Author: Thana
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார். சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலமானது, 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்)சட்டத்தைத் திருத்துவதை பிரதான நோக்காகக் கொண்டதாகும். இச்சட்டமூலம் 09.10.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அத்துடன், 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2வது வாசகம் திருத்தப்படுகிறது. இதற்கமைய, 2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது, 2025 ஒக்றோபர் 01ஆம் திகதியிலிருந்து குதிரைப் பந்தயப் பணயக்காரர் என்ற தொழிலில் அல்லது சூதாட்டத் தொழிலில்…
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), நேற்று (17 டிசம்பர்) ‘செனெஹச’ கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிரதி அமைச்சரை SERRIC மையத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் உபேந்திர கருணாரத்ன அன்புடன் வரவேற்றார். இந்த உணர்வு பூங்கா, பாதுகாப்பான மற்றும் தொடர்பாடல் அம்சங்களின் மூலம் ஐந்து உணர்வுகளையும் தூண்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் அறிவாற்றல், இயக்கத் திறன் மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய சிகிச்சை கருவியாக செயல்படும். இது முப்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கும் பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. முப்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கு விசேட பராமரிப்பு மற்றும் கல்வி வழங்கும் SERRIC மையத்தில், இலங்கை விமானப்படையினால் புதுப்பிக்கப்பட்ட…
செ.திவாகரன் மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதையொன்று இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் குறித்த கால் பகுதி மீட்கப்பட்டதாகவும், அந்த கால் பகுதியில் மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தார். கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரி…
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது – சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் சீனாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியை எதிர்பார்க்கிறேன் – ஜனாதிபதி டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில்…
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவாறே, 200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பணிப்புறக்கணிப்பானது இன்று (17) மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர் காலங்களில் பெருந்தோட்டங்களில் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இக்காலகட்டத்தில், உணவுப் பற்றாக்குறை, சுகாதார வசதிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கக்கூடும். எனவே, பேரிடர் காலங்களிலும் அதற்கு பின்னரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். இயற்கை அனர்த்தத்தின் பின்னர் பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்; சிலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதார அமைச்சின் அறிக்கைக்கமைய, 2025 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் குழந்தைகளில் 26 சதவீதமானோர் எடைக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நுவரெலியா மாவட்டத்தில் 17.4 சதவீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் எடை குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவ்வனர்த்தம் மேலும் மோசமான நிலையை பெருந்தோட்டங்களில் ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம்…
இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது – இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்திய குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை ரீதியான பங்களிப்பு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழு நாடு திரும்பிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மற்றொரு தொகுதி நிவாரணப் பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவக் குழுவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல வந்த இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 10 டொன் மருந்துகள் மற்றும் 15 டொன் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கு…
மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றைய தினம் (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை…
ஊவபரணகம ஊமா கால்வாயின் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில்.. பதுளை மாவட்டத்தில் உள்ள ஊவபரணகம ஊமா கால்வாய் அணைக்கட்டு நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அணுத்தத்தால் அழிக்கப்பட்டது, அதன் மறுசீரமைப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 1856 இல் ஆரம்பிக்கப்பட்ட ஊமா கால்வாய் திட்டம், மலையகத்தில் மரக்கறி பயிர்ச்செய்கைக்கு 65% பங்களிக்கும் ஒரு நீர்ப்பாசன திட்டமாகும். இந்த திட்டம் சுமார் 17 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தை மறுசீரமைத்து, பெரும் போகத்திற்கு நீர் வழங்கும் மாபெரும் சிரமதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சேதமடைந்த ஊமா கால்வாய் அணைக்கட்டின் மறுசீரமைப்பு பணிகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிராந்திய பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ், இராணுவம், மகா சங்க ரத்நாயக்க, பிராந்திய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட குழுவினரால் கடும் முயற்சியுடன் மேற்கொள்ளப்படுகிறது.