Author: Thana
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரருடன் மலையக அரசியல் தலைவர்கள் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தொடர்பான விடயங்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய உதவிகளுக்கும், அவற்றைச் செயல்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதாங்கிய சந்தோஷ் ஜா அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்த விசேட சந்திப்பின் போது, இந்தியாவின் ஒத்துழைப்பை…
“புரட்சிகர மக்கள் சக்தி ” என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது சந்திரசேகரன் மக்கள் முன்னணி. அனுஷா சந்திரசேகரன் தலைமையில் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற கட்சியாகும். நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இன்றுவரை தொடர்ந்து சேவைகளை வழங்கி வந்த இந்த கட்சி இனி புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power) என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பில் பின்வருமாரு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் கட்சியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரன் அவர்களது கொள்கைகளை அரசியல் ரீதியாக கொண்டு செல்லும் நோக்குடனேயே நாம் ஆரம்பித்த புதிய கட்சிக்கு “சந்திரசேகரன் மக்கள் முன்னணி ” என பெயரிட்டிருந்தோம். ஆனாலும் காலப்போக்கில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலும், இன மொழி பேதமின்றி அனைத்து மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஓர் அமைப்பாக நாம் மாறவேண்டிய…
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இந்தியா அறிவிப்பு
டிட்வா (Ditwa) பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மறுசீரமைப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்த நிதி உதவி முக்கிய பங்காற்றும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இரண்டு இடங்களில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்று இரண்டு இடங்களில் பணம் செலுத்த வேண்டிய ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் தடைகள் இன்றுடன் முடிவடையும். கொழும்பில் இருந்து வெளிவட்ட வீதியில் உள்ள கெரவலப்பிட்டி இடைமாறலில் கட்டண அறவீட்டை நிறுத்துவதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிவட்ட வீதியிலிருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் 22/12/2025 முதல் கெரவலப்பிட்டி இடைமாறலில் நிறுத்தாமலும் பணம் செலுத்தாமலும் பயணிக்க முடியும். பத்து வருடங்களாக நிலவும் டிக்கெட் வழங்கும் முறை இந்த இடைமாறல் நிலையத்தில் இரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் போது சீதுவ மற்றும் பேலியகொட இடைமாற்றங்களில் டிக்கெட்டுகளைப் பெற வேண்டும், அதே நேரத்தில் வெளிவட்ட வீதியிலிருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்கள் டிக்கெட்டுகளைப் பெறாமல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நுழையலாம். கெரவலப்பிட்டி இடைமாற்றல் வழியாக வெளியேறும் வாகனங்கள் வெளியேறும் கட்டணத்தைச்…
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும்
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பலாங்கொடை குருந்துவத்த – ஆதாதோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகவும் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடவடிக்கை அறையொன்றை செயற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தல்
தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட நடவடிக்கை அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பண்டிகைக் காலம் முடியும் வரை நடவடிக்கை அறை செயல்படும், அத்துடன் முப்படைகள் மற்றும் பொலிசாரின் நெருக்கமான ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைப்பு மையமாகவும்இது செயல்படும். இந்த மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறையானது, ஏற்படக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு அல்லது அவசரகால சூழ்நிலைகளுக்கும் விரைவான மற்றும் பயனுள்ள பதிலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உரிய நேரத்தில் உடனுக்குடன் தகவல் பகிர்வை வலுப்படுத்தவும், சரியான நேரத்தில் முடிவெடுப்பதை செயல்படுத்தவும், அனைத்து பாதுகாப்பு தரப்பினரிடையே செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் மூலம், பண்டிகைக் காலம் மக்களின் பாதுகாப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்துகிறது. குடிமக்கள் பண்டிகைக் காலத்தை அமைதியாகவும்,…
தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 இன் நிறைவு விழா நேற்று (21 ஆம் திகதி) நடைபெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் இவ்விழா இடம்பெற்றது. 26 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கண்டி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், கொழும்பு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. விளையாட்டு விழாவின் சிறந்த வீராங்கனையாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சயுரி லக்ஷிகா மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரராக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த K.A.D. மல்ஷான் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு யமஹா (YAMAHA) நிறுவனத்தின் அனுசரணையுடன் தலா ஒரு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி…
சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் – தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் – தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் பணிகள் மகத்தானவை சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிக்கிறேன் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை…
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம்…