Author: Thana
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சிக்கு முஸ்தீபு .
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சிக்கு முஸ்தீபு . ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ் என்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் 2.45 மணி அளவில் தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் இறங்கினார். தனது 9 வயது மகனுக்கு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரதமர் வைத்திய அதிகாரி தனது மனைவி ஊடாக போதை பொருள் வழங்கி வருவதாகவும், சில அரச அதிகாரிகளும் வைத்தியரும் இணைந்து தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார். இந்த சம்பவம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்த போதிலும் இந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார் அதனை தொடர்ந்து தனது முறைப்பாட்டை இன்றைய தினம் தலவாக்கலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு வந்த போதிலும் அவர்களும்…
மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளில் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளில் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு குறைந்துள்ளதால் சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட ஆபத்து பகுதிகளை ஆய்வு செய்யும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கும் வரை ஆபத்து பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, பதுளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எச்சரிக்கையாக இருங்கள் கண்டி மாவட்டம்: – உடுதும்பர – மினுபே – மடதும்பர – தொழுவ நுவரெலியா மாவட்டம்: – வலப்பனே – ஹகுரான்கெத்த நில்தண்டாஹின்ன – மதுரா பதுளை மாவட்டம்: – சொரணதோட்டை – லுணுகல…
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் எமது நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன. அதற்கமைய, சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ பெயரிடப்பட்டுள்ளது. சுனாமி பேரழிவு மற்றும் இதுவரை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இம்முறையும் “தேசிய பாதுகாப்பு தின” நினைவுகூரல் நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை காலி, பெராலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மாவட்ட…
(க.கிஷாந்தன்) உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2025 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 24.12.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர். 24.12.2025 அன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிரீன் சேனல் கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புதிய வானம் விருது விழா மூன்றாவது முறையாக களுத்துறை மாவட்டம் ஹொரணையில் கடந்த 15/12/2025 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசு அசோக் ராஜா கலந்து கொண்டிருந்தார். அவரோடு சிங்கள திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர் தேவிந்த கோங்காகே இலங்கையின் பிரபல தொழிலதிபர்கள், தமிழ் இலக்கியவாதிகள் ,ஊடகவியலாளர்கள் ,சினிமா பிரமுகர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் ,குறித்த நிகழ்வில் 50 மகத்தான ஆளுமையாளர்களுக்கு புதிய வானம் விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை,இந்திய நாடுகளைச் சேர்ந்த சமூகத்தின் மகத்தான ஐம்பது ஆளுமைகளை தேர்வு செய்து அவர்களுக்கு மகுடம் சூடும் மாபெரும் விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் திருமதி.தனலட்சுமி மாதவன் மற்றும் ஊடகவியலாளர்; மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரினால் நடத்தப்பட்டு…
புனித நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்காக ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் நடந்து சென்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் அன்பு மற்றும் உறுதியை முன்மாதிரியாகக் கொண்டு, வேதனையான யதார்த்தத்தை எதிர்கொண்டு,சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து எழுவோம்! மனிதநேயத்தை மெருகூட்டும் இனிய நத்தார் தின வாழ்த்துகள்! உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும். கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின்…
நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை
2026 ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுததுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இருந்து கல்வி அமைச்சினால் கிராமிய, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக கஷ்டப் பிரதேசங்களில் வாழும் பாடசாலை மாணவிகளை இலக்காக வைத்து தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்காக சுகாதாரத் துவாய்களை வழங்கும் திட்டம், 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கியதாக தரம் 6 இற்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக விசேட செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகளின் சுகாதாரம் தொடர்பாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தினவின் பங்குபற்றலுடன் அண்மையில் (22) இசுறுபாயவில் கல்வி…
சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்பு திட்டம்
சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்புத் திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் (ceygate Travels (pvt) ltd) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் (23) நடைபெற்றது. சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படக்கூடிய கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சார்பாக பணிப்பாளர் நாயகம் சி.டி. கலுஆராச்சி மற்றும் ceygate Travels (pvt) Ltd சார்பாக நிர்வாக பணிப்பாளர் கே.எஸ்.ஏ.சி. செனரத் ஆரச்சி ஆகியோர் இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவை
மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல் நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது: 2025/12/24 அன்று பி.ப. 03.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை வரை விசேட விரைவு புகையிரதமொன்று பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட புகையிரதம் 2025/12/29 அன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மு.ப. 08.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கு இடையிலானபுகையிரதம் (Intercity) 2025/12/25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. (இந்த புகையிரதம் 09 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.)