Author: Thana
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவோர் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சென்னையில் தீவிர விசாரணை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியை அதிகாரிகள் கொச்சியில் முறியடித்ததை அடுத்து சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், 82 இலட்சம் ரூபாய் பணம், 300 கிராம் தங்கம், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன. என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் இவர் கைதாகினார். 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஒன்பது பேரை என்ஐஏ கைது செய்த நிலையில், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் போதைப்பொருள் வியாபாரி ஹாஜி சலீமுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், 300 கிலோ ஹெராயின்,…
மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, 9 மாணவர்கள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 19 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்கள், பலபாத்வல பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில், நட்புறவு ரீதியான சந்திப்புக்கு சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசனில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
Updated பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த 11 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருமாக மொத்தம் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 11 பெண் தொழிலாளர்களும் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 07 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 04 பெண் தொழிலாளர்களும் முச்சக்கர வண்டி சாரதியுமாக ஐவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமு தனராஜா பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்ட பெண் தொழிலாளர்கள் 10 உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இன்று ( 09) மு.ப…
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டசெந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்த மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்…
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரினை நியூஸிலாந்து 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கிலும் கைப்பற்றியிருந்தது. பின்னர் ஒக்லேண்டில் ஆரம்பமான டி:20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. அதையடுத்து டுனெடினில் நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து ஒன்பது விக்கெட்டுளினால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந் நிலையில் டி:20 தொடரின் தீர்க்கமான போட்டி இன்று குயின்ஸ்டவுனில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையும்…
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை உறுதிப்படுத்தும்,புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் உருவாக்கப்படும் வரையில், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பூரண தடை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் வரையில், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய…
யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் பஸ் நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார். பஸ்களில் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குணசிங்கபுர – பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடங்களுக்குள் யாசகர்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக,பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, பஸ்களில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பஸ் பணிக்குழாமினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும். எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம்…
2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 500 ரூபாவாக நிலவிய பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டு கொடுப்பனவு தற்போது 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 81 கிலோமீற்றரை விட அதிக தூரத்தில் இருந்து மதிப்பீட்டுப் பணிகளுக்கு வருகின்ற ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 2900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட கைகலப்பு இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இதனால் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வியாழக்கிழமை (06) திருக்கடலூர் கடற்கரையில் அதிகமான சூடை மீன் ஒதுங்கியுள்ளது. இந்த மீனை பிடிப்பதில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக இரு இனங்களுக்கிடையே வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்போது வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…