Author: Thana
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு…
லிந்துலை சென்றெகுலரஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது இன்று (04.04.23) காலை குளவி கொட்டியுள்ளது. குறித்த சம்பவத்தில் இலக்கானவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ வண்டி மூலம் லிந்துலை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரத்
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, பெரியதம்பனை, அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோயில் வரம் தந்து வாழ்த்தி வழிநடத்தும் சித்திவிநாயகரே வரும் நன்மை நமையடைய வழிதிறந்து விட்டிடைய்யா உன்கருணை எமக்கென்றும் உரித்தாக வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே வரம் கேட்டு வரும் அடியார் நலன்காக்கும் சித்திவிநாயகரே வரும் தீமை தடுத்தெமக்கு நல்ல வழிதிறந்திடைய்யா உன்னருளால் நாமென்றும் உயர்வடைய வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே வெற்றி யென்றும் எமக்கருளும் சித்திவிநாயகரே வேதனைகள் போக்கி சுகவழியைக் காட்டிடைய்யா உன்கருணை என்றுமெம்மைக் காத்தருள வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே நல்ல வழி காட்டி யெம்மை வழி நடத்தும் சித்திவிநாயகரே நம்பிக்கை கொண்டென்றும் வாழும் வழி தந்திடைய்யா உன்காப்பு என்றுமெம்மைக் காத்தருள வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே எங்கும் உறைந்திருந்து உறுதுணையாயிருக்கும் சித்திவிநாயகரே வாழும் நல்ல வழிதிறந்து வழியமைத்து விட்டிடைய்யா உன் ஆசியென்றும் எமை வாழவைக்க வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே…
பதுளையில் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாகன பேரணியில் வாகன விபத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்களின் பூத உடல்களும் இன்றைய தினம் பதுளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர். ராமு தனராஜா
SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. SLT இன் 18 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. SLT ஊழியர்கள் கொழும்பு – கோட்டையில் உள்ள தொலைத்தொடர்பு தலைமையகத்திற்கு முன்பாக தமது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் 06 மாத கைக்குழந்தை உயிரிழப்பு.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குத்துவிளக்கினால் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய சிசு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் (01) உயிரிழந்துள்ளது. சிசுவின் குடும்பம் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒற்றை அறை போன்ற வீட்டில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் பெற்றோர் அறைக்கு வெளியே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டி ருந்தது.
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (3) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்2009ஆம் ஆண்டு மே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த இந்த மூவரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்இந்த நிலையில் குறித்த மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், அவர்களை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுலைசெய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த திருவருள் (45), சுலக்சன் (34), மற்றும் தர்சன்(33) ஆகியோரே வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புதிய விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000 ரூபாயால் குறைக்கப்படும் என லிஸ்டரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட பின்னர் 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 3743 ரூபாய் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.