Author: Thana

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, வடிகாலமைப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு, தாக்கம் ஏற்படக் கூடிய மத்திய பிரதேசத்தை (Central Fragile Area) முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டத்தைத் தயாரித்தல், அனைத்து நிறுவனங்களும் அந்தத்…

Read More

சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்த நிலையை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கை மற்றும் அவசர நிலையை தவறாகப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்று போலியாகத் தோற்றமளிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு கணிசமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களை ஏமாற்றும் வகையில்,…

Read More

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பான நீர்க்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை (17) பிற்பகல் 4.00 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 7.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதற்கிடையில், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.

Read More

‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண் அகற்றப்பட்டு வீதி சீரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிக்கு மேலுள்ள மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடத்தில் பணிகள் நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் இவ்வீதியில் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வீதியைத் திருத்தும் பணிகள், இராணுவத்தின் 6 ஆவது பொறியியல் படைப்பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நாவலப்பிட்டி மற்றும் எத்கல பொலிஸ் நிலையங்கள், பஸ்பாகே கோரல பிரதேச சபை உள்ளிட்ட பல தரப்பினரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டன. வீதியைத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். “இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த,…

Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) காலை அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரப்பரீட்சையில் முதலிடம் பெற்ற 361 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த அரசாங்கம் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். மக்களுக்குச் சொந்தமான ஜனாதிபதி நிதியம், மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு…

Read More

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல்…

Read More

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம் மற்றும் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதுடன், இந்த படங்கள் மற்றும் விவரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். சிறுவர்களை சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து 1929 சிறுவர் உதவி இலக்கத்திற்கு (Child Helpline Service) தெரியப்படுத்தவும் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி / சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்கவும். இந்த நேரத்தில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு,…

Read More

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார். இதன்போது அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது. இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர்…

Read More