Author: Thana

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வெளியிடப்பட்ட புதிய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்…

Read More

அவசர அறிவிப்பு. நுவரெலியா – கண்டி வீதியில் மண் சரிவு அபாயம் – பயணிப்பது ஆபத்தானது. நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் (11) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி தெரிவித்துள்ளார். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்ந்து வருகிறது இதனால் பல இடங்களில் மண் மேடு, கற்பாறைகள் சரிந்து விழுவதற்கு அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நுவரெலியா – கண்டி வீதியில் இரவில் குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

நுவரெலியாவில் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை. நுவரெலியா கந்தபளை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு நுவரெலியா கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி சுப்பையா மனோரஞ்சனியை கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 12 ,ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (11) நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீர சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு சிவலிங்கம் ஞானசேகரன் என்ற நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. டி.சந்ரு செ.திவாகரன் 12.12.2025

Read More

கோதுமை மா மற்றும் சீனியைப் பயன்படுத்தி செயற்கையாகத் தேன் தயாரித்த ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தேன் அடங்கிய 30 லீற்றர் கொள்ளளவு கொண்ட 25 பீப்பாய்களையும், 100 லீற்றர் கொள்ளளவு கொண்ட 2 பீப்பாய்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் வீட்டிற்குச் சென்ற சமயத்திலும் அவர் வீட்டில் தேன் தயாரித்துக்கொண்டிருந்துள்ளார். சீனி, கோதுமை மா மற்றும் ஏனைய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி இத்தேன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள…

Read More

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில், மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளையும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

Read More

Shoppes @ City of Dreams காட்சியறை மற்றும் கொழும்பு மோட்டார் கண்காட்சியில் DENZA வாகனங்கள் அறிமுகம் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை சந்தையில் பிரமாண்டமாக நுழைந்த DENZA நிறுவனம், தனது விரிவாக்க நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. BYD குழுமத்தின் ஆடம்பர மாற்று புதிய சக்தி வாகன (NEV) வர்த்தகநாமமான DENZA, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் உள்ள Shoppes வளாகத்தில் தனது முதல்காட்சியறையை திறந்துள்ளது. மேலும், அண்மையில் BMICH இல் நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சி 2025இல் உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த மின்சார வாகன காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு DENZA-வின் D9 மற்றும் உயர்தர சக்திவாய்ந்த SUV வரிசையான B5, B8 வாகனங்களை நவீனமான மற்றும் நேர்த்தியான சூழலில் அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது. இவை அனைத்தும் பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) தொழில்நுட்பத்துடன் வருகின்றன. உயர்தர வசதி மற்றும் மேம்பட்ட செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரிகள், DENZA-வின் அதிநவீன பல்நோக்கு…

Read More

உண்மையான உள்ளடக்கத்தையும், AI உள்ளடக்கத்தையும் அடையாளம் காண TikTok இனால் புதிய அம்சங்கள் அறிமுகம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் குறித்த முழு வெளிப்படைத்தன்மையைஉறுதி செய்யும் வகையில் TikTok புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் AI உள்ளடக்கங்களை எளிதாக கண்டறியலாம், தங்கள் For You பக்கத்தில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் எவ்வளவு காட்டப்பட வேண்டும் என்பதை கட்டுப்படுத்தலாம், மேலும் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாள்வது பற்றிய விழிப்புணர்வும் பெறலாம உலகம் முழுவதும் AI மூலம் தயாரிக்கப்படும் உள்ளடக்கங்கள் வேகமாக பெருகி வரும் இந்த காலகட்டத்தில், படைப்பாற்றலையும் பாதுகாப்பையும் சமநிலையில் வைத்து பயனர்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குவதில் TikTok முன்னணி நிறுவனமாக செயல்பட விரும்புகிறது. இந்த திட்டத்தின் படி, எதிர்வரும் வாரங்களில் TikTok தனது 'Manage Topics' அமைப்புகளில் ஒரு புதிய AI உள்ளடக்க கட்டுப்பாடு வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது பயனர்கள் தங்களுக்கு பிடித்த தலைப்புகளின்…

Read More

இன்று (10) முதல் பிரதான ரயில் மார்க்கத்தில் சில அலுவலக ரயில்களை வழமை போல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையே உள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம் அருகில் அமைந்திருந்த ரயில் பாதையின் மதகு, அருகில் பாயும் மா ஓயா நோக்கித் தள்ளப்பட்டு உடைந்தது. இதனால் ரயில் பாதையின் அடியில் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் உருவாகியிருந்தது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு ரயில் பாதைகளில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தன்னார்வக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன், அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையே புஜ்ஜொமுவ ரயில் பாதையில் இருந்த தடைகள் அகற்றப்பட்டு, இன்று ரயில் பாதை சீரமைக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Read More

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட போதிலும், அந்த இடத்தில் இருந்து எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More