Author: Thana
‘டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட 642,375 வீடுகளில், கொடுப்பனவு வழங்கப்பட வேண்டிய தகுதியான வீடுகளாக 469,457 வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 299,513 வீடுகளுக்கு இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி இன்னும் 169,944 வீடுகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக அரசாங்கம் 7.487 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. உடனடி நிவாரணங்களுக்காக அரசாங்கம் இதுவரை 4,197 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. பெருளமளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நேரடி ஒருங்கிணைப்புடன் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட உணவு, உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்ட பின்னர்,…
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (20) காலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தேகம, தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையாகும். சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதிக்கு வரும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று (21) முதல் காலி முகத்திடலில் விசேட “பொதுமக்கள் உதவி சேவை நிலையம்” ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டுப் பங்களிப்புடன் இயங்கும் இந்த நிலையத்தின் ஊடாக, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான முழுமையான பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையம் பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் பிரதான நிலையமாகச் செயற்படுவதுடன், அவசர நிலைமை அல்லது எதிர்பாராத சம்பவங்களின் போது உடனடி உதவிகளை வழங்கவும், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நிலவும் சூழலைக் கண்காணித்தல் மற்றும் ஏதேனும் அவசர நிலைமைக்கு உடனடியாக பதிலளித்தல் ஆகியவை இதன் அடிப்படை நோக்கமாகும். பாதுகாப்பு மற்றும்…
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட் மக்களின் உள மேம்பாட்டுக்கான Clean Sri Lanka – ‘Beyond Recovery’ மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட் மக்களின் உள மேம்பாட்டுக்கான Clean Sri Lanka – ‘Beyond Recovery’ மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பம் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உள நலனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘Beyond Recovery’ புதிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான முதற்கட்ட செயலமர்வு நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்த செயலமர்வின் கீழ், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 6 பிரதான மாவட்டங்களில் உளநலம் குறித்த புரிதல் உள்ள மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளதோடு, இந்தப் பயிற்சித் திட்டங்கள் இந்நாட்டின மனநல நிபுணர்களால் நடத்தப்படும். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு மையங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வேலைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் தொடர்கள் நடத்துதல் உட்பட உளவள ஆலோசனை வேலைத் திட்டங்களை உருவாக்குவது குறித்தும்…
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம்
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 100,000க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்தனர். மேலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், இதன் விளைவாக நாட்டின் வருமானம் மற்றும் கொடுப்பனவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அவசரகாலத்தின் போது சர்வதேச நாணய நிதியம் அளித்த உதவிக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த உதவி அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு பெரிதும் உதவும். நிதி ஒழுக்கம், கடன் நிலைபேற்றுத்தன்மை மற்றும் இந்த நிதிகளைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலைப்…
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், வீடுகள் மற்றும்…
ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தியில் இன்று (20) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். டயகமவிலிருந்து கண்டி நோக்கி இன்று காலை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தேனீர் குடிப்பதற்காக பத்தனையில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பேருந்தின் பின்புற கதவிலிருந்து பிரதான வீதிக்கு இறங்கிய இரு பயணிகள் மீது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறி மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் வட்டவளை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பயணி படுகாயமடைந்த நிலையில் முதலில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய பொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து – அத்துமீறும் கனரக வாகனங்கள் அச்சத்தில் பொது மக்கள்
செ.திவாகரன், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து – அத்துமீறும் கனரக வாகனங்கள் அச்சத்தில் பொது மக்கள் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று மாலை (19) பாரவூர்தி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். வெளிமடையில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியின் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தடையாளி (பிரேக்) இயங்காமையே சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையின் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் பாரவூர்தியில் பயணித்தவர்கள் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை (2025-12-19) மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள் எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது – அதன்படி, 700 பில்லிய்ன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தின்போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிக இழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம் – அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் கடுமையான நிதி ஒழுக்கம் இந்த கடினமான நேரத்தை எதிர்கொள்ள எங்களுக்கு தைரியத்தை அளித்தது. கூடுதலாக ஒதுக்கப்படும் 500 பில்லியன் நமது கடன் எல்லையை அதிகரிக்காமல் பயன்படுத்தப்படும். கூடுதலாக 500 பில்லியன் ரூபாய் சந்தைக்கு வரும்போது பணவீக்கம் மற்றும் மாற்று விகிதத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களுக்கே…