Author: Thana
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளை சீனி 20 ரூபா விலை குறைக்கப்பட்டு 200 ரூபாவுக்கும், ஒரு கிலோ பருப்பு 30 ரூபா விலை குறைக்கப்பட்டு 310 ரூபாவுக்கும், அத்துடன், 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் விலை 210 ரூபாவாக குறைந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு பேரவை தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார். எனினும்…
ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியிலுள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதியின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதேவேளை 400 கிராம் பால்மா பொதியின் விலை 80. ரூபாவால் குறைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து புதிய விலையுடன் கூடிய பால்மா பொதிகள் திங்கட்கிழமை சந்தைக்கு வெளியிடப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 6 திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்கள் அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய 25 வயதுக்கு குறைவானவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தற்போது கோரியுள்ளது. விண்ணப்பப் படிவங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இந்திய உயர்ஸ்தானிகரகம், அஞ்சல் பெட்டி எண். 36-38, காலி வீதி, கொழும்பு-03 மற்றும் 47, மஹாமாயா மாவத்தை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தமது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோரின் சமீபத்திய வேதனச் சீட்டு மற்றும்…
கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் சென்னை முதலில் துடுப்பாடி 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் அடங்களாக 92 ஓட்டங்களைப் பெற்றார். வெற்றிபெற 179 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் குஜராத் துடுப்பாட ஆரம்பித்தது. சுப்பன் கில் 36 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இறுதியாக ஒரு ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் குஜராத் இருந்தது. இதன்போது தேஸ்பண்டே முதல் பந்தை அகலப்பந்தாக வீசினார். அடுத்த இரண்டு பந்துகளுக்கும் முகம் கொடுத்த தெவேசியா ஒரு சிக்ஸர் மற்று ஒரு பவுண்டரி அடித்து குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை தோல்வி அடைந்தது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஏப்ரல் 10ஆம் திகதி விசாரணை.
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற கடந்த செவ்வாய் கிழமை (28) வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரினர். இதன்போது மன்றில் இருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், குறித்த விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் எனவும் கோரினர். சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, இம்மாதம் 30 திகதி மன்றில் அறிக்கை…
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரிகளை வழங்குமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும்…
புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது.
மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன நபராக இருக்கலாம் என கந்தகெடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா.