Author: Thana
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களை சகலருக்கும் கிடைக்கும் வகையில் பங்கிடுசெய்வதற்கு வசதியாக ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர்மட்டும் அட்டையினை பயன்படுத்தவும், எரிவாய்வு என்றால் ஒருமாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் மண்ணெண்ணெய் குறித்த அளவிலும் வழங்குவதற்கு என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பங்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பிலும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (27) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன விசேட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கமைவாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் பஸ் சேவைகளைப் பயன்படுத்தாமல் பாடசாலைகளை இயக்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட தூதுக்குழு ஒன்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளனர். ஆசிய விவகாரம் தொடர்பான திறைசேரி பிரதிப் பணிப்பாளர் ரொபர்ட் கெப்ரோன், தெற்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பான பிரதி இராஜாங்கச் செயலாளரும், தூதுவருமான கெலி ஹிடலின் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர். இவர்கள் நாட்டில் உயர்நிலை பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதேபோன்று அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர். இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி பயனுள்ள முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கை மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்திற்காக அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி வருவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்க் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத முதல் வாரமளவில் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக லிற்றோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஓமானில் இருந்து வரும் இந்த இரண்டு கப்பல்களில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து எரிவாயு கப்பல்களுக்கு மேலதிகமாக தொடர்ச்சியாக 4 மாத காலத்திற்கு இலங்கைக்கு எரிவாயு கிடைக்கவிருப்பதாகவும் லிற்றோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டார்.
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று செயலாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில், செலவந்த மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரஸ் (António Guterres) உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்தார். பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும். அதனால், இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும். உணவு கிடைக்காத பிரச்னை, உலக அளவில் உணவு தட்டுப்பாடாக மாறும். அது…
சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் ,இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, 5 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்தது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று (24) நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து 161 ஓட்டங்கள் என்ற…
இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது. மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை கந்தகாடு விவசாயப் பண்ணையை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கந்தகாடு பண்ணையின் 1,215 ஹெக்டேயரை இராணுவத்தினருக்கும், மேலும் 500 ஏக்கரை புனர்வாழ்வு திணைக்களத்திற்கும் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின்படி கந்தகாடு விவசாயப் பண்ணையில் உள்ள 11,000 ஏக்கர் நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
குரங்கு அம்மை நோயை , உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையாக அறிவித்துள்ளது. 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. 3 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கும் அது பரவக்கூடும். இதனால் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.