Author: Thana

மாத்தறை திக்வெல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 7 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 24 தொடக்கம் 26 வரை கண்டி பிலிமத்தலாவ தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் டயகம , சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் இருந்து இரண்டு மாணவிகள் போட்டியில் பங்குபற்றி இருந்தனர். அவர்களில் தரம் 13ல் கல்வி பயிலும் செல்வி எஸ்.சபிலாஷினி (senior age group,-54-57 weight ) எடை பிரிவில் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று தங்கபதக்கத்தை வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் கண்டி ஹேமாமாலனி பெண்கள் உயர் பாடசாலை மாணவியுடன் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. அத்தோடு செல்வி பி.தினேஸ்குமாரி என்ற மாணவி ஜூனியர் வயது பிரிவில் (45-48 எடைபிரிவில்) போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இம்மாணவியும் கண்டி ஹேமாமாலனி உயர் பாடசாலை மாணவியுடனே காலிறுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குபற்றிய இவ்விருவருமே பதக்கங்களை சுவீகரித்தனர். இம்மாணவிகளுக்கான பயிற்சிகளை வழங்கிய பொக்ஸிங் பயிற்றுவிப்பாளர்…

Read More

கம்பளை, உடுவெல்ல பிரதேசத்தில் பெரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமான வழங்கப்பட்டதால்  ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். கம்பளை உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி பகுதியை சேர்ந்த ஷியாமலி தருஷிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள ஒரேயொரு கிராமிய வைத்தியசாலையான குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பெற்றோர் வைத்தியசாலை வைத்தியர் பரிந்துரைத்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்துச் சென்ற போதிலும் சிறுமியின் நோய் குணமாகவில்லை. இரண்டாவது மருந்திலும் குணமடையாததால் சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பெற்றோர் தீர்மானித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த கம்பளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமிக்கு குருந்துவத்தை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளையும் பரிசோதித்துள்ளனர். அதன்படி, சிறுமிக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட…

Read More

மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம்- பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் பாணதுறை நகரினிலே கோயில் கொண்ட மால்மருகா பாரினிலே அருளாட்சி நிலைக்க ஏற்றுவழி ஆற்றிடுவாய் பீதியின்றி, பிணியின்றி வாழ்வதற்கு கருணையும் செய்வாய் பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே தீயபகை, கொடுமைகளைத் துடைத் தெறிய வருபவனே தீயவர்கள் தீச் செயல்கள் அழித்து எமைக் காத்திடுவாய் தொல்லையின்றி, தோல்வியின்றி வாழ்வதற்கு கருணையும் செய்வாய் பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே மேற்கிலங்கைக் கரையினிலே வீற்றிருக்கும் சிவன் மகனே மேதினியில் மாண்புடனே வாழும் வழி தந்திடுவாய் மேன்மையுடன் வாழ்வதற்கு கருணையும் செய்வாய் பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே வள்ளி தெய்வானையருடன் காட்சிதரும் உமைமகனே வளமான எதிர்காலம் நிலைக்க வழி ஆற்றிடுவாய் வெற்றியுடன் வாழ்வதற்கு கருணையும் செய்வாய் பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே சூரனை அடக்கி அறங்காத்த தீரமிகு வேலவனே தீராத துன்பங்களைப் போக்கி வாழவழி திறந்திடுவாய் துரத்தி வரும் துன்பங்களைத் தடுத்து வாழக் கருணையும் செய்வாய்…

Read More

கடந்த 2020 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் தளிர் அமைப்பு கொட்டக்கலை டிரைட்டன் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளது. இவ்வமைப்பானது அப்பகுதி வாழ் இளைஞர்கள் தங்கள் பிரதேசத்தில் ஏதேனும் நற்செயல் செய்ய வேண்டும், பிரதேசத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற கருப்பொருளில் இந்த அமைப்பை ஆரம்பித்து பிரதேசத்தில் கவனிப்பற்ற நிலையில் காணப்பட்ட நூலகத்தின் புனரமைப்பு வேலைகள் மேற்கொண்டதோடு, டிரைட்டன் பகுதின் அடையாளமாக இருக்கும் தெற்ப குளத்துக்கு பெரண்டினா அமைப்பின் மூலம் சிறிய படகு வாங்கித்தந்து பிரதேச அபிவிருத்திற்கு வித்திட்டது. ஒரு பிரதேசத்தை கல்வி ரீதியாகதான் உயர்த்த முடியும் என்கின்ற எண்ணக் கருவில் அப்பகுதியில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடாத்துதல், மலையகத்தின் கல்வி கற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் விசேட கருத்தரக்குகள் இலவசமாக நடாத்துதல், மாணவர்களுக்கு தலைமைத்துவ பண்பினை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. மேலும் இப்பிரதேசத்தில் கைத்தொழிலை…

Read More

டி.சந்ரு செ.திவாகரன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்தநிலையில் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் உயிரிழந்த இந்திய பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் கடந்த 25 திகதி நுவரெலியாவிற்கு வந்து மாலை 6:30 மணியளவில் தங்கியிருந்த நுவரெலியா பிலக்பூல் விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ப்பட்டபோது ,குறித்த இந்திய பிரஜை மாரடைப்பின் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் மரணித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Read More

இன்று (26) முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மேல் மாகாணம், உள்ளூராட்சி நிறுவனங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார். இன்று (26) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ‘டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மேல் மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்’ என்ற தலைப்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் இவ்வருடம் 28,446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 76,889 ஆகும். இந்த வருடத்தின் சில மாதங்களில் மாத்திரம் குறிப்பிடத்தக்க அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சமூக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். தற்போது வாரத்திற்கு சுமார் 1800 நோயாளர்கள்…

Read More

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில்மியாபுர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கும் கெப்பட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொறக்காப்பத்தன பகுதியில் நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 11.6 அங்குல நீளமும் 14 அங்குல சுற்றளவும் 500 கிராம் எடையும் கொண்ட வெள்ளைஇ மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் டைட்டானியம் வகையைச் சேர்ந்த வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராமு தனராஜா

Read More

தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.   நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.   இவற்றில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் மற்றைய இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் நிர்மாணிக்கப்படும்.   கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.   அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 02, யூனியன் பிளேஸ் பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில்  நேற்று (25) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.   அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில்…

Read More

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்…

Read More