Author: Thana

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்…

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும்…

Read More

தலவத்துகொடையில் உள்ள ஒரு ஆடையக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளதாக லங்காதீபா செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தலங்கம காவல்துறையின் கூற்றுப்படி, திங்கட்கிழமை (டிசம்பர் 8) கடையின் ஆடைமாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபருக்குச் சொந்தமான ஒரு மொபைல் போனை பரிசோதிக்கப்பட்டபோது, ​​அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 வீடியோ கிளிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடை மாற்றும் வீடியோக்கள் மற்றும் ஒரு வீட்டில் குளியலறையில் ஒரு பெண் குளிக்கும் தனி வீடியோ ஆகியவை காட்சிகளில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Read More

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ஹரிணியை சந்தித்து, பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையிலிருந்து ரூ. 250 மில்லியன் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Read More

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்” என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார். இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு…

Read More

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு…

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று, அஸ்கிரி தரப்பின் மகாநாயக அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி அஸ்கிரி மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர், ஜனாதிபதி அஸ்கிரிய தரப்பின் அனுநாயக அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த அனுநாயக தேரரை சந்தித்து, சிறிது நேரம் உரையாடினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025-12-06

Read More

தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி, விவசாயத்தை மீண்டும் ஆரம்பிக்க மிகவும் துல்லியமான தரவுகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும் பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில் அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவது அவசியம் தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய இடத்திற்கு மாற்றுவதற்குமான திட்டத்தை அவசரமாக சமர்ப்பிக்கவும் – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என்றும், எனவே எப்போதும் துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்கு முன்னர், விவசாயத் திணைக்களம் நாட்டில் அரிசி மேலதிகக் கையிருப்பு இருப்பதாக…

Read More

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி…

Read More