Author: Thana

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால விஷ போதைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” (ரக்ட்ட எகட்ட) தேசிய செயற்பாட்டு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் மாவட்ட செயற்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்படுவதாகவும், நாட்டிற்கு கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை இல்லாது ஒழிப்பதும், அதன் வளங்களை இல்லாது அழிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என மாவட்டச் செயலகத்தில் (14.01.2026) நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்கள் தெரிவித்தார். மேலும் அமைச்சர் தெரிவிக்கையில், இதற்காக மாவட்ட மட்ட செயற்பாட்டு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு உரிய முறையில் பொலீஸ் மற்றும் பிரதேச மட்டத்திலே கடமையாற்றுகின்ற உத்தியோகத்தினுடைய வழிப்படுத்தலில் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்ததார். எனினும் போதைப்பொருளின் பரவலின் ஆபத்தான கட்டம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய சிறுவர்களான நாளைய தலைவர்களை ஆற்றுப்படுத்துகின்ற வழிபடுத்துகின்ற ஒரு…

Read More

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இத்திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே. இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும். நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றோம். கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக, மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு ‘மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாம் அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய…

Read More

கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவியொருவரை அனுமதிப்பதற்கு லஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: புகார்: வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோரப்பட்ட தொகை: குறித்த நபரின் மூத்த மகளை 2026 ஆம் ஆண்டிற்காக விசாகா வித்தியாலயத்தின் முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 3 இலட்சம் ரூபாய் லஞ்சமாக கோரப்பட்டுள்ளது. கைது: இதில் ஒரு இலட்சம் ரூபாய் ஏற்கனவே மூன்று சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 இலட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றபோது, திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்து நேற்று (ஜனவரி 13) இரவு 7.45 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

கொழும்பு, ஜனவரி 14, 2026: இலங்கையில் நிலவி வரும் மழை உடனான வானிலை நாளை (ஜனவரி 15) முதல் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை நிலவரம்: மழைப்பொழிவு: ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மாலை நேர மழை: மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள்: நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். பனிமூட்டம்: மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று…

Read More

வறக்காபொல பொலிஸ் பிரிவின் ஹுனுவல பகுதியில் உள்ள ஒரு வயலில் செவ்வாய்க்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினர், வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹுனுவல, துலிஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வறக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தளபாடங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார். ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், “நாங்கள் அனைவரும் ஒரே அளவில்தான் பாதிக்கப்பட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம்…

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தெரிவித்த வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் 25,000 ரூபா நிதி உதவி வழங்கப்படும். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026. 01. 14

Read More

‘கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ அங்குரார்ப்பண நிகழ்வில் சந்திரா குசுமாவதி எவரிட், ஜி. ரசங்க பிரகீன் பெர்னாண்டோ, பீ. நிமேஷா மதுமாதலி சிறிவர்தன மற்றும் டி.எம். சமந்த சரத் ஆனந்த ஆகியோர் காணிகளை நன்கொடையாக வழங்கினர். அதன்படி * செவெந்தன, வதாகடவில் வசிக்கும் சந்திரா குசுமாவதி எவரிட், குருநாகல் அலவ்வ பகுதியில் 02 ஏக்கர் 29.5 பேர்ச்சஸ் காணியையும், • வேகட, பாணந்துறையைச் சேர்ந்த ஜீ.ரசங்க பிரகீன் பெர்னாண்டோ, களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் 70 பேர்ச்சஸ் காணியையும், * குருநாகல், வேவகெதரவில் வசிக்கும் பீ. நிமேஷா மதுமாதலி சிறிவர்தன, குருநாகலை பொல்பிதிகம பகுதியில் 64 பேர்ச்சஸ் காணியையும், * ஹிங்குல, ஓவத்தேயைச் சேர்ந்த டி.எம். சமந்த சரத் ஆனந்த, குருநாகலை மாஸ்பொத பகுதியில் 15 பேர்ச்சஸ் காணியையும் நன்கொடையாக வழங்கினர். ஜனாதிபதி…

Read More

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது. அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த…

Read More

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனம் இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனிக்கப்பட்டுள்ளார். 1957 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சாரணர் சட்ட விதிகளின்படி, இந்த நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் அவரிடம் கையளித்தார். கனிஷ்ட சாரணராக பன்னிப்பிட்டிய கிறிஸ்துராஜ கல்லூரியின், முதல் ஹோமாகம சாரணர் குழுவில் 1989 ஆம் ஆண்டு இணைந்த இவர், பின்னர் பதில் மாவட்ட ஆணையாளராகவும், சாரணர் மாவட்ட பயிற்சி சபையின் தலைவராகவும், தலைமை சாரணர் ஆணையாளரின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய அளவிலான சாரணர் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தலைமை வகித்துள்ள அவர் ,தேசிய மனிதநேய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் தேசிய கபோரியவின் தேசிய ஏற்பாட்டுக் குழுவின்…

Read More