Author: Thana
2023 ஆம் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தை இலவசமாக வழங்குவதற்கான பொறுப்பை ஏற்ற சீன அரசாங்கம், அதில் 1/3 பகுதியை ஏற்கனவே வழங்கியிருந்ததுடன், மிகுதி 2/3 பகுதியையும் தற்போது வழங்கியுள்ளது. இதற்கமைய சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்க பொறுப்பேற்ற அனைத்து பாடசாலை சீருடை துணிகளும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை சீனத் தூதுவர் Qi. Zhengho ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் (09) கல்வி அமைச்சில் கையளித்தார். இதற்கமைய, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழஙகுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவேனாக்களில் கல்வி கற்கின்ற பௌத பிக்குகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹியங்கனை அளுகாத்தியாவ அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் நபர் ஒருவர் கைது. மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுகாத்தியாவ அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் போகஸ்பிடிய பெலகென்வெவ கிராந்துரு கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் வாகன பெட்டரிகளை திருடியவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது. ஹல்தமுள்ள பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாகம என்ற பகுதியில் வாகனங்களில் உள்ள பெட்டரி மற்றும் வாகன கடத்தலில் ஈடுபட்டு வந்த 38 வயதுடைய இலுக்கேட்டிய மந்தன்ன கிரிவானகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாறினால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றதினால் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா புகையிரதத்தில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர். பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர். பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான இளைஞன் தெஹிவளை பகுதியில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டு, அவரை கொழும்பு பகுதிக்கு அழைத்து வந்து தந்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சட்டவிரோதமாக 10.5 கிலோ கிராம் தங்கத்தை கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய பிரஜை உட்பட 5 பேர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தங்கத்தை மும்பைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்தை சீனி தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் சீனி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிவந்த லொறி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளியின் மீது மோதி சுமார் 50 மீற்றர் தூரம் வரை லொறியினால் உந்துருளி இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதன்போது உந்துருளியில் பயணித்த புருத்த மின்ப்பே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக புத்தளை வைத்தியசாலையின் வைத்தியரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது யுகதலாவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய லொறியின் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இருப்பினும் அப்பிரதேசத்தில் உள்ள மக்களினால் குறித்த லொறி தாக்கப்பட்டு சேதமாக்கப்ட்டுள்ளதாக புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
மொ/ முத்தமிழ் வித்தியாலயம் கடந்த க. பொ. த (சா/த) பரீட்சையில் சிறந்த பெருபேற்றினை பெற்றதனை பாராட்டி,NLH Pvt ltd தலைவரும் சமூக சேவையாளரும், மலேசிய நாட்டு பிரபல வர்த்தகருமான அந்தனி அவர்களும், மிக பின்தங்கிய பிரதேசமான மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இருந்து தனது தனி முயற்சியால் கற்று உயர்ந்து இன்று பெயர் சொல்லி உதாரணம் காட்டும் நிலையில் தன்னை வணிகத்துறையில் வளர்த்துக்கொண்ட NLH Pvt ltd ன் (CEO) நிறைவேற்று பணிப்பாளர் எஸ் .ஞரனசேகரன் அவர்கள் தான் வளர்ந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய பள்ளித்தோழன் அதிபர் திரு எஸ் . கிளிட்டஸ்குமார் அவர்களின் சேவையை நேசித்து, அந்த பாடசாலை அபிவிருத்திக்காக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து அன்பளிப்புகள் அல்லது நன்கொடைகள் மூலம் பெறப்படும் பேரீச்சம்பழத்திற்கு மட்டுமே இந்த வரி விலக்கு பொருந்தும். நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்க 2308/17 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதியினால் இந்த…
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணயக் குற்றிகள், 2023.03.09ஆம் திகதி தொடக்கம் முதலில் வருவோருக்கு முதலில் வழங்குதல் அடிப்படையில் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் பெற்று, குற்றியொன்றுக்கு ரூ.6,000 விலையில் விற்பனைக்காகக் கிடைக்கப்பெறும் என்பதுடன் பின்வரும் மத்திய வங்கி விற்பனை நிலையங்களில் ஆளொருவருக்கு ஒரு குற்றி வீதம் என விற்பனை மட்டுப்படுத்தப்படும்.