Author: Thana

எட்டாம்பிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுது ஒன்று பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப் படையினருக்கு தம்பதெனிய மஹ ஓய பிரதேசத்தில் இருந்து செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதிக்கு விற்பனைக்காக கஜமுது கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து கஜமுது ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். இதன்போது 59 வயதுடைய தம்பதெனிய மஹ ஓய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஜமுதுவும் சந்தேக நபரும் எட்டாம்பிடிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக எட்டாம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி, திருவானைக்கட்டி, அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் திருவானைக் கட்டியில் கோயில் கொண்ட வேலவனே திசையெங்கும் நலமருளி வாழ வைக்கும் திருக்குமரா பயங்கள் தரும் தீவினைகள் அகற்றிடவே வந்திடைய்யா இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே போற்றி நிற்கும் அடியவர்க்கு காவல் தரும் வேலவனே ஏற்றியுந்தன் தாள் பணியும் இதயங்களில் உறை திருக்குமரா ஆற்றல் தந்து அரவணைத்துக் காத்திடவே வந்திடைய்யா இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே துன்பம் வரும் போது துணையிருந்து போக்கிவிடும் வேலவனே நம்பியுந்தன் அடிபணிவோர் நலன்காக்கும் திருக்குமரா திடமனது தந்து எம்மைத் தலைநிமிர்த்த வந்திடைய்யா இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே வீணர்களின் தீச்செயல்கள் பொசுக்கிவிட விரைந்து வரும் வேலவனே வாழ்வின் நலன் காத்து வாழவைக்கும் திருக்குமரா வெற்றிகளைத் தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே பெருவீதி மருங்கிருந்து காவல் செய்யும் வேலவனே பொறுமையுடன் தாள் தொழுவோர் வளம் உயர்த்தும்…

Read More

ஹொரணை குருகொட வீதியில் சமுர்த்தி வங்கியை அண்மித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று(30) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர் 30 அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு வீதியோரத்திலிருந்த கடையின் கூரையில் கிடந்துள்ளார். விபத்தை அடுத்து அவ்விடத்துக்கு வருகைதந்த தீயணைப்புப் படை வீரர்கள் கூரையில் கிடந்தவரை பாதுகாப்பாக கீழே இறக்கி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்தனர். மோட்டார்சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதென கூறப்படுகிறது.

Read More

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் ,தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதில் கூடு கட்டி இருந்த குளவிகள் கலைந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான 72 வயது 5 பிள்ளைகளின் தந்தையான எட்வின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனைய இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது லிந்துலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஹாமில்டனில் இன்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நியூஸிலாந்தின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திண்டாடியது. இறுதியாக 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஆரம்ப வீரரான பெதும் நிஷங்க 57 ஓட்டங்களை பெற்றார். அதற்கு அடுத்தபடியாக அணித்…

Read More

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு எதிராக வேறொரு குற்றச்செயல் தொடர்பில் பிடியாணை காணப்படுவதாகவும், நால்வரையும் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். இந்த சேவைக் கட்டணக் குறைப்பு போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிம்மதியாக இருக்கும். இந்த நடவடிக்கை வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான ஒட்டுமொத்த போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன. எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் காரணமாக விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பில் நாடளாவிய ரீதியில் ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200இற்கும் மேற்பட்ட எரிபொருள் பௌசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று பிற்பகல் வரை, நாட்டில் எங்கும் வரிசைகள் அல்லது எரிபொருள் பற்றாக்குறை குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு…

Read More

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார். இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

இலங்கையை முன்னோக்கி  கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  , சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசு அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி,…

Read More