Author: Thana
ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளையை சேர்ந்த கந்தசாமி யோகேஸ்வரனை காணவில்லை . ரில்லாமுல்ல தோட்டம், மத்துரட்ட குரூப், கந்தப்பளை எனும் முகவரியை உடைய கந்தசாமி யோகேஸ்வரன் (உயரம் 6.2 உடி, பொது நிறம்,மெலிந்த உடல் அமைப்பு) என்பவரை கடந்த 28.02.2026 ஆம் திகதி முதல் எவ்வித தொடர்பு கொள்முடியவில்லை. கொழும்பு கம்பாஹ பிரதேசத்தில் கட்டிட கட்டுமான பணியிடத்தில் வேலை செய்து 10.02.2026 ஆம் திகதி முதல் கொழும்பு கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் வேலை செய்வதாக உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். மேலும் கடந்த 28.02.2026 ஆம் திகதி பொலிசார் தன்னை கைது செய்துள்ளதாகவும் காலை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்து விடுவதாகவும் வெளிநாட்டில் தொழில்புரியும் தனது மனைவிக்கு குரல்பதிவுe அனுப்பியுள்ளார். அதன் பிறகு இதுவரையில் அவரது தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது). குடும்பத்தார் ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தினூடாகவும் தெரிந்த நண்பர்களுடாகவும் கொழும்பின் பல பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது எந்த…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அவசியம் மறைந்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் நினைவு நிகழ்வில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய முழுமையான உரை. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், லண்டன்- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடத்திய மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஓராண்டு நிறைவு மற்றும் நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையின் முழு வடிவம் .பாராளுமன்ற உறுப்பினர்களும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்விற்கு “வீரகேசரி” பிரதம ஆசிரியர், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீகஜன் தலைமை தாங்கினார். இலங்கையில் சட்டத்துறை ஜாம்பவானாக இருக்கிற ஜனாதிபதி சட்டத்தரணி கனகநாயகம் கனகேஸ்வரன் உட்பட மேடையில் இருக்கிற பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரையும் அன்போடு விளித்துக்கொண்டவனாக, இங்கு இந்த…
பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது மற்றும் மக்களின் நலனை உறுதி செய்வது குறித்து ஆராயும் வகையில், “பொருளாதார கண்காணிப்புக் குழு” நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்த உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைப்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது. இந்நாட்டு சந்தை நிலவரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு…
மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை என்பதை மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அட்டன் பிரகடனத்தின் மூலம் மலையக மக்களுக்கு அவர்களின் நில உரிமைத் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கொட்டகலை, சித்திவிநாயகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார். “அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது வந்து வெளியிட்ட அட்டன் பிரகடனம். மலையகத்தில் பயிரிடப்படாத காணியெல்லாம் மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எங்கேயாவது காணி கொடுத்தார்களா? சொன்னார்கள் கொடுக்கவில்லை.” ஒக்டோபர் 15, 2023…
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி: மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கி கணக்குகளில்!
அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (மார்ச் 12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், பாரியதொரு நிதி ஒதுக்கீடு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டப் பயனாளிகள்: மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு முதலாம் கட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1,408,635 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டப் பயனாளிகள்: அதேபோல், இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கும் நாளை நிதி விடுவிக்கப்படவுள்ளது. இதற்காக 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது. முக்கிய அறிவிப்பு: பயனாளிகள் தத்தமது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து இன்று முதல் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.…
நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4,330 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 4,630 ரூபாவாகும். 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1,742 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 1,862 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஈரான் மீதான போரில் அமெரிக்கா வெற்றி: ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ குறித்து டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்கா வெற்றி: ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ குறித்து டிரம்ப் அதிரடி அறிவிப்பு வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 11 நாட்களாகத் தொடர்ந்த இந்தத் தீவிரமான தாக்குதல்களில், ஈரானின் இராணுவக் கட்டமைப்பு கிட்டத்தட்ட முழுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அழிக்கப்பட்ட இராணுவ பலம்: புள்ளிவிவரங்களுடன் இந்த வெற்றியை உறுதிப்படுத்திய டிரம்ப், ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார். ஈரானின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் (Drones) அமெரிக்க இராணுவத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஈரானின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் படைகள் தற்போது வான்வெளியில் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படுவதாகக் கூறினார். ஈரானின் கடற்படைக் கப்பல்கள் பலவும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலதிகத் தகவல்களை வழங்கினார். தாக்குதலை நிறுத்தத் தயார்: ஈரானில்…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், சர்வதேச சமூகம் மூன்று முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். முன்வைக்கப்பட்டுள்ள 3 நிபந்தனைகள்: சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது: நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல்: சர்வதேச சட்டங்களின்படி ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மை மற்றும் உரிமைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். போருக்கான நட்டஈடு (Reparations): தற்போதைய போர் மற்றும் தாக்குதல்களால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு அல்லது நட்டஈடு வழங்கப்பட வேண்டும். சர்வதேச உத்தரவாதங்கள்: எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல்கள் நடத்தப்படாது…
புத்தளத்தில் மீண்டும் சிறுவர் கடத்தல் முயற்சி: முகக்கவசம் அணிந்த மர்ம நபர்களால் பரபரப்பு புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் மத்ரஸா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்துவதற்கு மர்ம நபர்கள் முயற்சித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை (10) காலை, அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவில் பாடங்களை முடித்துவிட்டு இரண்டு சிறுவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வாகனத்தில் இருந்த முகக்கவசம் அணிந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென சிறுவர்களைத் துரத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடித் தப்பித்துள்ளனர். குறித்த நபர்கள் தங்களைத் துரத்தியதாக சிறுவர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இதேபோன்றதொரு கடத்தல் முயற்சி கடந்த வாரமும் இதே வீதியில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் உண்மையானது என்பதை அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.…
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை: பணிக்குத் திரும்பாவிடின் கடும் நடவடிக்கை!
இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் புதிய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிக்குச் சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் புதிய முகாமைத்துவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், கடந்த மார்ச் 09 முதல் மின்சார சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாகத் தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவது அனைத்து ஊழியர்களினதும் சட்டப்பூர்வமான கடமையாகும் எனவும், பணிக்குச் சமூகமளிக்க மறுப்பது பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் கடும் உத்தரவு தற்போது மின்சார சபையின் பணிகள் பின்வரும் நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன:…