Author: Thana
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மருத்துவ மரபாகும். இது வேறு எந்த மருத்துவ முறையிலிருந்தும் உருவானதல்ல; தமிழர் நாகரிகத்தின் அறிவியல் அடையாளம். சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் ஒரு கிளை எனப் பார்க்கும் தவறான புரிதல்கள் இன்று பரவலாக உள்ளன. ஆனால் வரலாறு, இலக்கியம், மொழி, மரபு ஆகிய அனைத்தும் சித்த மருத்துவம் தனித்துவமான தமிழர் மருத்துவம் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. சித்த மருத்துவத்தின் அடிப்படை சித்தர்கள் ஆவர். அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை ஆராய்ந்து, மருத்துவ நூல்களை தமிழில் வழங்கினர். “உடல் கோயில், உயிர் சிவன்” என்ற சித்த தத்துவம் நோயை மட்டும்…
அந்தனி ஜீவாவின் முதலாம் ஆண்டு நினைவுமலர், முத்திரை வெளியீடும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் 11.01.2026 ஞாயிறுக்கிழமை மாலை 4.00 மணி ”இலக்கியப் புரவலர்” ஹாசிம் உமர் முன்னிலையில் பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் செல்வி பிரியங்கா ஆன் பிராசிஸ் தமிழ் வாழ்த்து பாட, வரவேற்புரையை மேமன்கவி நிகழ்த்துவார். (புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பார். சிறப்பு அதிதிகளாக இலங்கை கலைக்கழக தலைவர் கீர்த்தி வெலிசர, அரச இலக்கியக் குழு தலைவர் கமல் பெரேரா ஆகியோரும் கலந்து சிறப்புரை நிகழ்த்துவார்கள். தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கம். முன்னாள் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி மலர் வெளியீட்டுரை , தினகரன் பிரதம ஆசிரியர் தே. சேந்தில்வேலவர் நிகழ்த்துவார் நினைவு பேருரையை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை முது நிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எம். ஜெயசீலன் ”அந்தனி ஜீவா- மலையக அடையாளத்தின் சமரசமற்றக் குரல்” என்றத்தலைப்பில் உரையாற்றுவார் .கருத்துரைகளை கவிஞர் சு.முரளிதரன், ஹேமசந்திர பத்திரன, சதீஸ் செல்வராஜ். ஆரோக்கியம் பிரான்சிஸ் ஆகியோர் நிகழ்த்துவார்கள். மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும் விருந்தினர் கௌரவம், நன்றியுரை. கே.பொன்னுத்துரை செயலாளர் அந்தனிஜீவா ஞாபார்த்தக் குழு தகவல் மேமன் கவி.
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும் உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மருத்துவ மரபாகும். இது வேறு எந்த மருத்துவ முறையிலிருந்தும் உருவானதல்ல; தமிழர் நாகரிகத்தின் அறிவியல் அடையாளம். சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் ஒரு கிளை எனப் பார்க்கும் தவறான புரிதல்கள் இன்று பரவலாக உள்ளன. ஆனால் வரலாறு, இலக்கியம், மொழி, மரபு ஆகிய அனைத்தும் சித்த மருத்துவம் தனித்துவமான தமிழர் மருத்துவம் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. சித்த மருத்துவத்தின் அடிப்படை சித்தர்கள் ஆவர். அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை ஆராய்ந்து, மருத்துவ நூல்களை தமிழில் வழங்கினர். “உடல் கோயில், உயிர் சிவன்” என்ற சித்த தத்துவம் நோயை மட்டும்…
இலஞ்சக் குற்சாட்டு -நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கைது
நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், வீட்டிலிருந்து கடமைக்கு சமுகமளிப்பதற்காக மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியைப் பெறுவதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு, பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 72,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (05) காலை 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மேலேயுள்ள விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்…
மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (06) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலும் 3 மாவட்டங்களுக்கு ‘அவதானமாக இருக்குமாறும்’, மற்றுமொரு 4 மாவட்டங்களுக்கு ‘விழிப்பாக இருக்குமாறும்’ மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசங்கள் வருமாறு: எச்சரிக்கை நிலை 3 – வெளியேறுங்கள் (சிவப்பு) கண்டி மாவட்டம்: உடுதும்பர நுவரெலியா மாவட்டம்: நில்தண்டஹின்ன, வலப்பனை எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருங்கள் பதுளை மாவட்டம்: கந்தகெட்டிய மாத்தளை மாவட்டம்: வில்கமுவ நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத, மதுரட எச்சரிக்கை நிலை 1 – விழிப்பாக இருங்கள் …
ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் ஏதேனும் பேரழிவு சூழ்நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன கூறியுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பதுளை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாத்தியமான ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன், கனமழையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மண்சரிவு அல்லது பாறை விழுதல் போன்ற அறிகுறிகள் குறித்து மக்கள் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், மழைமானி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார். நுண்கடன் பெற்ற சுமார் 200 பெண்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வைப்பாளர்களிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது…
கதிர்காம ஆலயத்தின் தங்கத்தை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் தொடர்பில் கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே கருத்து
கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். “சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. தங்கத்தை சரியான முறையில் விற்பனை…
நாட்டின்பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்தத கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை…