Author: Thana

மலையகத்தை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், காணாமல்போய்விட்டாரெனக்கூறி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியே , முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதி இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்துள்ளாராம். இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டவர் தொடர்பில் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்கு நெருக்கமானவரென தெரியவந்துள்ளதாம். குறிப்பு – (பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலி தகவல்களை வழங்குவதும், முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான முயற்சிகளில் எவரும் ஈடுபட வேண்டாம்.)

Read More

முன்னாள் தேசிய கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டிற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜயசூரியவுடன் குழுவின் உறுப்பினர்களாக பர்வீஸ் மஹரூப், சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர். முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மஹேல ஜயவர்தன தலைமையில் இதேபோன்ற குழுவை நியமித்து இருந்தார். ஆனால் கடந்தாண்டு நாமல் ராஜபக்ஷ தனது பதிவியை ராஜினாமா செய்ததை அடுத்து அது கலைக்கப்பட்டது.

Read More

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய போலியான கடிதங்கள் மூலம் கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 180 இற்கும் மேற்பட்ட மாணவிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எந்தவொரு மாணவியையும் எந்தவொரு பாடசாலையிலும் ஏற்றுக் கொள்ளுமாறு மேலதிக பணிப்பாளர் பிரதேசத்தில் உள்ள எந்தவொரு பாடசாலை அதிகாரியிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாகாண கல்வி அலுவலகம் நடத்திய கணக்காய்வு விசாரணையில் இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

Read More

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் இன்று அறிவித்துள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்னும் பின்னும் பயணிகள் அந்தந்த இடங்களுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து செல்வதற்கும் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பஸ்களை வழங்குமாறு அனைத்து வீதி போக்குவரத்து சேவைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய பஸ் நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை முனையங்களில் புத்தாண்டு விசேட பஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான விசேட பஸ் சேவை ஏப்ரல் 07 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி வரை தொடரும். ஆரம்பத்தில் சுமார் 150…

Read More

தலைமன்னாரை அண்டிய கடற்பகுதியில் நேற்று (02) ​​4 கிலோகிராம் நிறையுடைய (ஈரத்துடனான எடை) ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையில் தலைமன்னாரை அண்டிய கடலில் மிதந்துவந்த பையொன்று அவதானிக்கப்பட்டது. அந்தப் பையை சோதனையிட்டபோது அதிலிருந்த நான்கு பொதிகளிலிருந்து 4.5 கிலோகிராம் (ஈரமான எடை) நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் பெறுமதி சுமார் 6 கோடியே 75 இலட்சம் ரூபா என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

பப்புவா நியூ கினியாவின் கிழக்குப் பகுதியில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுமார் 80 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கிழக்கு செபிக் மாகாணத்தில் சுமார் 100 கிலோமீற்றர் பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும், உயிர், உடைமை சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

Read More

ஹப்புதளை தமிழ் ஆரம்ப வித்தியாலய பிரிவு கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களையும் இன்று காலை வித்தியாலயத்திற்கு வரவேற்பு செய்தனர் . இந் நிகழ்வில் ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் திரு என். சந்திரமோகன் சிரப்பு விருந்தினர கலந்து கொண்டர். பெற்றோர் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் அதிபர் இணைந்து வரவேற்புடன் முன்னாள் அதிபரை கௌரவித்தது பாராட்டு நிகழ்வை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் இவ் வைபவத்தின் போது பாராட்டப்பட்டனர். ராமு தனராஜா

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

Read More

இலங்கையில் 16 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய இளைஞன் உயிரிழப்பு! கித்துல்கல மஹபாக பிரதேசத்தில் உள்ள சந்துன் எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார். குறித்த வெளிநாட்டவர்கள் நீர்வீழ்ச்சியில் இருந்து இறங்குவதற்காக சென்றுள்ளனர். இவர்களுடன் விசேட பயிற்சி பெற்ற ஆலோசகராக அமில மதுசங்க என்ற இளைஞனும் சென்றுள்ளார். இதன்போது தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி, அருவியை கடக்க தேவையான கயிறுகளை தயார் செய்தார். அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆபத்தான நிலையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை அமில மதுசங்க காப்பாற்றியுள்ளார். ஆனாலும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய மதுசங்க நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார். நீர்வீழ்ச்சியில் அதிகம் நீர் பெருக்கெடுத்ததால் இறந்தவரின் சடலம் நேற்று…

Read More

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு, மண்டூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் கிழக்கிலங்கை கோயில் கொண்டு குவலயத்தை ஆள்பவனே கிலேசமில்லா மனவலிமை தந்திடவே வாருமைய்யா கிட்டவரும் வேதனைகள் எட்டவே ஓட்டிவிட அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே மயிலேறி உலகளந்து அருள் பொழியும் பெருமானே மனத்தினிலே நிம்மதியைத் தந்திடவே வாருமைய்யா மதிப்புமிகு வாழ்வதனை என்றும் நாம் பெற்றுவிட அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே சிவனாரின் இளமகனாய் வந்துதித்த இளங்குமரா சீரான மனநிலையைத் தந்திடவே வாருமைய்யா சிந்தனையைச் சீர்செய்து சிவவழியில் வாழ்ந்துவிட அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே சேவற் கொடி தாங்கி காட்சி தரும் வேல்முருகா சேதமில்லா நல்வாழ்வைத் தந்திடவே வாருமைய்யா சோகம் அண்டாத எழுச்சியுடன் வாழ்ந்துவிட அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே சூரனின் கொடுமைகளை தடுத்திட்ட குமரேசா சூழ்நிலையை நலப்படுத்தி அமைதி தந்திடவே வாருமைய்யா சுற்றமும், உற்றவரும் சிறப்புற்று வாழ்ந்துவிட அருள்தருவாய் மண்டூர்பதி அமர்ந்தருளும் முருகப் பெருமானே…

Read More