Author: Thana
வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல் அகழ்விற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8 ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில்…
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- வெருகல்- அருள்மிகு- சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில் பெருமைமிகு தமிழ் மண்ணில் நின்றருளும் பெருமானே வரும் நன்மை வந்தடைய துணையிருக்க வேண்டுமைய்யா பெருமைமிகு நம்பழைமை நிலைத்துலகில் பரவிவிட அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே மகாவலிப் பெருநதியில் தீர்த்தமாடும் பெருமானே பகலவன் போல் எம்குலத்தோர் ஒளி பெருக்க வேண்டுமைய்யா தமிழ்க் குலத்தோர் நிலைத் தென்றும் தனித்துவத்தைப் பேணிவிட அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே ஆவணியில் விழாக்காணும் அற்புதனே பெருமானே அவனியிலே மனித குலம் அமைதியுற துணையிருக்க வேண்டுமைய்யா தெளிவான மனவுறுதி என்றும் நாம் பெற்றுவிட அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே கிழக்கிலங்கை கோயில் கொண்டு காவல் தரும் பெருமானே கிட்டிவரும் துன்பங்களை அகற்றிவிட துணையிருக்க வேண்டுமைய்யா எட்டுத் திக்கும் நன்மை பெற என்றும் நாம் பெற்றுவிட அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே தோகை மயில் மீதமர்ந்து காட்சி தரும் பெருமானே தோல்வியில்லா…
பதுளை மாவட்ட செயலகத்தில் விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஒருவர் பதுளை வின்சன்டைஸ் மைதானத்தில் வைத்து நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான விளையாட்டு துறை உத்தியோகத்தர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பதுளை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தங்களது விளையாட்டு துறை உத்தியோகத்தர் தாக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்கியவரை உடன் கைது செய்யுமாறு கோரியும் பதாதைதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊவா மாகாண முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தாக்கிய நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராமு தனராஜா
வி.தீபன்ராஜ் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை ( 12.03.23)மாலை முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா பிரதான நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை இயக்குரான ராஜமவுலி இயக்கிய R R R திரைப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஒஸ்கார் விருதாகும் இதற்கு முன் ஏ.ஆர் .ரகுமானுக்கு இந்த விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹேஸ்வரி விஜயனந்தன் பல வரலாற்றுச் சிறப்புகளையும் அனைவரையும் கவரும் இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டதாகவும் மலையகத்தின் தலைநகரமாகவும் விளங்கும் கண்டி மாநகரம் மட்டுமின்றி அதனை அண்மித்த பிரதேசங்களும் அனைவரையும் எப்போதும் கவர்ந்த பிரதேசமாகும். பொதுவாகவே இலங்கையின் பிரதான நகரங்கள் மற்றும் அதனை அண்மித்த உப நகரங்கள் எப்போதும் தூய்மையாகவே காணப்படும். ஆங்காங்கே சில பிரதான நகரங்களில் இது விதிவிலக்காகக் காணப்பட்டாலும் பெரும்பாலான நகரங்கள் காலை வேளைகளில் தூய்மையாக காணப்படுவதானது எமது நாட்டின் உள்ளூராட்சி நிறுவனங்களின் சிறப்பான நிர்வாகத்தை எடுத்தியம்புவதாக அமைகிறது. ஏனெனில் நகரங்களை தூய்மையாக வைத்திருக்கும் பணி, அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் தலையாய கடமை என்பதுடன், இதற்காகவே அனைத்து நகரங்களிலும் நகர சுத்திகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் காணப்படுவர். இவர்களின் முக்கிய பணி நகரையும் அதனை சார்ந்த பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்பது என்றாலும் இம்மக்களின் குடியிருப்புகள் மற்றும் அதனை சார்ந்த பிரதேசங்கள் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகளின்றி அசுத்தமாக மக்கள்…
சமூகத்தின் சொத்தாகவும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டிய முதியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 3 மில்லிய்யனை அண்மிக்கலாம் என நம்பப்படுவதாக சிறுவர், மகளிர் அலுவலகம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அஸ்லின் தெரிவித்தார். கொழும்பில் அண்மையில் மெதடிஸ்ட் திருச்சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், முதியோர்களுக்கான தேசிய செயலகமானது, 2000ஆம் ஆண்டு 9ஆம் இலக்க முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனமாகும். முக்கியமாக இலங்கையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நலன்கள், வலுவூட்டல், சமூக பாதுகாப்பு தொடர்பில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரச நிறுவனமான தமது நிறுவனம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். மேலும் இலங்கையில் 468 முதியவர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதாகத் தெரிவித்த…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் பண்டாரவளை, பூனாகலை கபரகலை அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் கருணையுள்ளம் கொண்டவனே கதிர்வேலா காத்தருள வேண்டுமைய்யா எங்களையே என்றும் தோல்வி பயம் இல்லாமல் நாம் வாழவேண்டும் அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா அருள் பொழியும் திருமுகத்தை உடையவனே கதிர்வேலா அரவணைக்க வேண்டுமைய்யா எங்களையே என்றும் துவழாத மனநிலையில் நாம் வாழவேண்டும் அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா நல்லவர்கள் உடனுறையும் நாயகனே கதிர்வேலா ஆறுதலைத் தரவேண்டும் எங்களுக்கு என்றும் வெற்றிமுகம் நோக்கி நாம் வாழவேண்டும் அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா கேட்டவரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் கதிர்வேலா உன்காவலைத் தர வேண்டும் எங்களுக்கு என்றும் உளநலமும், உடல்நலமும் பெற்று நாம் வாழவேண்டும் அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா ஆடியிலே விழாக்காணும் அற்புதனே கதிர்வேலா ஆதரவைத் தர வேண்டும் எங்களுக்கு என்றும் தைரியம் கொண்டோராய் நாம் வாழவேண்டும் அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட…