Author: Thana
ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரனின் தலைமையில் மத்தியமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து அபியச நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ பாத சிங்கள வித்யாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் மத்திய மாகாணக்கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச மற்றும் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஹட்டன் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மாகாணத்தினதும் , ஹட்டன் வலயக்கல்வி பணிமனையினதும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் இதன்போது பாடசாலைகளின் திட்டமிடல், ஒழுக்காற்று நடவடிக்கை, சேவை நிரந்தரமாக்கல் , விடுமுறை, ஆசிரியர் விடுவிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 16 விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது. கடந்த வருடம் பரீட்சை பெறுபேறுகள் குறைந்த அதிபர்களுடனான சந்திப்பும் அன்றையதினம் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் மத்தியமாகாண கல்வி பணிப்பாளரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொட்டாஞ்சேனை, அருள்மிகு வரதராஜ விநாயகர் திருக்கோயில் தடைகள் தகர்த்து வழிகாட்டும் தலைமகனே பிள்ளையாரே தரணியிலே தமிழ்மொழிக்கு உயர் நிலையைத் தந்துவிடு திறமையுடன் முன்னேறும் வழியையும் காட்டிவிடு கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே அறிவு தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் பிள்ளையாரே பூவுலகில் மேன்மையுடன் வாழவழி தந்துவிடு அன்புடனே வாழும் நல்ல வழியையும் காட்டிவிடு கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே நேர்வழியில் வழிநடத்தி வழிகாட்டும் பிள்ளையாரே நேசமுடன் ஒன்றுபட்டு வாழும் வழி தந்துவிடு ஆக்கமுடன் மேன்மையுறும் வழியையும் காட்டிவிடு கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே சஞ்சலங்கள் போக்கி மனவமைதி தரும் பிள்ளையாரே சத்தியநெறி நின்று வாழும்வழி தந்துவிடு சிந்தனையில் குழப்பமில்லா வழியையும் காட்டிவிடு கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே வழித்துணையாயிருந்தெமக்கு வழிகாட்டும் பிள்ளையாரே வற்றாத கருணையுடன் ஒன்றுபட்டு வாழும் வழிதந்துவிடு வழிதவறா நெறிநின்று வாழும் வழி காட்டிவிடு கொட்டாஞ்சேனை…
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் தற்காலிக வியாபார உரிமையாளர்களுடன் முரண்பாடு. https://youtu.be/74zbf6llapM தூரப் பகுதியில் இருந்து வருகை தரும் பேருந்துகளை நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றது , இருந்தும் தற்போது இவ்விடத்தில் நுவரெலியா வசந்தகால தற்காலிகமாக வியாபாரம் செய்வதற்கு லொறி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,அவ் வியாபார லொறினை அகற்றுமாறு கோரி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நுவரெலியா தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் வியாபாரம் செய்பவர்களிடம் இவ்விடத்தில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமையினால் வியாபாரம் செய்வதற்காக நிறுத்தப்பட்ட லொறினை அகற்ற கோரிக்கை விடுத்தனர் .
யாழ்ப்பாணத்தில், நாளை முதல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் கோதுமை மா, எண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந் நிலையிலேயே கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மேற்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளது.
பேராதனை, இலுக்வத்தை பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்பள்ளியில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே இந்த கொலைச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்றிரவு திட்டமிடப்பட்டிருந்த இரண்டு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கந்தளாய், அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றிரவு கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படும் ரயில் சேவையும், திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இன்று பகல் இடம்பெற்ற குறித்த ரயில் விபத்தில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் திங்கட்கிழமை வழங்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இம்மாத அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த இலங்கை, தற்போது சரியான பாதையில் செல்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர், மார்ச் மாதத்திற்கான சராசரி மின்சார உற்பத்தி 44.22 ஜிகாவாட் மணிநேரம் என சுட்டிக்காட்டினார். மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் எரிசக்தி தேவை குறையும் பட்சத்தில் சராசரி மின் உற்பத்தி 40.5 ஜிகாவாட் மணிநேரமாக குறையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்படி, ஊடகங்கள் ஊகித்து வருவதற்கு மாறாக மின்சாரத் தேவைக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என அமைச்சர் தனது டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்காக பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா பாடசாலை அதிபர் தேசபந்து இரா.சிவலிங்கம் தலைமையில் நடை பெற்றது. பிரதம அதிதிகளாகநுவரெலியா கல்வித் திணைக்களத்தின் பழம்கோட்டக் கல்விப் பணிப்பாளர் (கோட்டம் 2) M . ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் தரம் ஐந்து புலமை பரிசு கட்டிட்ட ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இதே வேலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 37 மாணவர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.