Author: Thana
இராகலை – சென் லெணாட்ஸ் தோட்டத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து சம்பவத்தில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. சென் லெணாட்ஸ் தோட்டத்தை சேர்ந்த (14) வயதுடைய சிறுவன் வீட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் தனது சகோதரனான இரண்டரை வயது குழந்தையை ஏற்றிக்கொண்டு இராகலை நடுகணக்கு பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளளார்.
தலவாக்கலை , மிடில்டன் தோட்டத்தில் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=mHE_7KAtsUA தீயினால் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது பிரதேச மக்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கமும் போலவே சில கட்சி அரசியல் தரப்பினரும் தமது அரசியல் மேடைகளிலும், மாநாடுகளிலும், ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் பல்வேறு விமர்சனக் குரலை எழுப்பிக் கொண்டு இருந்தாலும் இறுதியில் அவை வெறும் பேச்சுக்களாகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரயோக ரீதியாக நடைமுறைக்கு வந்த பாடில்லை எனவும் அவர் தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம், வளங்கள் மற்றும் அந்நிய செலாவணி தேவைப்பட்ட போதிலும்,தற்போதைய அரசாங்கத்தால் மக்களின் கோரிக்கைகளுக்குத் தேவையான பொருட்கள் விநியோகத்தைக் கூட வழங்க முடியவில்லை எனவும்,அவர்கள் இயலுமையற்றவர்கள் என்பதால், பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், கொள்கையளவில் அதை தாம் நிராகரித்ததாகவும், சுவாரசியமான, வேடிக்கையான, ஆர்வத்தைத் தூண்டும் பேச்சுக்களைக் கூறும் நபர்களை விட நடைமுறை ரீதியாக மக்களுக்கு சேவையாற்றுபவரே…
அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது…
வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் – ஆராச்சிக்கட்டு – இராஜகதழுவ, அருள்மிகு மானாவரி சிவன் திருக்கோயில் மேற்கிலங்கை கோயில் கொண்டு மேன்மை தரும் சிவனே மேதினியில் நல்லமைதி நிலவிடவே அருள்வாய் மேன்மை மிகு சிந்தனையை எமக்கருள வேண்டும் மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே இராமபிரான் பூசித்த பெருமை கொண்ட எங்கள் சிவனே அச்சமில்லா நிம்மதியே நிலவிடவே அருள்வாய் ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்ய வேண்டும் மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே இராமலிங்க சுவாமி என்ற பெயர் பூண்ட சிவனே இவ்வுலகில் அமைதியே உறுதிபெற அருள்வாய் இன்பம் நிறை வாழ்வு தந்து எமக்கருள வேண்டும் மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே இராஜேஸ்வரி அம்பாளை உடன் கொண்ட சிவனே இந்நாட்டில் எம்முரிமை உறுதிபெற அருள்வாய் இன்னல் இல்லா வாழ்வு தந்து எமக்கருள வேண்டும் மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே புனிதமிகு நற்பதியில் வந்தமர்ந்த சிவனே பூவுலகில் இயற்கை வளம் உறுதி பெற அருள்வாய்…
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில் திக்கின்றித் தவித்து நிற்போர் வழிகாட்டும் பெருமாளே துணையிருந்து வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா துன்பங்கள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய் திக்கெட்டும் அருள்பரப்பி வழிகாட்டும் பெருமாளே அறிவுதந்து ஆற்றல் தந்து வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா அச்சங்கள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய் திருவருளை நாடிநிற்போர்க்கு அருள் வழங்கும் பெருமாளே உரிய வழி காட்டியெம்மை வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா அச்சங்கள் அண்டாது எமை யென்றும் காப்பதற்கு திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய் தீமைகளைத் தடுத்தென்றும் துயர் போக்கும் பெருமாளே தீராத பகை கொடுமை தடுத்து வழிகாட்ட விரைந்து நீ வந்திடைய்யா அதர்மங்கள் அண்டாது எமை யென்றும் காப்பதற்கு திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய் தீராத…
இன்று முதல் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமைக்கான கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று முதல் இலங்கைக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான டிஜிட்டல் பிரதியை சமர்ப்பிக்கவேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் தாங்கள் கொவிட்டினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் நேற்று(13) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கவரவில தோட்ட இளைஞருக்கு 50 இலட்ச ரூபா நாட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாமிமலை கவரவில தோட்டத்தைச் சேர்ந்த நல்லையா சிவகுமார் என்ற 33 வயது இளைஞரின் மரணத்துக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக ஹொரண பிளாண்டேசன் நிர்வாகத்தின் ஊடாக 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலைகள் வைப்பிலிடப்பட்டு குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இறந்தவரின் மனைவிக்கு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலையும் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜி. நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். கவரவில தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சிவகுமார் 2022 நவம்பர் மாதம் 24 ஆந் திகதி தோட்டத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில்…
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகரம் கொச்சிக்கடை – அருள்மிகு பொன்னம்பல வாணஸ்வரம் திருக்கோயில் கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட பெருமானே கொள்கை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா நேர்மை மிகக் கொண்ட நல்லாட்சி நாளும் நிலைபெறவே வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற பெருமானே பக்குவம் பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா புனிதமிகு நல்லாட்சி நாளும் நிலைபெறவே வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே அருவுருவாய் ரூபமாய் அதற்கப்புறதிலுமாகி நின்று ஆளுகின்ற பெருமானே அமைதி நிலை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா அச்சமில்லா நல்லாட்சி நாளும் நிலைபெறவே வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே கேட்டவரம் தந்தெம்மை வாழவைக்கும் பெருமானே ஒழுக்க நிலை பிறழா நிலை நின்று வாழவைக்க வேண்டுமைய்யா தவறில்லா நல்லாட்சி நாளும் நிலைபெறவே வழியமைப்பாய் எங்கள் பொன்னம்பல வாணேஸ்வரத்திலுறை பெருமானே அன்புருவாய் அருளுருவாய் உலகாளும்…