Author: Thana

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அளவெட்டி அருள்மிகு பசுபதீசுவரர் சிவன் திருக்கோயில் அணுவுக்குள் அணுவாயிருந்து அகிலமாளும் பெருமானே அமைதி நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய் உன்பாதம் பணிகின்றோம் எமக்கு என்றும் அருளிடைய்யா அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே அருவுருவாய், ரூபமாய் காட்சிதரும் பெருமானே அன்பு நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய் மனமுருகிப் பணிகின்றோம் எம்குறைகள் தீர்த்திடைய்யா அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே அச்சம் தடுத்தெம்மை ஆட்கொள்ளும் பெருமானே அல்லல் இல்லா சூழலிலே நாம் வாழக் கருணை செய்வாய் நம்பிவந்து அடிபற்றும் எமக்கு என்றும் அருளிடைய்யா அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே அளவில்லா நற்கருணை அளிக்கின்ற பெருமானே அரவணைப்பு பெற்று நாம் வாழக் கருணை செய்வாய் அடிபணிந்து நிற்கும் எமக்கு என்றும் அருளிடைய்யா அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே அதர்மத்தை அழித்தொழித்து அறங்காக்கும் பெருமானே அவாவில்லா மனநிலையில் நாம் வாழக் கருணை செய்வாய்…

Read More

பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டத்தரணி துஷ்மந்தி அபேநாயக்க (40), பெல்மடுல்ல புலத்வெல்கொடவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை வீட்டுப் பணிப்பெண் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த படுக்கையில் சட்டத்தரணி இறந்து கிடந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டுப் பணிப்பெண் காலையில் அந்த வீட்டிற்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்து, உணவு தயாரித்து மாலையில் திரும்புவார். பணிப்பெண் வழக்கம் போல் நேற்றுக் காலை வீட்டிற்கு வந்தபோது, படுக்கையில் சட்டத்தரணியின் சடலம் காணப்பட்டது. அவரது கணவர் வீட்டில் இல்லை என பணிப்பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். வியாழக்கிழமை இரவு சட்டத்தரணிக்கும், கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கணவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் இருந்து திரும்பிய சட்டத்தரணியின்…

Read More

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவரதனவை சந்திப்பதற்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

மாதாந்தம் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 3 கோடி முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என்றார். இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகளுடன் இதுவரை மொத்தம் 30 இலட்சம் முட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Read More

தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலப்பகுதியில் சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் விமானப்படை முகாமில் படையினர் மற்றும் காவல்துறையினரை சந்தித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பல துறைகள் மற்றும் நிறுவனங்களை தற்போது மறுசீரமைக்க வேண்டும்.இராணுவம் மற்றும் காவல்துறையும் அதில் உள்ளடங்குகின்றன.சிலர் பாதுகாப்பு செலவினத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர்.முடியுமானளவு இந்த வருடத்தில் குறைத்திருக்கின்றோம்.எதிர்வரும் 2027ஆம் மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இராணுவத்தினர் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவடையும்.ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பாலும் குறித்த வருடங்களில் பாதுகாப்பு செலவினம் பாரியளவில் குறைவடையும்.ஏனைய அரச துறைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்படாது.காவல்துறையின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.நீதியையும், நாட்டில் அமைதியையும் நிலைநாட்டும் வகையில் காவல்துறையின் எண்ணிக்கை மாத்திரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், தமது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி…

Read More

ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவர் காணாமல் போயுள்ளது. சிறுவர் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன சிறுவர் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர். சிறுவனை தேடும் பணி நடந்து வருகிறது. சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது, அவர்களிடம் இருந்து 16 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.

Read More

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வெள்ளியன்று ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாகக் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புயல் காரணமாகக் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன் சுழல் காற்றில் சிக்கிய மரங்கள் வாகனங்கள் மற்றும் மின் கம்பங்களின் மீது முறிந்து வீழ்ந்துள்ளன. சிக்காகோவில் இருந்து வடமேற்கே சுமார் 70 மைல் (113 கிமீ) தொலைவில் உள்ள பெல்விடேர் நகரில் ஏற்பட்ட சூறாவளியின் போது அப்பல்லோ திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு தேசிய தொழிற்கல்வி தகைமைச் சான்றிதழ் (NVQ) சனிக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், 28 நாட்கள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என்றும் நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

Read More

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தொடரணியில் பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் குறித்த கெப் ரக வாகனம் மைதானத்தில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 09 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 09 பேரும் பதுளை வைத்தியசாலையில் 11 ம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More