Author: Thana
கதிர்காமம் – வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெடிஹிதி கந்த பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதால், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 46 வயதுடைய பிரதீப் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டின் போது பின்னால் இருந்தவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றிய சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இந்த இணைய மோசடிகளில் ஈடுபட்டு பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தூதரகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சீன பிரஜைகளை நேற்று (1) கைது செய்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வட்ஸ்அப் தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது. இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது. செய்திகளைத் திருத்துதல் இந்த அம்சம் ஊடாக அனுப்பிய செய்தியில், விரைவில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். அனுப்பிய செய்திகளைத் இதற்காக 15 செக்கன் கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு செய்தியைத் திருத்தினால், அது அதன் குமிழிக்குள் “திருத்தப்பட்டது” என்ற அடையாளத்துடன் குறிக்கப்படும். செய்திகளைப் Pin செய்தல் இது டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் செயலிகளில் பல ஆண்டுகளாகக்…
செ.திவாகரன் பாடசாலைகளான நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மற்றும் காமினி தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக இரு பிரசித்திப்பெற்ற பாடசாலையின் நிர்வாகத்தினரும் , பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான நகரில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா – உடபுசல்லா பிரதான வீதியில் அமைந்துள்ள நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்து நுவரெலியா பிரதான நகர வீதி வழியாக குயின் எலிசபெத் , கண்டி பிரதான வீதி , பழையக்கடை வீதி போன்ற வீதிகளினுடாக சென்று மீண்டும் பிரதான வீதியூடாக நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை சென்றடைந்து வாகன பேரணி நிறைவு பெற்றது. இவ்வாகன பேரணியில் இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள் , இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் , வீரர்கள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். “Battle of Little…
லிந்துலை நாகசேன ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
நுவரெலியா கோட்டகல்வி இரண்டாம் வலையத்திற்கு உட்பட்ட லிந்துலை நாகசேன ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஜேசுதாஸன் தலைமையில் (01.04.2023) சனிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது இக் கல்லூரியில் 2022 ஆம் வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிந்து கௌரவிக்கப்பட்டது. அதேநேரத்தில் கல்வி சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெறும் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ந.தமிழரசியின் சேவையை பாராட்டி கௌரவிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக நுவரெலிய கல்வி வளையத்தின் உதவி பணிப்பாளர் எம்.கணேஷ்ராஜ், நிகழ்வின் அனுசரணையாளர் வெஸ்டர்ன் மென்பவர் நிறுவன தலைவர் திருமுடி ரகு உள்ளிட்ட அயல் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். இதன் போது ரோயல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு இன்று (02.04.2023) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரினார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத்துடன், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (03.04.2023) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார். வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலில் வழிபாகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு…
முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை இலங்கை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஒக்லன்டில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் பதிலணித்தலைவர் டொம் லேதம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சரித் அஸலங்க 67 (41), குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 (45), குசல் மென்டிஸ் 25 (09), வனிடு ஹஸரங்க ஆட்டமிழக்காமல் 21 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம் 4-0-30-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார். பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டரைல் மிற்செல் 66 (44), மார்க் சப்மன் 33 (23), டொம் லேதம் 27 (16), றஷின் றவீந்திரா 26…
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று (01) அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியாவத்தை நகர மண்டபத்தில் இடம்பெற்றது. அம்பகமுவ பிரதேச செயலகத்தின் நோர்வூட் சமுர்த்தி வங்கியின் கீழ் 319/m டில்லரி 319 / L இன்ஜஸ்றி ஆகிய பிரிவுகளுக்கான அரிசி தொகை நேற்று விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு தலைவருமான எம்.ராமேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர் ருபினி சித்தார கமகே, நோர்வூட் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் கனகசுந்தரம், டில்லரி மற்றும் இன்ஜஸ்றி பிரிவுக்கு பொறுப்பான நிஷாரியஸ் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொன்டனர்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டுமென புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகிறார். தற்போது இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுவதால், நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நிலநடுக்கமானிகளை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பற்றிய தரவுகளையும் சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டில் பல இடங்களில் அதிர்வு மீற்றர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் அதிர்வு மீற்றர்கள் பொருத்தப்படவில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டினார். 1966 ஆம் ஆண்டு ‘ஹண்டர் சர்வேயர் நிறுவனம்’ இலங்கை அமைவிடத்தின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கிய போது, கொழும்பில் இருந்து நாட்டின் உள்பகுதி வரை அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும், அது என்ன என்பதை செயற்கைக்கோள்கள் அடையாளம் காணவில்லை…
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த நோயுடன் கண்களில் இருந்து நீர் வடியும் நிலைமையு, இருப்பதாக தெரியவந்துள்ளதால், அது குறித்து விரிவான சோதனைகள்…