிலைத் தோட்டத்தில் வளர்ந்த கள்ளிச் செடிகளாய் இருநூறு ஆண்டுகள் இன்றோடு கடந்த நிலையில். மலையக தமிழ் மாணவர் ஒன்றியம் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதைப் பற்றி பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தினார். “எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதும் உண்மையாகும்” என அவர்…

Read More

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிட்டி 96 பிரிவில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் மீதும்பிட்டி 96 பிரிவிற்கு சென்று சந்தேகத்துக்கிடமான இடத்தை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். அத்துடன் 36 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Read More

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை முன்னேற்றுவதற்காக விசேட நலன்புரி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு வந்து தொழில் முயற்சியாளர்களாக பணியாற்ற எதிர்பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 2 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்; “.. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் வீட்டுப் பணியாளர்களின் குடும்பங்களின் நிலை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்ந்து அவதானித்து வருகின்றது. பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்புடன் கையாள்கிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைக்குச் செல்லும் அனைத்து தொழிலாளர்களின் தரவுகளும் பணியகத்தின் கணினி அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. அதேபோன்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ், குடும்பங்களின் நலன் மற்றும் பாதுகாப்பு அனைத்து…

Read More