Author: Thana
முச்சக்கரவண்டியொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச்சம்பவம் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியோரோவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. புப்புனிதநீராட்டு விழா ஒன்றிற்கு ஐவர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஜெயசேகெதர சந்திக்கு அருகாமையில் குறித்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 58.65 வயதுடைய இரண்டு ஆண்டுகளும் மூன்று 46.28. வயதுடைய படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.59வயதுடைய பெண் பலியானார் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
பிடிதளராதே அமைப்பு ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் நேற்று பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, கொமர்ஷல் லேக் பகுதியில் நடைபெற்றது. மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பிற்பகல் 03 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகின. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த 2019 டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2020 ஜனவரியில் மஸ்கெலியாவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 2021ம் ஆண்டு பத்தனை சந்தியில் நடைபெற்றது.…
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள் தயாரிப்புக்களுக்கு தொழில்நுட்ப உதவி அவசியம்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு மற்றும் வளர்ச்சி மட்டத்திற்குப் பாதிப்பேற்படாது பேணுதல் தொடர்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தத்தம் பிராந்தியங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக முன்வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 558 முன்பள்ளிகளில் 18584 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் 209 முன்பள்ளிகளின் 6749 சிறார்களுக்கு தலா மாணவருக்கு 100 ரூபா வீதம்…
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை : காங்கேசந்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
2023 வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஊடாக, அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களில் இருந்தும் 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வெளிநாட்டு கடன் உதவியை பெற முடியாத நிலையில நாடு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. எனவே இதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாக இவ்வருடம் அனைத்து அமைச்சுக்களினதும் மூலதனச் செலவு தவிர்ந்த மீள் எழும் செலவில் இருந்து 5 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சுக்களின் நாளாந்த செலவுகள் உட்பட அமைச்சுக்களின் செலவுகளை இயன்றவரை குறைத்துக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சின் ஊடாக…
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். தொழிலாளர் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்கள் மீது தாக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் தனித் தனியாக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறியும் விசேட தேடுதல் பிரிவொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பிரச்சனைகளுக்குரிய பதில் கடிதங்களை அனுப்பும் போது தமிழ் மொழியில் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மன்னார், மாதோட்டம்- அருள்மிகு திருக்கேதீஸ்வர சிவன் திருக்கோயில் சித்த மெல்லாம் நிறைந்துறைந்து சீர்வழியைத் தருபவரே எத்திக்கும் உன்னருளால் ஏற்றம் பெறவேண்டும் நத்திவரும் பக்தர்களின் நலன் பேணி விட்டிடைய்யா கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே உள்ளமெல்லாம் குளிர்ச்சி பெற உணர்வு தருபவரே உண்மையெங்கும் உன்னருளால் உறுதிபெற வேண்டும் மண்ணில் வாழும் உயிரினங்கள் நலன் பேணி விட்டிடைய்யா கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே உயர்வாழ்வு வாழ நல் வழியைத் தருபவரே மனவுறுதி கொண்டு நல் வாழ்வு பெறவேண்டும் தெளிவு கொண்ட மனம் தந்து நலன் பேணி விட்டிடைய்யா கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே முத்தமிழைப் போற்றி யென்றும் பெருமை தருபவரே மூவுலகும் போற்றுகின்ற நல் வாழ்வைப் பெறவேண்டும் மூர்க்க மற்ற மனம் தந்து நலன் பேணி விட்டிடைய்யா கௌரி அம்மையுடன் உறையும் கேதீஸ்வரப் பெருமானே பாலாவி கரையிருந்து நல் அருளைத்…
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பலியிகியுள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரத அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள்சேர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என புகையிரத பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்தார். சேவையின் தேவையின் அடிப்படையில் அவர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்கப்பெறும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31 ஆம் திகதி புகையிரத சேவையில் இருந்து சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்து, அத்தியவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணியமர்த்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், அமைச்சில் தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதற்கான சட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு தொழிலாளர் சட்டக் குறியீடு ஒன்று தயாரிக்கப்படவுள்ளதுடன், அதில் தோட்டத் தொழிலாளர்களுக்கான விசேட சட்டங்களை உள்ளடக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இக்கலந்துரையாடலில், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளமையினால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் திணைக்களத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தமிழிலும் அனுப்பப்பட வேண்டுமென அமைச்சர் உரிய கலந்துரையாடலில் பணிப்புரை விடுத்துள்ளார்.