Author: Thana
திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு உலகின் எந்த நாட்டுத் திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், எனவே, உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதே வேளையில், வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். தொழில்துறையாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார். குறிப்பாக பெறுமதி சேர் வரி (VAT) செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் தொழில்துறையை விரிவுபடுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர். 2025 ஆம் ஆண்டில்…
பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காரில் மோதி தெருநாய் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் ராஜிந்திர ஜெயசூர்ய, புதன்கிழமை (26) அன்று உத்தரவிட்டுள்ளார். பன்னிப்பிட்டிய வித்யால சந்திப்பில் உள்ள அலுபோகஹவத்த சந்து அருகே வசித்து வந்த இறந்த தெருநாய், சந்தேக நபரான அப்பெண், நவம்பர் 14 ஆம் திகதியன்று ஓட்டிச் சென்ற காரில் மோதி இறந்துள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் விலங்கு உரிமை அமைப்புகள் கொட்டாவ காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெருநாய் மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை என்று கூறினர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண், பன்னிப்பிட்டிய, கொட்டாவ, தெல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த இஷானி சில்வா ஆவார்.
இன்று (26) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை நானுஓயா வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயில் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் இயக்கப்படவுள்ளன.
இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர். கடல் வழியாக பொருட்களை கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பாதைகளில் கடற்படை தொடர்ந்து ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு அதிரடி படை தலைமையகத்தினால் 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்திய சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகைக் கவனித்து சோதனை செய்தனர். அந்த நேரத்தில், பதின்மூன்று (13) பைகளில் பொதிசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன், டிங்கி படகுகொன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் (01) டிங்கி படகு…
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும்…
நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தல் மற்றும் கருத்துகள், பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.…
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத் திட்டம் குறித்து தெரிவித்ததாவது, பேருந்து கட்டணத்தை செலுத்திய பின்னர், நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்காமை பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்குத் தீர்வாகவே வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பேருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைக்க முடியும். மேற்குறிப்பிட்ட காரணங்களினால், வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித்தருமாறு மக்களிடமிருந்து அதிகளவான கோரிக்கைகள் வந்தன. டிஜிட்டல் பொருளாதாரத்தில்…
இலங்கையின் பிரதேச செயலாளர்கள் இன்று கொழும்புக்கு வருகை 2026 அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ‘சமூக சக்தி’ கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து விளக்கமளிக்க, இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலின் போது, கிராமிய வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான சமூக சக்தி செயற்திட்டத்தை கீழ் மட்டத்தில் செயல்படுத்துவது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட உள்ளது. மேலும், அரச சேவை மறுசீரமைப்பின் அவசியம், அபிவிருத்தி தொடர்பில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், சமூக சக்தி செயற்திட்டத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தளங்களை அறிமுகப்படுத்தல், டிஜிட்டல் பொருளாதார செயற்திட்டத்தில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கு பிரதேச செயலாளர்களின் தீவிர பங்கேற்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.