Author: Thana
அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் ஆரம்பம் இம்முறை தேசிய பொசன் தின நிகழ்வு அனுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை புனித பூமிகளை மையமாகக்கொண்டு இடம்பெறும். தேசிய பொசன் நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் நேற்று ஆரம்பமானது. தேசிய பொசன் நிகழ்வு மிஹிந்தலை, அனுராதபுரம், அட்டமஸ்தான, தந்திரிமல புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார். அரச பொசொன் வைபவம் மிஹிந்தலை புனிதபூமியில் நடைபெறுகிறது. இன்று தொடக்கம் அனுராதபுரம், மிஹிந்தலை உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருடர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் இது குறித்து உஷார் நிலையில் உள்ளனர். இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக சுமார் இரண்டாயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது. 16 இலங்கை பொறியியலாளர் சேவை படையணியை சேர்ந்த ஸ்டாப் சார்ஜென்ட் பண்டார 51 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்வருமாறு:
எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய எரிபொருள் வகைகளை எளிதாகக் அறிந்து கொள்வதற்கான முறையொன்று அறிமுகம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அவற்றில் இருக்கக்கூடிய எரிபொருள் வகைகளை எளிதாகக் அறிந்து கொள்வதற்கான முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் , அவற்றிலுள்ள எரிபொருள் வகைகள் மற்றும் அவற்றின் இருப்பு முதலானவற்றை அறிந்துகொள்ள முடியும். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் முகாமைத்துவ கட்டமைப்பு ஊடாக நாடு முழுவதிலும் இடம்பெறும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மிக இலகுவாக முகாமைத்துவப்படுத்தப்படுவதுடன் அந்த தகவல்களை பொது மக்கள் இலகுவாக அறிந்துகொள்வதற்கு வசதிகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தேவையற்ற வரிசைகள் ஏற்படுவதைப் போன்று பாவனையாளர்களின் நேரத்தை சேமிப்பதற்கும் முடிவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா…
இலங்கை மக்களில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவையென்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சனத்தொகையில் 22 வீதமானவர்கள் அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக ஹனா சிங்கர்-ஹம்டி கூறுகையில், குறிப்பிட்டுள்ளார். “குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும், அவர்கள் உணவுக்காக பல்வேறு மாற்று வழிகளை கையாண்டுள்ளதை நாங்கள் அவதானித்து உள்ளோம் மேலும் இரசாயன உரம் இல்லாததால் 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஏப்ரல் 2021 இல் இரசாயன உர இறக்குமதியை தடை செய்ததை தொடர்ந்து உற்பத்திக்கான இறக்குமதி செலவு சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் குழுவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் (HNP) திட்டத்தை இன்று…
இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இந்த விதி முறை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இருப்பினும் முகக்கவசதத்தை அணிவது தடுக்கப்படவில்லை. முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2264/9 என்ற 2022 ஜனவரி 25ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்ட இவ்விடயம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது உகந்தது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் யுத்த தாங்கி அழிப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. 6G தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீற்றர் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசாங்கத்திற்கு சொந்தமான ரபாயல் உயர் பாதுகாப்பு நிறுவனம் புதிய ஏவுகணையை தயாரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்து குறித்த ஏவுகணையை இயக்கக்கூடிய திறனும் காணப்படுவதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுச்சீட்டுகளை மாத்திரம் வழங்கியது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 2,500 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேர் திருப்பி அனுப்ப படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றமையே இந்த நிலைக்குக் காரணம். இதனால் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலை 6.15 க்கு ஆரம்பித்து இரவு…
சுகாதார துறைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது 450 மில்லியன் ரூபா அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம், பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கக்கூடிய குழுக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். வருடாந்தம் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எனவே இன்னும் இரண்டு வருடங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான அளவு பணம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளுக்கான கோரிக்கை வழங்கிய பின்னர், மருந்துகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு வழங்குவதற்கு சிறிது காலம் ஆகலாம். இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மருந்துப் பொருட்கள் குறித்து சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார் அந்த காலத்திற்குப் பிறகு மருந்துப் பொருட்கள் குறித்து நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன், பற்றாக்குறையாக…