Author: Thana
ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் எல்ல பகுதியில் உள்ள சிறிய சிறிபாத மலைக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் குறித்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 38 வயதுடைய குறித்த ரஷ்யன் நாட்டு பிரஜையை தெமோதர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் குறித்த நபர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் மாரடைப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸ் சுற்றுலா பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
கிளாசோ த.வி, நானுஓயா. வரலாற்றில் முதல் முறையாக சிறுவர் மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி சீதா தலைமையில் இன்று 07.04.2023 வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப்போட்டி 07-04-2023 அதிபர் திருமதி சீதா இந்நிகழ்வில் அதீதியாக நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் திரு D.M.P லசந்த அபேரத்ன, கௌரவ அதீதிகள் ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ராஜேந்திரன், தமிழ்மொழி பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி காஞ்சனா, நுவரெலியா வலய செயற்பட்டு மகிழ்வோம் பொறுப்பாளர் திரு.ஸ்டீபன், நலன்விரும்பியும் சமூக சேவகருமான திரு.T. ஸ்ரீ உதய பாஸ்கர் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அத்தோடு மாணவர்களின் உடலியக்க செயற்பாடுகள் அனைவரையும் கவர்ந்திருந்தது. இந் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் யுகனேசன், C.தேன்மொழி,S. கௌசல்யா T.ஜானுபிரசன்னா, திவ்யா,…
நானுஓயா நிருபர் நுவரெலியா , நானுஓயா கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதான நகரங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுவதால், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஒன்றில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றிருந்தது இதன் காரணமாக வழிபாடுகள் இடம்பெறும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கொழும்பு பதுளை தொடரூந்து பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை கொழும்பு தபால் தொடரூந்து ஹப்புத்தளை தொடரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது மரம் நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில் முறிந்து தொடரூந்து பாதையில் விழுந்துள்ளதாகவும் மரம் முறிந்து விழுந்த சத்தம் கேட்டு தொடரூந்து வீதிக்கு அருகில் இருந்த வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் வீதியை பார்த்த போது பாரிய மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்திருந்தமையை அவதானித்துள்ளார். இதன் போது தொடரூந்து சத்தம் கேட்டதும் எதிரே வந்த விசேட தொடரூந்தை மின் சமிக்ஞை மூலம் நிறுத்தி பாரிய விபத்தினை தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மரத்தினை அப்புறப்படுத்தும் பணிகளில் இராணுவத்தினரும் ரயில்வே ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ராமு தனராஜா
உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும்.
உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும். இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்நாளில், நம்பிக்கை மற்றும் விடுதலை மூலம் இருள் மற்றும் விரக்தியை நீக்கும் செய்தியை உள்வாங்கிக் கொள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். பெரும் துயர், நிச்சயமற்ற தன்மை, ஏமாற்றம் ஆகியவற்றுடனான கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு நல்ல நாளை எதிர்பார்த்து அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம். எனது தலைமையிலான அரசாங்கம் இன, மத, கட்சி அல்லது நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கை மக்கள் அனைவரினதும் அபிலாஷைகளை நனவாக்க, அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் இந்தச் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். குறுகிய அரசியல் இலக்குகளிலிருந்தும், பின்தங்கிய போக்குகளிலிருந்தும் விலகி நாட்டைக் கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்பதே இன்றைய தேவையாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில்…
மேல்,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க நாளை நண்பகல் 12.12 அளவில் மாதம்பை, கொகிலபொக்குண, கைக்காவல, நிலம்பே மற்றும் ஒந்தாச்சி மடம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும்…
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு – பட்டிப்பளை – அருள்மிகு தாந்தாமலை முருகன் திருக்கோயில் மலைமீது காட்சி தந்து மருள் போக்கும் வேல்முருகா மயக்கநிலை போக்கி யெம்மைத் தெளிவுடனே வாழவிடு முன்னேற்றப் பாதையினைக் காட்டிவிடு தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய் உமையவளின் இளமகனாய் வந்துதித்த வேல்முருகா மனவுறுதி தந்தெம்மைத் தெளிவுடனே வாழவிடு மேதினியில் நிம்மதியை உறுதி செய்ய வந்துவிடு தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய் துன்பங்கள் போக்கியெம்மை அரவணைக்கும் வேல்முருகா துணையிருந்து எம்மையென்றும் தெளிவுடனே வாழவிடு தொல்லையில்லா நிம்மதியின் உறுதியை நீ செய்துவிடு தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய் வாட்டம் போக்கியெம்மை வாழவைக்கும் வேல்முருகா ஆற்றல் தந்தெம்மை தெளிவுடனே வாழவிடு பாரினிலே நம்முரிமை பங்கமின்றி காத்துவிடு தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய் கைகூப்பித் தொழும் எமக்கும் கைகொடுக்கும் வேல்முருகா கவலையின்றி எம்மையென்றும் தெளிவுடனே வாழவிடு கௌரவமாய் வாழும்வழி நாமடைய உறுதியை நீ செய்துவிடு தாந்தாமலை…
கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மேலும் உயரமான பகுதிகளில் நாளை நண்பகல் 12 மணி வரை நீர் வெட்டு ஏற்படலாம் என்றும் சபை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகையை விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதியளித்துள்ளது.முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.கடந்த 29ஆம் திகதி 20 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.குறித்த முட்டைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள 10 நாட்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில், மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 20 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பாரியளவான வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் உணவகங்களுக்கு குறித்த முட்டைகளை விநியோகிப்பதற்காக முத்துராஜவெல முனையத்துக்கு வருகைத்தந்திருந்த பாரவூர்திகள் தற்போது விநியோக நடவடிக்கைகளுக்காக அங்கிருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை, இன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகளின் பரிசோதனைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.அதன்படி, பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாதிரிகள் பொரளை வைத்திய பரிசோதனை…
பஸ்யாலை – கிரியுல்ல வீதியின் மீரிகம, கலேலிய பிரதேசத்தில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் ட்ரக் ஒன்று எட்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ட்ரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.