Author: Thana
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பானது மாவட்டத்தின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய எதிர்வுகூறல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மண்சரிவு தொடர்பான விசேட எச்சரிக்கை அறிவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது தற்போது (2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு) மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலை பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையில் கிழக்குக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100…
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதீகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ஊடகப் பிரி
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன்படி, காணிகளை நன்கொடையாக வழங்க விரும்புவோர் www.rebuldingsrilanka.gov.lk என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.…
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள்காட்டி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட கூறுகையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்கம் கிழக்கு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் மத்திய ஆகிய பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். அதற்கமைய வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் 75 – 100 மி.மீ வரையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்துள்ளது. அவ்வாறே வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் 50 – 75 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.…
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 86.00 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. இத் தொகுதி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் ரூபா நன்கொடை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் ரூபா நன்கொடை டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்து 400 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதன்படி, South Asia Gateway Terminals (SAGT) – 100 மில்லியன் ரூபாவும் Nations Trust Bank – 100 மில்லியன் ரூபாவும் Lanka Marine Services Pvt Ltd – 50 மில்லியன் ரூபாவும் Jaykay Marketing Services Pvt Ltd 50 மில்லியன் ரூபாவும் Union Assurance 50 மில்லியன் ரூபாவும் Elephant House 50 மில்லியன் ரூபாவும் ஆகிய நிறுவனங்களினால் வழங்கப்பட்டன. அதற்கான காசோலைகளை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்த டி. குணதிலக்க மற்றும்…
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாகப் பெய்த அதிகப்படியான மழை காரணமாக நிலம் ஏற்கனவே அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தறை மாவட்டத்தின் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, பதுளை, வெலிமடை, லுணுகலை ஆகிய பகுதிகளுக்கும், கண்டி மாவட்டத்தின் தொழுவ, மாத்தறை மாவட்டத்தின் அம்பன்கொல மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அதுரட்ட, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை (Yellow) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தத் தொகுதியானது அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்க மண்டலமாக வலுவடைந்து, நாளை (08) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை அண்மிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்தார். இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையுடனான வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மெரில் மெந்திஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.