Author: Thana
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன. வீதிப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுக்களும் கள உத்தியோகத்தர்களும் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில்…
(க.கிஷாந்தன்) சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 6,959 குடும்பங்களைச் சேர்ந்த 24,681 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,934 குடும்பங்களைச் சேர்ந்த 11,453 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 123 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியவரை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியவரை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்.
(க.கிஷாந்தன்) சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப்…
ஹட்டன் டிக்கோயா பகுதியில் எரிவாயு சிலிண்டர் விற்பனை வியாபாரி ஒருவர் மக்களுக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யாமல் பதுக்கியுள்ளார்.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் எரிவாயு சிலிண்டர் விற்பனை வியாபாரி ஒருவர் மக்களுக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யாமல் பதுக்கியுள்ளார். கோபமடைந்த மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிட்டால் அதிகாரிகள் கடைக்குள் புகுந்து பரிசோதனை நடத்தி பதுக்கிய சிலிண்டர்களை மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த விடயம் டிக்கோயா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் – 75 பேர் பலி – 62 பேர் மாயம் – 2691 குடும்பங்கள் பாதிப்பு
(க.கிஷாந்தன்) சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691 குடும்பங்களை சேர்ந்த 12304 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களை சேர்ந்த 8654 பேர் பாதுகாப்பான 61 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கி வருவதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்த மண்மேடுகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார். ஹட்டன், வட்டவளை, தியகல மற்றும் களுகல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மண்மேடுகள் சரிந்துள்ளன. தற்போது, ஒரு வழித்தடத்தைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள், தனியார் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட பாரிய பெக்கோ இயந்திரங்கள் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், குறித்த வீதியில் மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன் ஊடாக இந்நாடு தொடர்பாக சர்வதேச அளவில் கிடைக்கும் விளம்பரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இணைந்து நடத்தவுள்ள 2026 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, குறித்த போட்டிகளை மிகவும் சிறப்பாக இந்நாட்டில் நடத்துவது தொடர்பிலும் இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இந்தப்…
சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம் • “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” 29 ஆம் திகதி • “கடற்படை பங்களிப்புடனான சிரமதான நடவடிக்கை” டிசம்பர் 13 – 14 சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி, குறித்த சூழல் கட்டமைப்பை பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இலங்கை இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த “சிறப்பு நடவடிக்கை” நவம்பர் 29 வரை நடைபெறும். இந்த வேலைத்திட்டத்தின் முதல்…