Author: Thana

பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அமைய பதுளை தர்மதூத பாடசாலைகளுக்கு அருகாமையில் வைத்து நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய விஷேட அதிரடி படையினர் அவரிடம் இருந்து 5 கஜமுதுக்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

2023 ஐ.சி.சி. மகளிர் டி:20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிஸ்மா மரூப்க்குப் பதிலாகப் பாகிஸ்தான் புதிய தலைவரை நியமித்துள்ளது. அதற்கமைவாக அணியின் முன்னணி சகலதுறை வீராங்கனை நிடா டார் பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 130 டி-20 மற்றும் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிடா டார், பாகிஸ்தான் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவராவார். இதேவ‍ேளை மார்க் கோல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை சலீம் ஜாபர், மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த ஒரு பயங்கரவாத மையம் அங்கு தாக்கப்பட்டது.

Read More

இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

பதுளை Friendlyship அமைப்பினது மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று (06) அமைப்பின் அங்கத்தவர்களால் சர்வமத இறை பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டதோடு பதுளை கல்வி வலயத்தித்தில் தெரிவுசெய்யப்பட்ட எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் மற்றும் எலதலுவ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலர்உணவு பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வின் அனுசரணையாளராக பதுளை நகர தொழிலதிபர் துர்கா நிறுவனத்தின் உரிமையாளர் அரசன் பெரியசாமி சந்திரசேகர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் பொருட்களை வழங்கிவைத்தனர். நடராஜா மலர்வேந்தன்

Read More

அரும்புகள் கல்வி அமைப்பின் இவ்வாண்டுக்கான கல்வி வளர்ச்சிக்கான உதவி திட்டத்தின் மற்றுமொரு சேவை 05 04 2023 கண்டி மாவட்டத்தின் கம்பளை வலயத்தின் கலமுதுணை தமிழ் வித்தியாலயத்திற்கும் புசல்லாவை பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயத்திற்கும் மற்றும் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பாணவத்த தமிழ் வித்தியாலயத்திற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வுகளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

Read More

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய் காட்சிதரும் தாயே அணைத்தெம்மை ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா உன்னருளால் இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா தேடிவந்து உன்னடியைச் சரணடைந்தோம் தாயே தெளிவான மதிதந்து ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா தொல்லையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா உயிரினங்கள் அனைத்திலுமே உள்ளுறையும் தாயே உரிமையுடன் நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா பகையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா பங்கமில்லா வாழ்வுக்கு வழிவகுக்கும் தாயே பரிதவிப்பு இன்றி நாம் வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா பஞ்சமின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா வேப்பிலையில் குடியிருந்து நோய் தீர்க்கும் தாயே வேற்றுமையின்றி நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா ஒன்றுபட்டு இப்புவியில்…

Read More

மொ/திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை விளையாட்டு திடலில் ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் முதல் நிகழ்வாக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் பெண்கள் அணி, ஆண்கள் அணி என தனி தனியே ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து குழு அமைக்கப்பட்டு போட்டியில் பங்குபற்றினர். பெண் ஆசிரியர்கள் முதல் நிகழ்வாக இப்படி பாடசாலை மைதானத்தில் மாணவர்களுடன் விளையாடியது சிறப்பம்சமாகும். வெற்றி பெற்ற ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிபர் திருமதி P. ரேணுகாதேவி அவர்கள் பாராட்டி கௌரவித்தார்.தொடர்ந்து விளையாட்டு திடலை அமைத்துக்கொடுத்த பெ ற்றார்களுக்கும், போட்டி ஏற்பாட்டு குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இவ்வாறான விளையாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள் மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Read More

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில், இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதன்போது, கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் மலையக மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

Read More

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான பேரன் எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளி கீரியகொல்ல மடுகஸ்தலாவ வனப்பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பல்லகெடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பல்லகெடுவ பொலிஸாரும் பண்டாரவளை பொலிஸாரும் விஷேட அதிரடி படையினரும் இணைந்து குறித்த வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் வனப்பகுதியினூடாக வெள்ளவாய பிரதேசத்திற்கு தம்பி செல்ல முற்பட்ட வேளையிலேயே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நாளையதினம் பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More