Author: Thana
இந்தியாவில் அசாம் குவாடியில் இடம்பெற்று வரும் மூன்றாவது மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய மெய்யப்பன் சசிகுமார் பத்தாயிரம் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் 3000 மீட்டர் தடை தாண்டி போட்டியிலும் தங்கம் வென்ற அவர் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இலங்கை சார்பில் கலந்துகொண்ட பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் வேகநடை போட்டி மற்றும் சுத்தி எறிதல் போட்டியிலும் தங்க பதக்கங்களையும் பருதி வட்டம் வீசுதலில் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.மேலும் மற்றுமொரு இலங்கை வீரரான அசாங்க திசாநாயக்க ஐயாயிரம் மீட்டர் மற்றும் நாநூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் தங்கப்பதங்ககளையும், எண்ணூறு மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார். மொத்தமாக இலங்கை சார்பாக பங்குப்பற்றிய மூன்று வீரர்களும் 06 தங்கம் உட்பட மூன்று வெள்ளி பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளனர்.
லிந்துல இராணிவத்தை வீர தமிழர் நற்பணி மன்றத்தின் நூல் நிலையத்துக்கு ஒடிங்டன் தேயிலை உற்பத்தி நிலையத்தின் உதவியுடன் தலவாக்கலை லிந்துல நகர சபையில் பொது நூலகத்திலிருந்து சுமார் 150 புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன. அதனுடன் வேல்ட் விஷன் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கான ஆறு தம்ரோ மேசைகளும் 24 கதிரைகளும் கிடைக்கப் பெற்றனர். இந்நிகழ்வு 7.4.2023 வீர தமிழர் நற்பணி மன்ற நூல் நிலையத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலவாக்கலை லிந்துல நகர சபையின் நூல் நிலையம் சார்பாக, 1: N.G.N Thushari Liyanarchchi , 2: kinsly gomas, 3: shelomiya ramesh அவர்களும், ஒடிங்டன் தேயிலை உற்பத்தி நிலையம் சார்பாக செல்வி செபஸ்டினா அவர்களும் விசேட விருந்தினராக ஓய்வு பெற்ற அதிபர் திருமதி பிரேமா அவர்களும் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வில் வீர தமிழர் நற்பணி மன்றம் இராணிவத்தை நிர்வாகக்குழு மற்றும் செயல் குழு உடன் இராணிவத்தை பொதுமக்கள் அனைவரும் இணைந்து கொண்டார்கள்.…
நானுஓயாவில் இருந்து நுவரெலியா ஊடாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் மார்க்கத்தை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 31 கிலோமீற்றர் நீளமுள்ள குறுகிய ரயில் மார்க்கம் ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இருப்பினும், இது வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டது. BOT (கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம்) மாதிரியின் கீழ் இந்த ரயில் மார்க்கத்தை புனரமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகின் ஆறாவது மிக உயரமான ரயில் நிலையமான கந்தபொல இந்த ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது என்றார். இதன் ஊடாக சுற்றுலா வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதன்படி விரைவில் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், வீ.இராதாகிருஷ்ணன், எஸ்.பி. திஸாநாயக்க, சீ.பீ ரத்னாயக்க ஆகியோரும், ஜனாதிபதி செயலாளர், மாகாண ஆளுநர், அரச அதிபர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.…
ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், டிப்போக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் கட்டணத்தை வழங்குவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது புகையிரதங்களிலும் இடம்பெறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, புதிய தொழில்நுட்பத்தில் QR குறியீடு மூலம் தாமே சுயமாக டிக்கெட் பெறும் முறை உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டி சந்ரு இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு. இலங்கை போக்குவரத்து பஸ் சேவையின் நுவரெலியா டிப்போ பிரதேச கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, ஹங்குராங்கெத்த,கொத்மலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ஏழு பஸ் டிப்போகளுக்கு 26 புதிய பஸ் வண்டிகள் நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரகறி வாவி கரையில் இலங்கை போக்குவரத்து மத்திய சபையினரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் பி .திஸாநாயக்க , சீ பி . ரட்னாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பஸ் டிப்போ அத்தியட்சகர்கள்,டிப்போ ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி (shot gun) ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை (shot gun) மீட்டுள்ளதுடன் 35 வயதுடைய வெல்கொல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியையும் குறித்த சந்தேக நபரையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேக நபரை நாளைய தினம் (04/10) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
சப்பிரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், வறக்காப்பொலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கருணையுள்ளம் கொண்டவளே முத்துமாரியம்மா காத்தருள வந்திடுவாய் எங்களையே குறைகளைந்து நிறையருளி வாழவைப்பாய் வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா அருள் பொழியும் திருமுகத்தை உடையவனே முத்துமாரியம்மா அணைத்தருள வந்திடுவாய் எங்களையே வளமருளி நிம்மதியாய் வாழவைப்பாய் வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா கேட்டவரம் தந்தெம்மை ஆட்சி கொள்ளும் முத்துமாரியம்மா துணையிருந்து காத்தருள்வாய் எங்களையே துயர்களைந்து மகிழ்வு தந்து வாழவைப்பாய் வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா உற்றதுணையாயிருந்து உயர்வு தரும் முத்துமாரியம்மா வலுவுடனே நாம் வாழ காத்தருள்வாய் எங்களையே வற்றாத வளம் அருளி களிப்புடனே வாழவைப்பாய் வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா சூலத்தைக் கையிலேந்தி துயர்களையும் முத்துமாரியம்மா சூழ்ச்சிகள் அண்டாது காத்தருள்வாய் எங்களையே சுற்றம் சூழ வாழ்வுதந்து வாழவைப்பாய் வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா தானென்ற ஆணவத்தை அழித்தொழிக்க தோன்றுகின்ற முத்துமாரியம்மா தீயகுணம் அண்டாது காத்தருள்வாய்…