Author: Thana

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக் கூடும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…

Read More

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகியவை இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பங்களித்துள்ளன. UCPM மனிதாபிமான உதவி விநியோகத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நேற்று (17) ஒரு தொகுதி…

Read More

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Edirisinghe Edible Oil (Pvt) Ltd இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Edirisinghe Edible Oil (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் வினிதா ஜயசிங்க மற்றும் பணிப்பாளர் சுஹான் ஜயசிங்க ஆகியோர் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

பசறை- மடூல்சீமை -மதிகஹதென்ன சாலையில் (19) இன்று காலை ஒரு பாரிய பாறை சரிந்து விழுந்ததால், சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் சாலையில் ஒரு பெரிய பாறை விழுந்துள்ளது, மேலும் தொடர்ந்து பெய்யும் மழையால் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அதை அகற்றுவது கடினமாகிவிட்டது என்று வீதி மேம்பாட்டு அதிகாரசபையின் நிர்வாக பொறியாளர் பதுளை எஸ்.எஸ். ஹென்னாயக்க தெரிவித்தார்.

Read More

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய…

Read More

பன்விலை நிருபர் ம.நவநீதன் கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26.11.2025 ஆம் திகதியன்று கடும் மழை மற்றும் காற்று மண்ரிவினால் நெல்லிமலை பிரதேசத்தில் அமைந்திருந்த பாலம் முற்றாக சேதமடைந்தது. பின்னர் தோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாதை ஒன்றை அமைத்துள்ளனர். 17.12.2025 நேற்றைய தினம் முதல் இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிகமாக பாலமும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லிமலை அரச பெருந்தோட்டம்,சோழங்கந்தை தோட்டம் போன்ற பகுதிகளுக்கான பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லவில்லை மேலும் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் நெல்லிமலை தனியார் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாடசாலையை புறங்கணித்ததால் பாடசாலையின் கல்வி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாலம் இரண்டாவது தடவையும் உடைப்பெடுத்ததால் நெல்லிமலை…

Read More

மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 2.30 மணி வரை அமுலில் இருக்கும். எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)  கண்டி மாவட்டம்: தொலுவ, உடுதும்பற, மெததும்புற நுவரெலியா மாவட்டம்: வலப்பனை,ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட  எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (அம்பர்)  கண்டி மாவட்டம்: கங்கவட்டக் கோறளை, பாதஹேவாஹெட்ட, அக்குறணை, யட்டிநுவர, தும்பனே, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பஸ்பாகே கோறளை, ஹதரலியத்த, குண்டசாலை, உடுநுவர, தெல்தோட்டை, பாததும்புற, பன்வில, உடபலாத, மினிப்பே, கங்க இஹல கோறளை குருநாகல் மாவட்டம்: ரிதிகம நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா

Read More

க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபரால் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டன. முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். இந்நாட்டு ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், ‘ஊழலுக்கு எதிரான குரல்’ அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த…

Read More

நுகர்வோரை சுரண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களுக்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தினால் அண்மையில் (2025.12.16) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை: பிலியந்தல, பொல்கஸ்ஓவிட்ட, போகுந்தர மற்றும் மடபாத ஆகிய பகுதிகளில் உள்ள 4 வர்த்தக நிலையங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், ஒரு நிலையத்திற்கு தலா ரூ. 100,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. குடிநீர் போத்தல்களை (Bottled Water) அதிக விலைக்கு விற்றமை: கெஸ்பேவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அந்நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் (500,000) அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது. பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

Read More