Author: Thana
இலங்கையில் சீரற்ற வானிலை ஏற்படுத்திய பாரிய சேதங்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணமும் மீள்கட்டமைப்பும் வழங்குவதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது. இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனை அறிவித்தார். அதன்படி, முழுமையாக சேதமடைந்த ஒவ்வொரு வீட்டுக்கும் புதிய வீடு கட்டுவதற்காக ரூ. 5 மில்லியன் (50 இலட்சம் ரூபா) வழங்கப்படும். காணி இல்லாதவர்கள் அல்லது அதி ஆபத்து பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு காணி வழங்க முடியாத பட்சத்தில் ரூ. 5 மில்லியன் வரை பணமாக வழங்கப்படும். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்ப்பதற்கு அதிகபட்சம் ரூ. 2.5 இலட்சம் (ரூ. 2.5 மில்லியன்) வழங்கப்படும். அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு, உரிமை நிலை பாராது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரூ. 50,000 வழங்கப்படும். அதேபோல், வீட்டை இழந்து நிவாரண முகாம்களில் தங்க முடியாதவர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் ரூ. 25,000 வாடகை உதவித்தொகை வழங்கப்படும். தேவைக்கேற்ப 6…
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கையில் வெள்ளப் பேரிடர் காலத்தில் தவறான தகவல்களை தடுக்க TikTok இன் புதிய வழிகாட்டி அறிமுகம்
கொழும்பு, 01 டிசம்பர் 2025 – தித்வா புயலால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் போது, இலங்கை மக்கள் நம்பகமான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற உதவும் வகையில் TikTok புதிய தேடல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தவறான தகவல் பரவுவதைத் தடுத்து, உண்மையான விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான TikTok-இன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த வழிகாட்டி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும். TikTok-இல் வெள்ளம் பற்றிய செய்திகளைத் தேடும் இலங்கை பயனர்களுக்கு, நம்பகமான இடங்களில்இருந்து தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்கும் முக்கிய அறிவிப்பு காட்டப்படும். இந்த வழிகாட்டி, பயனர்களை நேரடியாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) இணைக்கிறது. அங்கிருந்து இயற்கைப் பேரிடர்கள் குறித்த சரியான தகவல்களைப் பெறலாம். மேலும், TikTok-இன்பாதுகாப்பு நிலைய ஆதாரங்களையும், துயரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்கும் துயர நிகழ்வு ஆதரவு வழிகாட்டிக்கான நேரடி இணைப்பையும் இது வழங்குகிறது. இயற்கைப் பேரிடர்கள் முதல்…
Eco Spindles மற்றும் Green Earth குழுமம் “Green Wheels” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன இலங்கை முழுவதும் பிளாஸ்டிக் சேகரிப்பில் புரட்சியை ஏற்படுத்தவும், அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. BPPL ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமை நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், கிரீன் எர்த் குழுமம் N.V உடன் இணைந்து அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கிரீன் வீல்ஸ் பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி, இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிலைபேறாண்மை, மறுசுழற்சி துறையின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். தேசிய பிளாஸ்டிக் கழிவுப் பட்டியல் 2024-ன்படி, இலங்கையில் ஆண்டுதோறும் 249,037 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன, ஆனால் அதில் வெறும் 11% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பாரிய இடைவெளியை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிரீன் வீல்ஸ் திட்டம், கிராமப்புற, நகர்ப்புற மற்றும் குறைந்த சேவை கிடைக்கும் பகுதிகளிலிருந்து நேரடியாக…
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரலய, பஸ்பாகே கோரலய, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தொட்ட, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கேகாலை மாவட்டத்தின் வரகாபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, புளத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த,…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அதேநேரம் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
*ஹட்டன் – தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்*
(க.கிஷாந்தன்) தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (03.12.2025) அப்பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஹட்டன் TVTC தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து அவர்களது குடும்பங்கள் அனர்த்தத்தால் எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களின் குடும்பத்தினருக்கான அவசர நிவாரணங்கள் தாமதமின்றி வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் அங்கு இருந்தபோதே தொலைபேசியில் கலந்துரையாடி உடனடி தீர்வுகளை அறிவுறுத்தினார். அதனுடன், கற்கைநெறி விருத்தி, தரநிலைகள் உயர்த்தல் மற்றும் மாணவர் உள்ளீர்ப்பு அதிகரிப்பு தொடர்பான விவகாரங்களும் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன. பின்னர் தலவாக்கலை–வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டப்பகுதிக்குச் செல்லும்…
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: “அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் பரவும் கடுமையான ஆபத்து நிலவுகிறது. அதேபோல், தொற்று அல்லாத நோய்களிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளின் சிகிச்சை நிலைமைகள் தற்போது குழப்பமான நிலையை அடைந்துள்ளன. அவர்களின் மருந்துகள்…