Author: Thana
சென்றெகுலர்ஸ் கங்கா இளைஞர் கழகம் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு விழாவில் இன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடி சுற்றுப்போட்டி இடம்பெற்றது. சென்றெகுலர்ஸ் தோட்ட வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறும் இந்தப்போட்டியின் ஆரம்பத்தில் அதனை நினைவுறுத்தும் வகையில் நினைவு சின்னம் வைக்கப்பட்டு அதில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. நினைவு சின்னத்தில் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நு/லோவர்கிறன்லி தவி அதிபர் K.பாலகிருஸ்ணன் அவர்களும் போட்டியின் மத்தியஸ்தராக கலந்து சிறப்பித்த நுவரெலிய கபடி சம்மேளனத்தின் தலைவர் ஆசிரியர் வேதநாயகம் சுதர்சனன் அவர்களும் உத்தியோகபூர்வமாக தமது கையொப்பத்தை இட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து விநோதயம் அறநெறி கல்வியகத்தின் பொறுப்பாசிரியர் அ.ரெ.அருட்செல்வம்,கங்கா இளைஞர் கழகத்தின் ஆலோசகர் K.சுரேஸ்குமார்,விளையாட்டு குழு தலைவர் S.ஹிந்துஜன், கங்கா விளையாட்டு கழகத்தின் சார்பில் திரு.S.மொரிஸ்,திரு.P.பெரி யசாமி, சென்றெகுலர்ஸ் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் உத்தியோகத்தர் திருமதி சுந்தரி, சமூக ஆர்வலர்ஃ இரா.விஜயகுமாரி ஆகியோரும் தமது…
இலங்கை சதுரங்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 தேசிய மட்ட சதுரங்க போட்டி கடந்த 2023.04.6,7,8,9,ஆகிய நான்கு நாட்கள் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையிலுள்ள முன்னனி பாடசாலைகளுடன் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் போட்டியிட்டு மிகச்சிறப்பான திறமைகளை வெளிக்காட்டினர்.சதுரங்க போட்டியில் எங்களாலும் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்,போட்டியில் பங்குபற்ற உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும்,பாடசாலை நிர்வாகத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தில், நேற்று (8) இரவு ஹபரணை – ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளன.இதனால் குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.ஹுருலு சூழலியல் பூங்காவில் இருந்து வந்த காட்டு யானைகளே தொடரூந்தில் மோதியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடரூந்து தடம் புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், தொடரூந்து மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சிரியா மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி பல ரொக்கெட்டுகள் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. காசா, லெபனான், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை உள்ளிட்ட பல முனைகளில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இன்று அதிகாலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படையணிகளால் ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழு, ஹமாஸுக்கு சொந்தமானது என கூறிய பல தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மட்டக்களப்பு – படுவாங்கரை, தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த காட்டு யானையை மீட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.உயிரிழந்த யானை சுமார் 10 – 15 வயது மதிக்கத்தக்கதாகும்.குறித்த யானை மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். 12 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும், அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.சீனாவின் சினோபெக் அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில்; எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதித்தால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறையலாம்,எனவே அரசாங்கத்தின் எரிபொருள் செலவும் குறைக்கப்படலாம் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போது அரசாங்கம் சராசரியாக மாதமொன்றுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருளுக்காக செலவழித்து வருகிறது.இந்தநிலையில் குறித்த மூன்று நிறுவனங்களும் சராசரியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான…
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜனபெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற MP ஒருவர் என 10 பேர் புதிதாக அமைச்சர்களாகவுள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் யார் அமைச்சு பதவியை எடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. ஆயினும் அந்த கட்சியில் இருந்து 8 பேரின் விபரங்கள் அமைச்சு பதவிகளுக்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ராஜித்த சேனாரத்ன அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமனலவெவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். சமனலவெவவை பார்வையிடுவதற்காக அந்த காதல் ஜோடி, மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. ஓரிடத்தில் நின்றிருந்த அந்த நபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கூறியுள்ளார். தான் பொலிஸ் அதிகாரி என்றும் போதைப்பொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார். அதன்பின்னர், அந்த யுவதியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று முழு நிர்வாணமாக்கி, துஸ்பிரயோகம் செய்துள்ளார். அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யுவதியை நிர்வாணமாக படம்பிடிக்க முயற்சித்துள்ளார்.…
பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவிற்கு தனிப்பட்டவகையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவரது ஆலோசனையின் பேரில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் பதுளை பிலக்கடை பகுதியில் வைத்து 45 வயதுடைய புஸ்ஸலாவ தல்தென்ன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது மலைக்குருவி கூட்டுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் புஸ்ஸலாவ தல்தெனிய பகுதியில் உள்ள சிறிய கற்குகைகள், சிறிய சுரங்கங்களுக்குள் இருந்து கூடுகளை உடைத்து எடுத்து வந்ததாகவும் இதனை கொழும்பு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காகவே கொண்டு பதுளைக்கு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் வனவிலங்கு கட்டளை சட்டத்தின் படி இலங்கையில் பாதுகாக்கப்படும் பறவைகளில் இதுவும் ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா