Author: Thana
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வேலணை – அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில் காவலூரில் வந்துறையும் கணபதியே சரணமப்பா கவலை களைந் தெம்மை வாழ வைக்க வருவாயப்பா காலமெல்லாம் உடனிருந்து காத்திட வேண்டுமப்பா வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே அறம் காக்க வந்துறையும் கணபதியே சரணமப்பா அச்சம் களைந் தெம்மை வாழ வைக்க வேண்டுமப்பா என்றும் உடனிருந்து உயர்வு தர வேண்டுமப்பா வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே உமையவளின் திருமகனாய் வந்துதித்த கணபதியே சரணமப்பா உள்ளத்தில் அமைதி தந்து வாழ வைக்க வேண்டுமப்பா உறவுகள் வளம் பெறவே காத்திட வேண்டுமப்பா வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே வேண்டும் வரம் தந்து அருளுகின்ற கணபதியே சரணமப்பா வெற்றி முகம் தந்து வாழவைக்க வேண்டுமப்பா வற்றாத பெருங் கருணை தந்திட வேண்டுமப்பா வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே வேழமுகம் கொண்டமர்ந்து நன்மை…
பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி!
பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பில், ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 3 வாக்குகளும் பதிவாகின. இதில், ஐக்கிய தேசய கட்சியை சேர்ந்த 7 உறுப்பினரும், ஜே.வி.பியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 3 உறுப்பினரும், பொதுஜன பெரமுனவை சேர்ந்த 2 உறுப்பினரும் எதிராக வாக்களித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் இதற்கு நடுநிலை வகித்துள்ளனர். மேலும் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற 2023 ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் லுணுகலை பிரதேச…
மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தேசிய உதைபந்தாட்டத்தில் சாம்பியன். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. போட்டி இன்று (24.11.2022) கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது. இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். வெற்றிபெற்று முதன்மை வீராங்கனைகளாக கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை வாழ்த்துவதோடு, இந்த வெற்றிக்காக அயராது உழைத்த பிரதம பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார்(சாந்தன்) உதவிப் பயிற்றுநர் செல்வி இலக்சனா ஆகியோரை பாராட்டுகின்றோம்.
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது. எனவே சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 25,517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019 டிசெம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சீனாவில் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக ஒரு நாள் பாதிப்பு பதிவாகியுள்ளது. ஜீரோ கொவிட் என்ற இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், கொரோனா வீரியம் குறைந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சீனாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலை அமைந்துள்ள செங்சோவ் பகுதியில் பொலிஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் போராட்டம் வெடித்தது. கொரோனாவால் விடுப்பில் சென்றவர்களுக்குப் பதிலாக வேறு பணியாட்களை நியமிக்கக் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது.
வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை பேருந்து மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும், மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் டிப்பர் சாரதி உட்பட காயமடைந்தோர் மாங்குளம் வைத்தியசாலையிலும், வவுனியா வைத்தியசாலையிலும், கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, போட்டித் தடையோடு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கத்தை மாற்றும் மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி
அரசாங்கத்தை மாற்றுவதற்காக மீண்டுமொரு போராட்டத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை. அத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே அதனை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். எமது நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. அதை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதுவரையிலும் நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. இன்றும் அதே பழைய முகங்கள் தான் உள்ளன. இதில் மாற்றத்தை ஏற்படுத்தவே இளைஞர்கள் முயற்சிக்கின்றனர். 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகம் திறக்கப்படும். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும். துறைசார் குழுவுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்காக ஐவரின் பெயர்களை டிசம்பர் மாத இறுதிக்குள் முன்மொழியுமாறும்…
புகையிரதம், பஸ், பாடசாலை வாகன சேவை மற்றும் டக்சி சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தலைமையில் அண்மையில் (21) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்துத் துறையினர் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், போக்குவரத்துத் துறையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள…
கொத்தமலை நெனோதா சிங்கள பாடசாலை பொல்வத்துற பகுதியை சேர்ந்த சுமார் 160 மாணவர்களுக்கு உளர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கடந்த 20/11/22 அன்று நெனோதா சிங்கள பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வு ஸ்ரீரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளர் மற்றும் விஷ்ணு ஆரோகணம் சமூகசேவை மன்றம், மலரும் மலையகத்தின் ஸ்தாபகர் , தலைவர் கலாநிதி சதாநந்தன் திருமுருகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.