Author: Thana

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் ஆரம்பமான கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹெக்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம், கடந்த மாதம் 9ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு இலங்கையுடன் ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்துள்ளார்

Read More

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு அமைய, இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. பத்தரமுல்லையிலுள்ள விவசாய அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்;ற இந்த கலந்துரையாடலில், விவசாய அமைச்சு, தேசிய மிருககாட்சிசாலை திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் காணப்படுகின்ற சட்ட நிலைமை குறித்து ஆராயும் நோக்கிலான அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் மிருகங்களில் குரங்கு முதன்மை…

Read More

நீராட சென்ற இருவரை காணவில்லை பலாங்கொடை வெளிஅரனாவ நீர் தாங்கிக்கு அருகாமையில் இருக்கும் வளவ கங்கையில் நேற்று(11) மாலை நீராடச் சென்ற இரண்டு இளைஞர்களை காணாவில்லை இவ்வாறு காணாமல் போன இருவரும் 15, மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். ஒருவர் பலாங்கொடை எல்லராவ பகுதியும் மற்ற இளைஞன் செக்னோல் வீதி பெங்ஙிவத்த பகுதியை சேர்ந்தவர் என பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இங்கிலாந்து, நீயூமோள்டன் அருள்மிகு ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் திருக்கோயில் அலை கடல் சூழ வளநாட்டில் கோயில் கொண்ட வேல்முருகா அனைத்துலகும் நலன் பெறவே அருளளிப்பாய் அச்சமின்றி வாழும் நிலை உருவாக்க வரவேண்டும் நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா தர்மம் நிலை நாட்ட அவதரிக்கும் ஐயனே வேல்முருகா தடுமாறா நல்வாழ்வை அனைவருக்கும் தந்தருள்வாய் திடங்கொண்டு வாழும் நிலை உருவாக்க வரவேண்டும் நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா நேர்மை கொண்டோர் இதயங்களில் நிறைந்திருக்கும் வேல்முருகா நெஞ்சமெல்லாம் அமைதிபெற உன்னருளை வழங்கிடுவாய் நொந்து மனம் வாழா நிலை உருவாக்க வரவேண்டும் நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா தமிழ் மொழியின் காவலனாய் ஆட்சி செய்யும் வேல்முருகா தரணியிலே தமிழ் வளர உன்னருளைத் தந்தருள்வாய் திறமைமிகு எதிர்காலம் உருவாக்க வரவேண்டும் நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா குவலயத்தைக் காத்துயிர்கள் வாழவைக்கும் வேல்முருகா குறையின்றி வாழ்வதற்கு உன்னருளைத் தந்தருள்வாய் குற்றங்கள் அண்டா நிலை உருவாக்க…

Read More

நான்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, ராஜித ஸ்ரீ தமிந்த, அஜித் ரோஹன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறங்கு துறையில் இருந்து நீரில் விழுந்த சிறுமியை மீன்பிடி கப்பலில் பயணித்த நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புத்தாண்டு காலத்துக்காக மீன் வாங்குவதற்காக குறித்த சிறுமி தனது தந்தையுடன் இன்று (11) துறைமுகத்திற்கு வந்துள்ளார். அவ்வேளையில் மீன்களை கொள்வனவு செய்ய பெருமளவான மக்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு ஏற்பட்ட அழுத்தத்தால், மற்றொருவரின் உடலில் அடிபட்டு, சிறுமி சமநிலை இழந்து தண்ணீரில் விழுந்தார். படகில் இருந்த மீனவர் ஒருவர் சிறுமி விழுந்ததைக் கண்டு உடனடியாக தண்ணீரில் குதித்து சிறுமுயை மீட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

இம்முறை பெரும்போகத்தில், விவசாயிகள் பயிரிட்ட சோளம், விவசாயிகளிடம் கையிருப்பில் இருப்பதனால், அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோளத்தின் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் அவற்றை களங்சியப்படுத்தி வைத்திருந்தாலும், சோளம் இறக்குமதி செய்தால் அதன் விலை குறைவடையலாம். எனவே, தற்போது சோளத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதால், விவசாயிகள் தமது கையிருப்பில் உள்ள சோளத்தை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் துன்னாலையில் நன்கொடையாளரின் ஆதரவுடன் 767 வது வீட்டு திட்டத்தை நிறைவு செய்து பயனாளிகளிடம் (06) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட முன்னிலையில் கையளிக்கப்பட்டது. 551 வது காலாட் பிரிகேட் தளபதி தளபதி பிரிகேடியர் ஜூட் காரியகரவனவின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கு 4 வது இலங்கை சிங்க படையணி முக்கிய மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியதுடன் 4 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்ஜீஎன்எம்என் தலுகல 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டத்தினை முன்னெடுத்தார். மட்டக்குளி லயன்ஸ் கழகம் மற்றும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) ஆகியோரின் ஒருங்கிணைப்பு மூலம் திருமதி தபிதா சின்னையா மற்றும் வன்னி எய்ட் அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கட்டுமானப்…

Read More

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, ஆறுமுகத்தான் புதுக்குளம் அருள்மிகு முருகன் திருக்கோயில் அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் முருகனே அல்லலுற்று அவதியுறும் எமைப் பாராதிருப்பதேன் கொடுபகையும், வஞ்சனையும் கூடி நின்று வாட்டுது கொண்ட பொருள் குடியிருப்பு எல்லாம் பறிபோகுது வருந்தியுழைத்துச் சேர்த்த வளங்களும் பறிபோகுது ஆதிசிவன் கோயில்களும் திட்டமிட்டு அழியுது பெற்ற அன்னை சக்தியவள் கருவறையும் கலங்குது வினை தீர்க்கும் உன்னண்ணன் கோயில்களும் சிதையுது இந்த நிலை என்றொழிந்து அமைதி வந்து சேருமோ முருகா ஏனிந்த அவலநிலை என்று நீ சொல்லையா சொந்த மண்ணில் அந்நியர்போல் அவதியுற்று ஓடிடும் சுகமில்லா இவ்வாழ்வும் உனது பரிசாகுமோ வேதனைகள் இனிவேண்டாம் வேல் தாங்கும் முருகனே வீணர்களின் கொட்டமதை அடக்கியெமைக் காத்திடு நிம்மதியைக் கெடுத்தெம்மை வதைப்போரை இனங்கண்டு தண்டனையை வழங்கிடு சூரனின் கொட்டத்தை அடக்கி அமைதி தந்த முருகா சூழ்ந்து வரும் பகை கொடுமை அடியோடு அழித்திடு சுற்றமெல்லாம் நலன் பெறவே அருளினை செய்து கொடுமதியோர்…

Read More