Author: Thana
தனது பிள்ளையின் விடுகை பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழு வரை சென்ற தாய். நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள கோட்டம் 2 இல் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதற்காக பெற்றோர் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்த பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. குறித்த பிள்ளையுடன் படித்த ஏனைய ஓரிரு மாணவர்களுக்கு விடுகை பத்திரம் கொடுத்த போதிலும் அந்த அதிபர் தனது பிள்ளைக்கு மாத்திரம் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாய் குறித்த பிரச்சனை தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக முறைப்பாடுகளை கொண்டு சென்ற போதிலும், அவருக்கான தீர்வினை அதிகாரிகள் மற்றும் அதிபர் பெற்றுக் கொடுக்கவில்லை. குறித்த தாய் பல தடவைகள் பாடசாலைக்கு வந்து சென்றுள்ளார். தனது பிள்ளைகளை ஒரே பாடசாலையில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் பொருளாதார ரீதியில் தன்னை…
நீண்ட காலமாக அரசாங்கத்தால் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாத இலங்கை அஞ்சல் சேவைகள், கடந்த ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளன. தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார, 2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் துறைக்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானம் ஈட்டுவதில் தபால் துறை வெற்றி பெற்றுள்ளதாகக் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் துறைக்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட, இலங்கை தபால் துறை ரூ. 13,100 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என்றும் தபால் மா அதிபர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில், இலங்கை தபால் துறை புதிய ஆட்சேர்ப்புகளையும் நிரந்தர நியமனங்களையும் செய்துள்ளது, மேலும் புதிய தபால் அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார மேலும் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இலங்கை தபால் சேவையின் 378 துணை தபால் மா அதிபர்களுக்கு 2025 ஜூன் மாதம் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும், 2020 ஆம்…
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள், லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நுவரெலியா பொரளாந்த பகுதியில்இருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா பீட்ரு நோக்கி சென்று கொண்டிருந்தது லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இவ்விபத்து தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.
STEM கல்வியின் ஐந்தாவது தூண்: அறிவியலுடன்;பாதுகாப்பையும்ஏன் கற்பிக்க வேண்டும்? பல தசாப்தங்களாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வி புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக விளங்கி வந்துள்ளது. ஆனால் தொழில்நுட்பம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்றைய சூழலில், பாதுகாப்பு இல்லாத புத்தாக்கம் என்பது மறைமுகமான பலவீனமாகும். இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பை விரிவுபடுத்துகிறது. எனவே, அடுத்த தலைமுறையை டிஜிட்டல் பொருளாதாரத்தில் தலைமைத்துவத்திற்குத் தயார்படுத்த, STEM கல்விக்கு பாதுகாப்பு என்ற ஐந்தாவது தூண் அவசியமாகிறது. புத்தாக்கத்தின் வேகம் பாதுகாப்பின் வேகத்தைக் கடந்துவிட்டதால், மாணவர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்க கற்கிறார்கள் ஆனால் அதை பாதுகாக்க கற்பதில்லை. பல்கலைக்கழகங்கள் தரவு பகுப்பாய்வை கற்பிக்கின்றன. ஆனால் நெறிமுறைகளுக்கு போதிய கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக,ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு கசிவுகள், தவறான தகவல்கள் போன்றவை அதிகரித்துள்ளன. இவை தொழில்நுட்பத் தோல்விகள் மட்டுமல்ல,…
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (9) மாலை இரண்டு பேருந்துகளும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லயிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மொலகொட பல்பத்த பகுதியில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கவிருந்தபோது, பூண்டுலோயா டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, தனியார் பேருந்துடன் மோதி, முன்னோக்கிச் சென்று வயலில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பேருந்தின் பின்புறம் கொழும்பு நோக்கிச் சென்ற கொள்கலன் லாரியுடன் மோதியதில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மாவனெல்ல-கேகாலை தனியார் பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொய்ப் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (09) ராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்தின் பின்னர் மக்களின்…
கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம்
கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (08) முற்பகல் கையளித்தார். கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க, கடல்சார் மற்றும் விநியோகத் துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுபவம் வாய்ந்த நிபுணராவார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மாநாடு உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த புதிய பதவியில் அவர் கௌரவ அடிப்படையில் பணியாற்ற இணைந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026.01.08
அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M திட்டம் ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ், அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M திட்டம் ஆரம்பம் – 2026 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட ஆண்டாக மாறும். – இலங்கை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியாளர்கள் இந்தளவு பாரிய இழப்பீட்டை வழங்கி மக்களைக் கவனித்துக் கொள்ள தலையீடு செய்ததில்லை. – மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த அரசாங்கம் இது . – பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னிருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக் கொடுப்போம் – ஜனாதிபதி. இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 – 25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு, வீடமைப்பு அதிகார…