Author: Thana

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளம் ஆரம்பம் நமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்றிணைத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தவே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் – ஜனாதிபதி அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொண்ட காலத்திற்குப் பதிலாக, பேரழிவுகளுக்கு முன்னால் மீண்டெழுந்து, முன்பை விட சிறந்த நாட்டை மக்களுக்கு விட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் மாற்றத்துடன்…

Read More

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார். அதற்கமைய, 01.மனிதவள மேம்பாடு  02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்  0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள்  04.பாடத்திட்ட மேம்பாடு  05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த…

Read More

திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகளை வீடியோவாக பதிவு செய்து, வீடியோக்களை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் கூறுகையில், குற்றவாளிகள் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய மேம்பட்ட தொழில்நுட்ப கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். “இந்த கேமராக்கள் சட்டை காலர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, பாக்கெட்டில் பேனா அல்லது லாட்ஜ்களில் படுக்கைகளுக்குள் உள்ளன. தனிநபர்கள் தங்கள் எஜமானிகள் மற்றும் இளம் காதலர்களுடனான பாலியல் உறவுகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், தாங்கள் காதலிக்கும் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இளம் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்துகின்றனர்.” “சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் 45 வயதுடைய ஒரு பெண், ஒரு பேக்கரியில்…

Read More

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

E-மோட்டார் அட்டை அறிமுகத்துடன், இலங்கை பொலிஸுக்கு 500 டேப்லெட்களை வழங்கிய இலங்கை காப்புறுதி சங்கம் இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) E-Motor காப்புறுதி டிஜிட்டல் அட்டையின் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு விழா மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 500 டேப்லெட் கணினிகளை வழங்கும் நிகழ்வு பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சக கேட்போரியக் கூடத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜனவரி 7ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில் IASL அலுவலக பொறுப்பாளர்கள், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையம் (IRCSL), அனைத்து பொது காப்புறுதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொது காப்புறுதி மன்றம் (GIF) உறுப்பினர்கள், இலங்கை பொலிஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்பு பங்காளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றம் (MSF) ஆகியோர் கலந்து கொண்டனர். மோட்டார் காப்புறுதியை நவீனமயமாக்குவதிலும், டிஜிட்டல் பொது சேவைகளை வலுப்படுத்துவதிலும்நாட்டின்…

Read More

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார். 2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு…

Read More

உலகளவில் STEM வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,உள்ளூர் உருவாக்குநர்களின் பற்றாக்குறையால் ஆபத்தை எதிர்கொள்ளும் இலங்கை இலங்கை நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் கல்வித் துறையில் முன்னணி உள்ள நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் நடைபெறுகின்ற பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் கல்வி முறைமையும் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபட வேண்டும் என்றாலும், இலங்கையில் அந்த மாற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாக, தற்போதைய இளைஞர்கள் எதிர்கால உலகத்தை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. இந்தச் சூழலில் STEM கல்வி மிக முக்கியமானதாகிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கல்வியை எளிதாக அணுகும் வாய்ப்பு இன்று மாணவர்களுக்கு கிடைக்கிறது. பாடசாலை பாடத்திட்டத்தைத் தாண்டி அறிவையும், புரிதலையும் வளர்த்துக்கொள்ள இணையம் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. கல்விமுறைமைகளில் உள்ள தாமதங்களால் உருவாகும் குறைபாடுகளை குறைப்பதற்கும் இது உதவுகிறது. இன்றைய தலைமுறை…

Read More

வி.தீபன்ராஜ் குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் ஒருவர் பலி நானுஓயா கிடிமிட்டி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். அவர் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, குளவி கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நானுஓயா கிடிமிட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜா லெட்சுமி என்ற 78 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார். சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவடன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரும் வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு…

Read More