Author: Thana
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05) புகையிரத திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா மற்றும் திணைக்களத்தின் பிற அதிகாரிகள், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.பி. விதானகே மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது, புகையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
வெனிசியுலா மீது அமெரிக்கா நடத்திய அறிவிக்கப்படாத இராணுவத் தாக்குதலின் விளைவாக, நாட்டின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி கடத்தப்பட்டதைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க ஆர்வலர்கள் ஒரு பெரிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க ஆர்வலர்கள், வெனிசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரையில் 1,500ற்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் முதல் பெண்மணி சிலியா புளோரஸை அமெரிக்கா கடத்தியதைக் கடுமையாகக் கண்டித்து, வெனசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்திய தொழிற்சங்க மையத்தின் 18ஆவது அகில இந்திய மாநாட்டின் நான்காவது நாளில், அமெரிக்க ஏகாதிபத்திய படையெடுப்பு மற்றும் வெனிசியுலா மீதான குண்டுவீச்சைக் கடுமையாகக் கண்டிக்கும் ஒரு தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெனிசியுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும்…
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும். இதேவேளை,318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி…
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கல்வியை வடிவமைத்தல் அஸ்மா அன்ஜும், TikTok இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர்
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கல்வியை வடிவமைத்தல் அஸ்மா அன்ஜும், TikTok இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர் சமூக ஊடகங்கள் மாணவர்களின் கற்றல் முறையை TikTok மாற்றியுள்ளன. இந்த மாற்றம் தகவல் வேகமாகக் கிடைப்பதால் மட்டும் நிகழவில்லை. மாறாக, கவனம் செலுத்தும் விதம், ஆர்வம், சகமாணவர்களின் தாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் நிகழ்கிறது. இத்தளங்களில் கற்றல் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல. அது ஒரு கூட்டு அனுபவம். மாணவர்கள் தங்கள் நண்பர்கள் எதைப்படிக்கிறார்கள், எப்படி அணுகுகிறார்கள் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கவனித்து, அவற்றைப் பின்பற்றி,உடனடி கருத்துகளைப் பெறுகின்றனர். இது புதிய கருத்துகளை ஆராயவும் பரிசோதிக்கவும் வாய்ப்பளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், அரைகுறை புரிதல்கள், தவறான கருத்துக்கள், நிரூபிக்கப்படாத போக்குகள் ஆகியவை வேகமாகப் பரவும் ஆபத்தும் உள்ளது. சமூக ஊடகத் தளங்களின் கடமை வெறும் உள்ளடக்கத்தை வழங்குவதோடு நின்றுவிடக் கூடாது.பரிந்துரைகள் எவ்வாறு காட்டப்படுகின்றன, பயனர்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றனர் என ஒவ்வொரு…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரும், அவரது இளைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அசாம் மாநிலம் மோரிகோவன் மாவட்டத்திற்கு அருகில் இனறு திங்கட்கிழமை (05) அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை NCS எனப்படும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மோரிகோவன் மட்டுமின்றி, அருகில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் எதிரொலித்தது. இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். கடும் பனிப்பொழிவை சந்தித்து வரும் வடகிழக்கு மாநில மக்கள், நிலநடுக்க அச்சத்தால் திறந்த வெளியில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதேசமயம், பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மோதரையில் உணவகத்திற்குள் நுழைந்து சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் உட்பட 08 பேர் கைது
கொழும்பு-15, மோதரை (முகத்துவாரம்) பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள மக்களைத் தாக்கி, சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக மோதரை காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸ் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மோதரை காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அநுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய…
வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதியின் ‘நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்’ போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக “அசாதாரணமான இராணுவ நடவடிக்கை” முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். பாதுகாப்பான மற்றும் முறையான அதிகாரப் பரிமாற்றம் இடம்பெறும் வரை, வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலா மக்கள் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாறுவார்கள் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் இதனால் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மதுரோவுக்கு நேர்ந்த கதி தமக்கும் ஏற்படும் என்பதை வெனிசுலாவின் ஏனைய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என டிரம்ப்…