Author: Thana

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குசீட்டுக்கள் விநியோகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

Read More

டீ. சந்ரு நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து. நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி நானுஓயா குறுக்கு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுடன் இருவர் நுவரெலியா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போசாக்கின்மையை குறைப்பதற்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு- உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை. தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கவும் தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும், 2022 ஏப்ரல் மாதத்தில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை கட்டம் கட்டமாக வழங்கவும் அமைச்சரவை…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக ஆணைக்குழு நேற்று (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அலுவலகம், பாடசாலை, உள்ளூராட்சிட்சி அமைப்பு, பொது நிறுவனம் அல்லது சட்டப்பூர்வ அமைப்பு ஆகியவற்றில் வேட்பாளர்கள் சார்பாக ஆதரவு கோருவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது அல்லது இதுபோன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே, அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் தொழில்சார் சங்கங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

பத்தரமுல்லையில் அமைந்துள்ள  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி ,இன்று (14) காலை 8.00 மணி தொடக்கம் வழமைபோன்று  மீண்டும் ஆரம்பமானது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (13) நண்பகல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. “நேற்று விண்ணப்பங்களை ஒப்படைத்த அனைவரது கடவுச்சீட்டுக்களும் இன்று வழங்கப்படுவதாக “குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இன்றைய தினம் திணைக்களத்திற்கு வருகை தர முடியாதவர்களுக்கு கொரியர் சேவையின் மூலம் கடவுச்சீட்டை வீடுகளில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ,”சேவையை பெற்றுக் கொள்வதற்காக இன்று நேரத்தை ஒதுக்கி கொண்டவர்கள்…

Read More

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம்  சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவும் இதில் கலந்துகொண்டார். இதன்போது ,உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது ,அமைச்சர் பதிலளிக்கையில், “இதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் கடன் பெற்றும், பணத்தை அச்சிட்டும் அரசாங்கங்கள் தேர்தல்களை நடாத்தி வந்தன. ஆனால்; தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. ஓரளவேனும் நெருக்கடியைக் குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து நாட்டின் கடனை மறுசீரமைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதனால், பணம் அச்சிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.…

Read More

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு. மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பதியதலாவ வீதியில் தெயஹிகொல்ல பாடசாலைக்கு அருகாமையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் குறித்த நபர் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பதுளை, மடூல்சீமை , பசறை , லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய பதுளை பொலிஸாரினால் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்று மந்தினம் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த அதிபரையும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு மேலும் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் அவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளார் ராமு தனராஜா

Read More

கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம், வத்தளை- ஹேகித்த- அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலவனே விநாயகருக் கிளையோனே சிவனார் மைந்தா வெற்றிவேல் தாங்கி நிற்கும் உன்துணையே வேண்டுமைய்யா நல்லவர்கள் மனம் குளிர என்றும் நீ கருணை செய்வாய் ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா ஆறுபடை வீடு கொண்டு அருளுகின்ற சிவனார் மைந்தா ஆற்றலுடன் எழுந்து நிற்க உன்துணையே வேண்டுமைய்யா நேர்மை கொண்டோர் வெற்றிபெற என்றும் நீ கருணை செய்வாய் ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா மேற்கிலங்கை வீற்றிருந்து துயர் களையும் சிவனார் மைந்தா மேதினியில் தலைநிமிர உன் துணையே வேண்டுமைய்யா பண்பாடு சிதறாமல் என்றும் நீ கருணை செய்வாய் ஹேகித்தயில் கோயில் கொண்ட சிவசுப்பிரமணியரே சரணம் ஐயா சிந்தையிலே உறைந்திருந்து வழிகாட்டும் சிவனார் மைந்தா சிதறாத மனவுறுதி பெற்றிடவே உன்துணையே வேண்டுமைய்யா சீர்மை நிறை வாழ்வு பெற என்றும் நீ கருணை செய்வாய் ஹேகித்தயில் கோயில் கொண்ட…

Read More