Author: Thana
சப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொடை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் துன்பம் வரும் வேளை துணையிருந்து தடுப்பவனே நம்பி உன்னைச் சரணடைந்தோம் நன்மைகளைத் தந்துவிடு அச்சம் அகற்றிவிடு அரவணைப்பைத் தந்துவிடு எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே பச்சைமயில் மீதமர்ந்து பகைகளைந்து காப்பவனே எச்சம் ஏதுமின்றி எம்குறைகள் தீர்த்துவிடு தஞ்சம் கொடுத்துவிடு, தற்காப்பு தந்துவிடு எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே மலைசூழ்ந்த நகரத்தில் மத்தியிலே இருந்து அருள்பவனே நிம்மதியைத் தந்தெம்மை நிரந்தரமாய் வாழவிடு துன்பங்கள் போக்கிவிடு துணையாக இருந்துவிடு எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு ஆள்பவனே வறுமையைத் தடுத்துவிடு வளமாக வாழவிடு வாட்டத்தைப் போக்கிவிடு மனமகிழ்வு தந்துவிடு எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே எம்முள்ளத்தில் உறைந்திருந்து அருளாட்சி செய்பவனே உற்றதுணையாயிருந்துவிடு உதவும் மனம் தந்துவிடு வஞ்சனைகள் தடுத்துவிடு வளங்களையும் தந்துவிடு எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே உமையவளின் இளமகனாய் வந்துதித்த பெருமானே வீரமனம் தந்துவிடு வெற்றியையும் தான்…
ரஷ்யா மற்றும் பெலாரிஸ் அரசின் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன அந்த நாடுகளில் போக்குவரத்துத் துறைக்காக பட்டம் வழங்குவதற்காக இப்பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவ்விரண்டு நாடுகளிலும் காணப்படும் போக்குவரத்து பல்கலைக்கழகங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாணவர்கள் போக்குவரத்து விடயம் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்வதாக பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கமைய ரஷ்ய போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் RUT (MIIT) உபவேந்தர் பேராசிரியர் அலெக்சாண்டர் கிளிமொச் உட்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கை ஜேர்மன் புகையிரத தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை விருத்தி செய்தல், துறை சார்ந்த திறன் பரிமாற்றம், விஞ்ஞான ரீதியான ஆய்வுகள், ஒழுங்கமைக்கப்பட்ட விரிவுரைகள் மற்றும் இலங்கையின் போக்குவரத்து துறையில் நிபுணத்துவமிக்கவர்களுக்கான பயிற்சி போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் போக்குவரத்து கல்வி துறையில் ஆதரவு வளங்கள் தொடர்பாக செயற்படுவதற்காக இரு தரப்பிலும் பிரதிநிதிதத்துவ குழுவொன்ற நியமிப்பதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்தனர். இரத்மலானை…
பசறை வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நல்லிணக்க சிறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (04) பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் தலைமையில் பசறை நகர் புதிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சகல இன மதத்தலைவர்கள், பசறை பிரதேச செயலக செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏனைய அரச நிறுவன உயர்அதிகாரிகள், கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது இப்தார் நிகழ்வும் இஸ்லாமிய கலாசார நிகழ்ச்சிகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. பசறை பிரதேசத்தில் வாழ்கின்ற பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்துவத்தையையும் மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான இப்தார்தின சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதையிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடராஜா…
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி:20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியிருந்தது. அதன் பின்னர் ஒக்லேண்டில் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, சுற்றுப் பயணத்தின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந் நிலையில் டி:20 தொடரின் இரண்டாவது போட்டி டுனெடினில் இன்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அணி சார்பில் அதிகபடியாக தனஞ்சய டிசில்வா 37 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களையும் மற்றும்…
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு எவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது கீழே காட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு – 4 இலிருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு – 5 இலிருந்து 8 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேன்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லொறிகளுக்கான ஒதுக்கீடு – 50 இலிருந்து 75 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ்களுக்கான ஒதுக்கீடு – 40 இலிருந்து 60 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விசேட தேவை வாகனங்கள் – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது 80 வயதுடைய தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்கிய சந்தேக நபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் தாக்கிய பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் நுகயாய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெப் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், கெப் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2023 ம் ஆண்டுக்கான சிறந்த குறுந்திரைபடத்துக்கான திரைப்பட கதை விருதினை மலையகத்தை சேர்ந்த கிங்ஸ்லி கோமஸ் எழுதிய “The Dark Nest” என்ற கதைக்கு விருது
2023 ம் ஆண்டுக்கான சிறந்த குறுந்திரைபடத்துக்கான திரைப்பட கதை விருதினை மலையகத்தை சேர்ந்த கிங்ஸ்லி கோமஸ் எழுதிய “The Dark Nest” என்ற கதைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற (04.04.23) விருது வழங்கும் விழாவிலே குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம்- தெகிவளை அருள்மிகு வெங்கடேசுவரப் பெருமாள் திருக்கோயில் மாதவனே மாமணியே மலர் மகளின் துணையவனே மாநிலத்தில் நல்லருளைப் பரப்பிடுவாய் பெருமாளே உத்தமனே உன்கருணை உலகினையே காத்துவிட உறுதுணையாய் இருந்திடைய்யா உலகாளும் திருமாலே கருணைமிகு பேரருளே காத்தருளும் வல்லோனே கந்தனவன் அம்மானே காத்தருள்வாய் பெருமாளே வந்தவினை போக்கிவிட வரும் வினைகள் தடுத்துவிட சிந்தையைத் திருப்பிவிடு செம்மை தரும் திருமாலே அன்னை மகாலட்சுமியை அருகு கொண்ட திருமகனே அச்சம் தவிர்த்தெம்மை ஆட்சி செய்வாய் பெருமாளே அமைதியெங்கும் பரவி நிலைபெற்றுவிட அருள் பொழிவாய் பேரருளே திருமாலே பாற்கடலில் துயிலுகின்ற பார்போற்றும் உத்தமனே பாரினிலே காவல் செய்ய தயக்கமென்ன பெருமாளே நத்திவரும் உன்னடியார் நல்ல நிலை பெற்றுவிட நாயகனே அன்புருவே வழிகாட்டு திருமாலே அதர்மஙகள் அழித்தொழிக்க அவதரிக்கும் மேலோனே அருளளித்து ஆதரித்து அரவணைப்பாய் பெருமாளே வெஞ்சினத்தின் கொடுமைகளை வேரோடு அகற்றிவிட வெற்றித் திருமகனே வந்திடுவாய் பெருமாளே தெகிவளையில் கோயில் கொண்டு திக்கெல்லாம் அருள்வோனே தேம்பியழும்…