Author: Thana
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது என தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார். “புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இது பயங்கரமானது. இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது. பேரணி சென்றால் அதனை பயங்கரவாத செயல் ஆக்கலாம். நபர்கள் கைது செய்யப்படலாம். அது தொடர்பான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்பு உத்தரவை வழங்கலாம். அதனை சவாலுக்குட்படுத்த முடியாது. இந்த சட்டமூலத்துக்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடுவோம். இருந்த சட்டமூலம் பயங்கரமானது என்பதால்தான் அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இருந்ததைவிடவும் மோசமான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Maurepas (Rennes) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் மாநகர், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா இழிநிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே மலைசூழ்ந்த பெருநகரின் குன்றினிலே இருப்போனே அலைமோதும் மனங்களுக்கு ஆறுதலைத் தாருமைய்யா நிலைகுலையா நிம்மதிக்கு உன்னருளைத் தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே எட்டுத்திக்கும் அருள் பரப்பி அருள் மாரி பொழிபவனே மட்டில்லாப் பேருவகை வழங்கிடவே வாருமைய்யா ஓட்டிவிடு தீமைகளை, நிம்மதியைத் தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை தருவோனே கிலி கொண்ட சூழ்நிலையைப் போக்கிடவே வேண்டுமைய்யா அஞ்சும் நிலை அகற்றிவிடு அமைதியையும் தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே வீணர்களின் கொட்டத்தை அடக்கியருள் தருவோனே வெற்றிகளை நமக்களிக்க விரைந்து உதவிடைய்யா வீரமிகு வாழ்வுதந்து, மனவுறுதி தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த…
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்.
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது. (SLBFE) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்த பின்னர் வெளிநாட்டுத் தொழிலுக்காக இலங்கையை விட்டு வெளியேறும் பெண்களுக்காக வெளிநாட்டுத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமான தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வீடுகள் ஏற்படுத்தப்பட்டாலும், இதுவரை பணியகத்தில் பதிவு செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டு வருகிறது. எவ்வாறெனினும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் இருக்கும்…
பேருவளை நகரில் இருந்து 24 கிலோமீற்றர் அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று மதியம் 1 மணி அளவில், 3.7 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான. மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் நாளை 31-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி அஹமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன. நான்கு வருடங்களின் பின்னர் பழைய முறைமைப்படி சகல அணிகளும் சொந்த மைதானத்திலும், அந்நிய மைதானத்திலும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் எல்பிஎல் சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது. மார்ச் 31-ம் திகதி ஆரம்பமாகி எட்டு வாரங்கள் தொடரும் 16ஆவது எல்பிஎல் அத்தியாயத்தில் 74 போட்டிகள் 12…
ஆடவருக்கான ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். சட்டோகிராமில் புதன்கிழமை நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போதே 36 வயதான பங்களாதேஷ் வீரர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் ஷகிப் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்சமயம் அவர் ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்களில் 20.67 சராசரியுடன் மொத்தமாக 136 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி 134 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். சகிப் 2006 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராகத் தனது முதல் டி:20 போட்டியில் அறிமுகமானர். மேலும் இதுவரை 114 சர்வதேச டி:20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஆடவருக்கான ஏழு ஐ.சி.சி. டி:20 உகலக் கிண்ண தொடர்களில் அவர் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்.
வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சரவணபவன் மற்றும் தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்குள் தங்கியிருக்கும் சாரதிகள், தரகர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விசா விண்ணப்ப மையத்தின் கண்டி கிளையின் போலி இணையத்தளத்தை பராமரித்து மக்களை மோசடி செய்த இளைஞர் ஒருவர் கண்டி வத்தேகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சந்தேகநபருக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். பன்விலவில் வசிக்கும் 29 வயதான இவர், ஃபிஷிங் இணையதளத்தை பராமரித்து இந்திய விசா வழங்குவதற்காக தனிநபர்களிடம் பணம் பெற்றுள்ளார். கணினி குற்றச் சட்டம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.