Author: Thana

வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்க்கான நடவடிகையை தற்போது இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Read More

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நு/லோவர்கிரன்லி தவி யில் இன்று காலை விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாடசாலைஅதிபர் பாலகிருஸ்ணன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விசேட விருந்தினர் சமூகசெயற்பாட்டாளர் அ.ரெ.அருட்செல்வம் கலந்து சிறப்பித்திருந்தார். பாடசாலை ஆசிரியைகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் தினம் தொடர்பாக விசேட உரையினை சமூகசெயற்பாட்டாளர் அ.ரெ.அருட்செல்வம் அவர்களும் பாடசாலை அதிபர் பாலகிருஸ்ணன் அவர்களும் நிகழ்த்தினர். பால்நிலை சமத்துவம் பெண்களி உரிமைகள் கல்வியின் அவசியம் பெண் தலைமைத்துவம் அரசியல்,சமூக,கலாசார பொருளாதார,அபிவிருத்தியில் பெண்களின பங்களிப்பு பற்றி பேசப்பட்டது. பாடசாலையில் கடமையாற்றும் பெண் ஆசிரியர்கள் தமது மகிழ்ச்சியை வெளிபடுத்தி இன்றைய நாளை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியைகள் சார்பில் திருமதி.தமிழ்செல்வி நன்றி பாராட்டினார்.  

Read More

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது. இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும். நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அரச, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான…

Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து ,தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பில்  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1857ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. நியூயோர்க் நகரில்  இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இந்தத் தினத்தைப் பிரகடனம் செய்ய வழிவகுத்தது. 1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தில் குறிப்பிட்ட வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி ஊர்வலங்கள் இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து ஒருவருடத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை . கிளாரா ஜெட்கின் 1910இல் முதல் முறையாக அறிவித்தார். 1910ஆம் ஆண்டு டென்மார்க்கில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது சமர்ப்பிக்க யோசனைக்கு அமைய மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி தொடக்கம் சர்வதேச மகளிர் தினம்…

Read More

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அன்னமலை – 01, அன்னமலை – 02,  நாவிதன்வெளி – 01, சவளக்கடை, சாளம்பைக்கேணி – 03 , சாளம்பைக்கேணி – 04, மத்திய முகாம் – 01 உட்பட 12 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். வீதிகளுக்கு நீர்விநியோகக் குழாய்கள் பொருத்தப்படாமல் இருந்ததாலேயே மக்கள் இவ்வாறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் மக்களின் சார்பில், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான  யோகநாயகன்,  அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். இக்கடிதம் கிடைத்த கையோடு, மக்களின் பிரச்சினை உடன்…

Read More

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டுவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,நலன்புரி கொடுப்பனவை விரைவில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். விண்ணப்பதாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகள் வீடுகளுக்கு வருகை தரவுள்ளவுள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு அடுத்த சில வாரங்களில் 1,996 வீடுகள் நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம். குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடனான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடிப்படை திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்த அதிகாரசபை கூறியது. இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையில் கைச்சாத்திடப்பட்டது. சீன அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் சீன அரசாங்கத்தின் மத்திய தெற்கு கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவன கூட்டுத்தாபனத்தின் செயலாளர்  ஷென் தாவோ ஆகியோர் கைச்சாத்திட்டனர். இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அமைச்சரின்…

Read More

தந்தை, தாய், பிள்ளைகளின் சடலங்கள் வவுனியிவில் கண்டெடுப்பு. வவுனியா – குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையே இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 42 வயதான தந்தையும், 36 வயதான தாயாருக்கு , 9 மற்றும் 3 வயதான மகள்களுமே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளின் சடலங்கள் வீட்டில் இரண்டு நாற்காலிகளிலும், மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More