Author: Thana
சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில் 24,523 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் 07, 08, 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, முதல் இரு போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், மற்றைய போட்டி கண்டி, பல்லேகலை மைதானத்திலும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 14 – 24 வரை 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், ஜூன் 29 – ஜூலை 08 வரை இடம்பெறவுள்ளது. தசுன் ஷானக தலைமையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரி20 அணி வருமாறு – தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க, வனிந்து ஹசரங்க,…
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நேற்று(01) நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீடுப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதல் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீடுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். சவால்களுக்கு மத்தியில் இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. பரீட்சைகள் பற்றி சில முறைபாடுகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறினார். அந்த முறைபாடுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள்…
நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவிக்கையில் இன்று 2ஆம் திகதி முதல் எதிர் வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கமைய 2 ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியால மின்துண்டிப்பும் 4 ஆம் திகதி ஒரு மணித்தியால மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும் 5 ஆம் திகதி மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார். அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 5 வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார். கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (01) மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துமிந்த சில்வாவை சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (01) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி வெளிநாட்டுக்கு செல்வதற்கான இடைக்கால தடையையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி, வரலாற்று சிறப்புமிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, ஆதரவாளர்கள் தங்கள் அணியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக, இலங்கையின் நிலைமை குறித்து மீளாய்வு செய்வதற்கு பல கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே, போட்டியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். இலங்கையில் அரசியல் ரீதியாக நடக்கும் சில விஷயங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், இது பாகிஸ்தானில் நடப்பதைப் போன்றது. அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி எமது பாதுகாப்புக் குழுவினர் வாரந்தோறும் எங்களுக்கு தகவல்களை அறியத்தருவார்கள். நாம் அங்கு பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர். அதனால் தான் கிரிக்கெட் போட்டியில் முழு கவனம் செலுத்தி வருகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக மிட்செல் ஸ்வெப்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மீண்டும் காஸ் விநியோகம் இன்று (31) முதல் ஆரம்பமாகுமென லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 50 ஆயிரம் சமையல் எரிவாவு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. 3,500 மெட்ரிக் தொன் காஸ்சுடன் கூடிய கப்பல் நேற்று காலை நாட்டை வந்தடைந்தது. இந்த காஸ்ஸை தரையிறக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் முதல் இந்த காஸ்ஸை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸ்ஸை பெற்றுக் கொள்ளும் விற்பனை முகவர்கள் தொடர்பான தகவல்களை லிற்றோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 28ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர்…