Author: Thana
இலங்கையில் 40 எரிபொருள் நிலையங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அட்டையின் கியூ ஆர் முறைமைக்கு புறம்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியூ.ஆர்.முறைமைக்கு புறம்பாக செயற்படுகின்ற எந்த எரிபொருள் நிலையமும் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையினை குறைத்துள்ளது. அதன்படி, 425 கிராம் டின் மீன் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 490 ரூபா. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 97 ரூபா. ஒரு கிலோ கோதுமை மா 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 225 ரூபா.
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிபிலேகம கடுவலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேகத்துக்குரிய வீட்டினை சோதனைக்குட்படுத்திய போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் 3 மற்றும் கஞ்சா போதைப்பொருள் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் திருமணமான நபர் ஒருவரின் நண்பர்களான கலங்கம தலவத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களிடம் இருந்து 2150 மி.கி , 2000. மி.கி, 2900 மி.கி கஞ்சா போதைப்பொருள் தனித்தனியே மீட்கப்பட்டுள்ளதோடு செல்ல கதிர்காமத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து 3 தடைசெய்யப்பட்ட வாள்கள் கைப்பற்றப்ப்பட்டுள்ளன. குறித்த 46, 38 ,35 மற்றும் 28 வயதுடைய 4சந்தேக நபர்களையும் நேற்று மாலை கைது செய்து நமுனுகலை பொலிஸ் நிலையத்தில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர். பதுளை பிராந்திய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சுஜித் வெதமுல்லவின்…
யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி கேகாலை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். யுவதியின் உடலில் இருந்து துண்டான கை நேற்று முன்தினம் நள்ளிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமாக இணைத்ததாக கேகாலை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கேகாலை எரதுபதுபிட்டிய பிரதேசத்தில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 21 வயதான யுவதியின் வலது கையின் கீழ் பகுதி துண்டாகியுள்ளது. துண்டாகியை கை பகுதியை ஐஸ் கட்டிகள் இடப்பட்ட பையில் இட்டு, யுவதியுடன் அயல் வீட்டினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் போது உடனடியாக செயற்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்ன உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, யுவதியின் கையை இணைக்கும் சத்திர சிகிச்சையை இரவு 9 மணியளவில் ஆரம்பித்தனர். சத்திர சிகிச்சைக்கு பின்னர் யுவதி தீவிர…
நு/ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (05.04.23 ) இடம்பெற்றது. பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி புஷ்பலீலா மற்றும் தற்போதய அதிபர் சத்தியசீலன் தலைமையில் இன்று காலை 9.10 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக நுவரெலியா கல்வி திணைக்கள பணிப்பாளர் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பாடசாலையின் கட்டிடம் அமைக்க முழுமையான அனுசரணை வழங்கிய நன்கொடையாளர்கள் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,மாணவர்கள் பழையமாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். I
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த கட்டணக்குறைப்பு மே மாதம் அமுலாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இலங்கை மின்சார சபை ஆராய்ந்து வருவதாக அதன் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழு ஒன்றின் ஊடாக ஆராயப்பட்டு, தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த முடியும். 31 வயதான குணதிலக வியாழன் அன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனைகளை மாற்ற விண்ணப்பித்தார். அவர் டிண்டரில் அறிமுகமான பெண் ஒருவரை சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமைக்காக, நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குணதிலக 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டார். ஃபெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன. அதன்படி அவர் Facebook-WhatsApp பகலில் மட்டும் பயன்படுத்தலாம். தற்போதய மாற்றத்தின்படி குணதிலக தனது Facebook மற்றும் Instagram கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது கணக்குகளை மூட வேடிண்டி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் முன்பு கூறப்பட்டது.…
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி பொதுச் சங்கம் மற்றும் அலுவலக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சமுர்த்தி ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் கொடுப்பனவு பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் N.A.M.I.B அபேசிங்க குறிப்பிட்டார். தமது வேலை நிறுத்தத்திற்கு மேலும் பல சங்கங்களும் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இவ்வாறான வேலைநிறுத்தங்களை நடைமுறைப்படுத்துவது நியாயமானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கொடுப்பனவு பிரச்சினையின் அடிப்படையில் நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்கும் வரை தொழில் சங்க நடவடிக்கை தொடரும் என சங்கத்தின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க…
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென்கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (06ஆம் திகதி) நண்பகல் 12.13 அளவில் உடுகம, நெலுவ, மடுவன்வல, கும்புக்வெவ மற்றும்…