Author: Thana
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 20 ம் கட்டை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மஹியங்கனையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பூம் லொறி (பாரந்தூக்கும் லொறி) ஒன்றில் மோதுண்டு படுகாயம் அடைந்த நிலையில் மஹியங்கனை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரமிட மீகாகியூல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை குறித்த விபத்தில் பலியாகியுள்ளார். இதன்போது பூம் ரக லொறியின் ( பாரந்தூக்கும் லொறி) சாரதியான உலபத்வெவ இங்குருகத்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கந்தகெடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
கருணை இல்லம் சமூகநல அமைப்பினால் கண்டி – பன்வில பிரதேசத்திலுள்ள மல்லிகை முன்பள்ளி பாடசாலைக்கு உதவிக்கரம்.
கருணை இல்லம் சமூகநல அமைப்பினரின் மற்றொரு மைல் கல்லான செயற்த்திட்டம் கண்டி பன்வில அலகொல்ல என்ற பிரதேசத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்பிரதேசத்தில் மல்லிகை முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சீருடை , பாடசாலை பைகள், உணவுப்பெட்டி, தண்ணீர் போத்தல் போன்றன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது கருணை இல்லம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமாகிய திரு.செல்வக்குமார் மற்றும் அமைப்பின் உறுப்பினர் விமலேஸ்வரியின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர்,ஆலோசகர், நுவரெலியா மாவட்ட இணைப்பாளர், தலைவரின் மனைவி மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர், யுவதிகள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 KG லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 5 KG லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 516 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரங்கள் a01. 12.5KG :- 3,990.00 02. 5 KG :- 1,596.00 லிட்ரோ விலை விபரங்கள் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகளை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரங்கள் 01.12.5KG :- 3,738.00 02.5KG :- 1,502.00 03.2.3KG :- 700.00
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளது. எனவே, எவ்வித சிரமமும் இன்றி இந்த தீர்மானத்தை அமல்படுத்த முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் மூன்று நிறுவனங்களுடனும் உரிய உடன்படிக்கைகளில் கையொப்பமிட இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கையில் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்திகள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்காகச் சீனாவின் சைனோபெக் ஃபுவல் ஒயில் லங்கா தனியார் நிறுவனம், அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெற்றோலியம் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி ஒவ்வொரு நிறுவனமும் உள்ளூர் சந்தையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படும் 450 நிரப்பு நிலையங்களில் தலா 150 நிரப்பு நிலையங்களைக் கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த ஆசிரியர்களுக்கு அதிகபட்ச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரின் பிள்ளைகளும் உயர்தரப் பெறுபேறுகளை எதிர்ப்பார்ப்பதாகவும், அதனால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதால் இனி அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தன்னால் இயன்ற அளவு முயற்சி எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை சரிபார்த்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண…
கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக அமைச்சின் செயலாளரினால் தகுந்த முறைமையை தயாரிப்பதற்காக நிபுணர் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது. கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் தொடர்பில் நீண்ட தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை மேற்கொண்டு நிபுணர் தொழில்நுட்பக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆரம்பத் திட்டத்தின்படி திட்டத்தைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் சுமார் 2.125 பில்லியன் ரூபா செலவாகும். அத்துடன், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் குப்பைகள் பொருளாதார ரீதியில் பயன்பெற முடியும் என சம்பந்தப்பட்ட குழு அறிக்கை காட்டியுள்ளது. பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக்…
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் – தொழிற்சங்க – சமூக – மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் – தொழிற்சங்க – சமூக – மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் (03.04.2023) வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட துறையின் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் துறை சார் அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் மிக முக்கிய நிறுவனமே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமாகும். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த நிறுவனம் வருகின்றது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக இதற்கு முன்னரும் பாரத் அருள்சாமி பதவி வகித்துள்ளார். அக்காலத்தில் அவரின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. இதனைக்கருதியே அவருக்கு மீண்டும் அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் பாரத் அருள்சாமி பதவி வகிக்கின்றார். அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்) காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர். பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களில் கடும் மழை பொழிய வேண்டி மஸ்கெலியா பிரதேச சர்வமதத் தலைவர்கள் பல விசேட சமய நிகழ்வுகளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நடத்தினர். மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் போது மறைந்து போன பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம், விகாரை, தேவாலயம் என்பன தற்போது தென்படுகின்ற நிலையில், அவ்விடங்களில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன. மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள், கெனியன் நீர் மின் நிலையத்தின் பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்கள், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க அணையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சமய வழிபாடுகளை மேற்கொண்டனர். மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணத்தின் கீழ்…
தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது. இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள். வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை புல்மோட்டையிலே ஒரு குழப்பம். இந்த நாட்டினுல் ஐ.எம்.எப் ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப்போன்ற இனவாத அமைச்சர்கள், இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு, வடக்கு கிழக்கில்…